Mr. விஜய் எனக்கு யார்... திரிஷாவுக்கு வாழ்த்துக்கள் சொல்கிறேன்! ஆனால், பார்த்திபன் வெளியிட்ட புது வீடியோ
சென்னை: நடிகை திரிஷா குறித்து நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் பேசிய கருத்துகள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகின்றன. அதற்கு பதிலடி அளித்த திரிஷா பதிவு செய்திருந்த நிலையில், அதற்கும் மீண்டும் பதிலளிக்கும் வகையில் பார்த்திபன் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருவது ரசிகர்களிடையே பரபரப்பை கிளப்பியுள்ளது.

பார்த்திபன் பேச்சு - தொடங்கிய சர்ச்சை
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது பார்த்திபன், நடிகை திரிஷா குறித்து சில கருத்துகளை தெரிவித்திருந்தார். அந்த பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனால் திரிஷா ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த பேச்சு குறித்து திரிஷாவும் தனது சமூக வலைதளத்தில் மறைமுகமாக பதிலடி கொடுத்திருந்தார். அந்த பதிவும் இணையத்தில் வேகமாக பரவி, இந்த விவகாரம் மேலும் பேசப்படத் தொடங்கியது.
மீண்டும் வீடியோ வெளியிட்ட பார்த்திபன்
இந்த சூழ்நிலையில் நேற்று பார்த்திபன் ஒரு வீடியோ வெளியிட்டு, இந்த விவகாரம் குறித்து தனது விளக்கத்தை கூறினார். அந்த வீடியோவின் முடிவில் "தொடரும்" என்று குறிப்பிட்டு விட்டிருந்ததால், இதற்கு இன்னும் தொடர்ச்சி இருக்குமா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
அதைத் தொடர்ந்து இன்று பார்த்திபன் தனது சமூக வலைதள பக்கத்தில் நடிகர் விஜய் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ஒரு புதிய பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: "ஒரே வீடியோவில் பதிவானதை நீளம் கருதி இரண்டாகப் பகிர்கிறேன் - மற்றெதையும் இரண்டாக்க அல்ல. என் பக்க விளக்கத்தை சொல்கையில் பக்க விளைவுகளும் அநாகரிகமாக அரங்கேறும் என்பதை அறிந்தும் (already started). ஆனால் இதைப்பற்றி இனி நான் பேசப்போவதில்லை. இதோடு முடித்துக் கொள்வதே நமக்கு நல்லது. நன்றி!" என்று குறிப்பிட்டுள்ளார்.
ப்ரோமோ வீடியோவில் சொன்ன வார்த்தைகள்
இந்த பதிவுடன் பார்த்திபன் ஒரு குறும்பட வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அவர், "இவ்வளவு பிரச்சனைகளுக்கும் கசப்பான அனுபவங்களுக்கும் பிறகும் திரிஷாவுக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள். விஜய் அவர்களின் வளர்ச்சி ஒரு அபாரமான வளர்ச்சி. கொஞ்சம் அமைதியாக யோசித்துப் பார்த்தால் மிஸ்டர் விஜய் கூட இதைப் பற்றி யோசித்து இருப்பார். எனக்கு மிஸ்டர் விஜய் யார்... விஜய் சார் கிட்ட சொல்லுங்க சார்... விஜய் சார் கிட்ட சொல்லுங்க சார்... என்று என்கிட்ட சிலர்..." என்று பாதி பாதியாக பேசியிருக்கிறார்.
அந்த வீடியோவின் கடைசியில் "கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்கிறது..." என்று குறிப்பிட்டு முடித்திருப்பதும் ரசிகர்களிடையே மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடருமா இந்த விவகாரம்?
ஒரு பக்கம் பார்த்திபன் "இதோடு முடித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டாலும், வீடியோவின் முடிவில் "கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்கிறது" என்று குறிப்பிட்டிருப்பது ரசிகர்களுக்கு புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதனால் இந்த விவகாரம் உண்மையிலேயே இங்கே முடிவடைகிறதா அல்லது இதற்கு இன்னும் தொடர்ச்சி இருக்கிறதா என்ற ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. சமூக வலைதளங்களிலும் இதை பற்றிய விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
-
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி!












Click it and Unblock the Notifications