KH & RK Promo: ரஜினி & கமல் படத்தின் புரோமோ.. கோலிவுட்டையே குலுக்கியது! நெல்சன் செய்த செம சம்பவம்
சென்னை: தமிழ் திரையுலகின் இரண்டு சிகரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் மீண்டும் ஒரே படத்தில் இணைகிறார்கள் என்ற செய்தியே ரசிகர்களுக்கு திருவிழாவாக இருந்த நிலையில், அந்தப் படத்தின் புரோமோ வெளியாகி இணையத்தையே சூடேற்றியுள்ளது. இந்த பிரம்மாண்ட கூட்டணியை நெல்சன் திலீப்குமார் இயக்க, ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கிறது. இசையமைப்பாளராக அனிருத் இணைந்திருப்பது எதிர்பார்ப்பை இன்னும் உயர்த்தியுள்ளது.

குருநாதர் தொடங்கிய நட்பு
இருவரையும் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் கே பாலச்சந்தர். ஆரம்ப காலத்தில் பல படங்களில் இணைந்து நடித்த இவர்கள், பின்னர் தங்களுக்குள் எடுத்த முடிவால் தனித்தனியாக பயணம் செய்தனர். அந்த முடிவிற்கு பிறகு கிட்டத்தட்ட 47 ஆண்டுகள் ஒரே படத்தில் கூட நடிக்காத இந்த இரு புராண நட்சத்திரங்கள் மீண்டும் இணைவது இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

புரோமோ - ஸ்டைல், க்ளாஸ்
சுமார் 3 நிமிடம் 46 விநாடிகள் ஓடும் புரோமோ முழுக்க முழுக்க நெல்சன் ஸ்டைலில் காமெடி டச், ஸ்டைலிஷ் மேக்கிங், மெகா பிரெசென்ஸ் ஆகியவற்றால் நிரம்பியுள்ளது. நெல்சன் யாரை முதலில் சந்திப்பது என குழம்பும் சீன், அப்போது அனிருத் "எதாச்சும் ஒரு விரலை தொடுங்க" என சொல்லும் மொமெண்ட், கமலும் ரஜினியும் ஒருவருக்கொருவர் எடுத்ததை மாற்றிக் கொள்வது, இருவரும் ஸ்டைலாக நடந்து வந்து காரில் ஏறும் காட்சி.. "யாரு ஹீரோ?" என்று கமல் கேட்க, "கேக்குறாங்கள்ல சொல்லுங்க ஜீ" என்று ரஜினி சொல்லும் மாஸ் டயலாக் இவையெல்லாம் ரசிகர்களுக்கு goosebumps தரும் வகையில் அமைந்துள்ளது.
நெல்சன் பதில் சொல்லும் முன்பே கமல் காரை ஸ்டார்ட் செய்து கிளம்பும் ட்விஸ்ட் - இது புரோமோ மட்டுமே என்றால் படம் எப்படி இருக்கும் என்ற கேள்வியை எழுப்புகிறது.

ஆக்ஷன் மட்டும் இல்ல - எண்டர்டெயின்மென்ட் பக்கா
முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக அல்லாமல், காமெடி + ஸ்டைல் + கேரக்டர் மோதல் ஆகியவற்றை கலந்த கதை என்பதால்தான் இந்த கூட்டணி நெல்சனை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. இது ரசிகர்களுக்கு content driven mega entertainer கிடைக்கப்போகிறது என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
1000 கோடி கனவுக்கு உயிர் ஊட்டும் படம்
தமிழில் ஆயிரம் கோடி வசூல் செய்யும் படம் எப்போது வரும் என்ற கேள்வி நீண்ட நாட்களாக இருந்த நிலையில், இந்த படம் அந்த சாதனையை நிகழ்த்தும் என்று கோலிவுட் வட்டாரங்கள் நம்புகின்றன. பான் இந்தியா அளவில் உருவாகும் இந்த திரைப்படம், தமிழ் சினிமாவின் மார்க்கெட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிஸியான சூப்பர் ஸ்டார்கள்
ரஜினிகாந்த் - ஜெயிலர் 2, மற்றும் தலைவர் 173 படமும் கமல்ஹாசன் - கல்கி 2, இந்தியன் 3 மற்றும் அன்பறிவு இயக்கும் படம் என இவ்வளவு பிஸியான ஷெட்யூலில் இந்த இரண்டு பேரும் சேர்ந்து நடிக்க முடிவு செய்திருப்பது, இந்தப் படத்தின் முக்கியத்துவத்தை காட்டுகிறது.
ரசிகர்கள் ரியாக்ஷன்
புரோமோ வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. "நீண்ட வருட ஏக்கம் தீர்ந்துவிட்டது", "கன்ஃபார்ம் மெகா ப்ளாக்பஸ்டர்", "இந்தியா முழுக்க பேசப்படும் படம்" என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மொத்தத்தில் - இது ஒரு சாதாரண படம் இல்லை. இது இரண்டு காலத்தையும் ஆட்சி செய்த நடிகர்களின் திரை விழா. தமிழ் சினிமாவின் பெருமையை உலகுக்கு மீண்டும் காட்டப் போகும் மெகா நிகழ்வு. நிச்சயம் இந்த கூட்டணி பாக்ஸ் ஆபிஸில் மட்டுமல்ல, வரலாற்றிலும் புதிய அத்தியாயம் எழுதும் என்று சொல்லலாம்.












Click it and Unblock the Notifications