கூலியை மிரள வைத்த பராசக்தி ட்ரெய்லர்.. சிவகார்த்திகேயனுக்கு எகிறும் மவுசு.. ரிப்போர்ட்டை பாருங்க!
சென்னை: தமிழ் சினிமாவில் பொங்கல் திருவிழா நெருங்கி வரும் நிலையில், வெளியாகும் ஒவ்வொரு ட்ரெய்லரும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் விவாதங்களையும் உருவாக்கி வருகிறது. அந்த வகையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கியுள்ள "பராசக்தி" திரைப்படத்தின் ட்ரெய்லர், வெளியான சில மணி நேரங்களிலேயே யூடியூபில் 29 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
இந்த சாதனை, முன்னதாக வெளியான ரஜினிகாந்த் நடித்த "கூலி" திரைப்பட ட்ரெய்லரின் பார்வை எண்ணிக்கையுடன் ஒப்பிடப்பட்டு, தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கூலி vs பராசக்தி
ரஜினிகாந்த் நடித்த "கூலி" ட்ரெய்லர்", 5 மாதங்களுக்கு முன் வெளியானது. தற்போது வரை 28 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. அதே நேரத்தில், "பராசக்தி" ட்ரெய்லர், வெளியான 20 மணி நேரங்களுக்குள் 29 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த வேகமான வளர்ச்சியே "கூலியை மிரள வைத்த பராசக்தி ட்ரெய்லர்" என்ற தலைப்பை உருவாக்கியுள்ளது.
பராசக்தி ட்ரெய்லர்
பராசக்தி ட்ரெய்லரில், இந்தி திணிப்புக்கு எதிரான கருத்துகள், மாணவர் அரசியல், மொழி - அடையாளம் - உரிமை போன்ற விஷயங்கள் தெளிவாகவும் நேரடியாகவும் முன்வைக்கப்பட்டுள்ளன.
"டெல்லிதான் இந்தியாவா?", "எங்களுக்கு எதிரி இந்தி திணிப்பு தான், இந்தி மொழி பேசும் மக்கள் இல்லை", என் செந்தமிழை காக்க பெரும் சேனை உண்டு போன்ற வசனங்கள் ட்ரெய்லரில் இடம்பெற்று, ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகார்த்திகேயனின் புதிய பரிமாணம்
இதுவரை குடும்ப ரசிகர்களின் ஹீரோவாக பார்க்கப்பட்ட சிவகார்த்திகேயன், இந்த படத்தில் முழுமையான அரசியல் - போராட்டம் நிறைந்த கதாபாத்திரத்தில் தோன்றுவது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், அதர்வா வில்லன் வேடத்தில் ரவி மோகன் தமிழில் முதல் முறையாக ஸ்ரீலீலா என பலரும் ட்ரெய்லரில் கவனம் ஈர்த்துள்ளனர்.
கூலி ரசிகர்களின் கருத்து
ரஜினிகாந்த் நடித்த கூலி ட்ரெய்லர் வெளியான போது, ஸ்டைலிஷ் மேக்கிங் மாஸ் பிரசென்ஸ, ரஜினியின் லுக் ஆகியவை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் தற்போது பராசக்தி ட்ரெய்லரின் வேகமான பார்வை எண்ணிக்கை, ரஜினி ரசிகர்களிடையே கூட ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிலர், "இது வியூஸ் எண்ணிக்கை மட்டும்தான் அதற்கு காரணம் கூட விஜய் ரசிகர்கள் தான் என்று உருட்டி வருகின்றனர். காரணம் விஜய் ரசிகர்கள் பராசக்தி ட்ரெய்லரில் என்ன இருக்கு? அதை வைத்து கலாய்க்கலாம் என்று மீண்டும் மீண்டும் பார்த்து வருவதாலயே இந்த ட்ரெய்லருக்கு மவுசு அதிகரிக்கிறது என்ற கருத்தும் இருக்கிறது.
சமூக வலைதளங்களில் தீவிர விவாதம்
ட்விட்டர் (X), இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற தளங்களில், #ParasakthiTrailer, #CoolieTrailer, #SKvsRajini என்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. ஒரு பக்கம் ஜனநாயகன் vs பராசக்தி என்று போட்டி இருக்கும் நிலையில் இப்போது பராசக்தி vs கூலி என்ற போட்டியும் உருவாகி இருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications