நான் நினைத்தது ஒன்று, ஆனால் நடந்தது வேறு.. இந்த அவமானம் மறக்க முடியாது! நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனக்கு நடந்த அவமானம் தன் சிந்தனைகளை எப்படி மாற்றியது என்பது பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார். அது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
ரஜினிகாந்த் சமீபத்தில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தலைமையிலான நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, நான் முதல் முதலாக இவருடைய ஆசிரமத்துக்கு வரும்போது இரண்டு நாட்கள் மட்டுமே தங்க வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டு வந்தேன். ஆனால் அங்கே 15 நாட்கள் இருந்தேன். காரணம் அந்த ஆசிரமத்தில் அமைப்பு அப்படி இருந்தது.

நடிகர் ரஜினிகாந்த்
அந்த ஆசிரமத்தில் மிகப்பெரிய ஏரி இருந்தது. அங்கே குதிரைகளும் இருந்தது. அதில் ஒரு குதிரையின் பெயர் ரஜினி. அதுபோல அந்த இடத்தில் நூற்றுக்கணக்கான மாடுகள் இருந்தது... பார்ப்பதற்கே மிகவும் ரம்பியுமான மன அமைதிக்கு ஏற்ற வகையில் இருந்தது. இப்படி இருக்கும்போது ஒரு நாள் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் என்னை கூப்பிட்ட நாளை பக்தர்களை சந்திக்கிறேன் நீங்களும் என்னுடன் வாருங்கள் என்று கூப்பிட்டார்.
அதற்கு முதலில் நான் வேண்டாம் என்று நினைத்தேன். காரணம் என்னை பார்த்தால் பக்தர்கள் என்னுடன் போட்டோ எடுத்துக்கொள்ள ஆசைப்படுவார்கள், ஆட்டோகிராப் கேட்பார்கள் அதனால் அங்கு தேவையில்லாத சலசலப்பு ஏற்படும் என்று நினைத்தேன். ஆனால் குரு தேவ் என்னை கட்டாயம் வரவேண்டும் என்று சொல்லிவிட்டார். இதனால் நான் சரி போய் ஆட்டோகிராப் மட்டும் போடுவோம் என்று எண்ணத்தில் தான் சென்றேன்.
ஆனால் அங்கே போய் பார்த்தால் அங்கே இருந்த ஒருவர் கூட என்னை எட்டிப் பார்க்கவே இல்லை. இன்னும் சொல்லனும் என்றால், என்னை பார்த்தவர்கள் கூட என்னிடத்தில் வந்து எதுவும் கேட்கவில்லை. அப்போதுதான் எனக்கு சினிமா கொடுக்கும் பிரபலத்தை விட ஆன்மீகம் கொடுக்கும் சக்தி தான் பெரியது என்று எனக்கு புரிந்தது என்று பேசி இருக்கிறார். இந்த அனுபவம் தான் அவருடைய வாழ்க்கையை பார்வையை மாற்றியதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
ஆன்மீக அரசியல்
இந்த ஒரு அனுபவம் தான் அவருடைய வாழ்க்கை பார்வையை மாற்றியதாகவும் அவர் கூறியிருக்கிறார். அதனால்தான் அவர் அரசியல் வருகையை அறிவித்தபோது கூட "ஆன்மீக அரசியல்" என்ற வார்த்தையை பயன்படுத்தினார். மனிதன் உள்ளிருந்து மாறினால் தான் சமூகமும் மாறும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்ததால்தான் அந்த அணுகுமுறை வந்தது என்று பலர் கூறுகின்றனர்.
ரஜினிகாந்தின் வாழ்க்கையை பார்க்கும்போது, ஒரு சாதாரண பஸ் கண்டக்டராக இருந்து இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தது வரை அவர் கடந்த பாதை மிகவும் சுவாரஸ்யமானது. 'அபூர்வ ராகங்கள்' படத்தின் மூலம் அறிமுகமான அவர், வில்லன் கதாபாத்திரங்களில் தொடங்கி, பின்னர் ஹீரோவாக மாறி, தனது தனித்துவமான ஸ்டைல், டயலாக் டெலிவரி மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தார். 'முத்து', 'படையப்பா', 'சிவாஜி', 'எந்திரன்' போன்ற படங்கள் அவரது கரியரை மேலும் உயர்த்தின.
இன்று கூட அவர் நடிக்கும் ஒவ்வொரு படமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் அந்த அளவுக்கு புகழ் இருந்தும், சாதாரண வாழ்க்கை முறை, ஆன்மீகத்தில் உள்ள ஈடுபாடு, அடிக்கடி ஹிமாலயா போன்ற இடங்களுக்கு செல்லும் பழக்கம் - இவை எல்லாம் அவரை மற்றவர்களிலிருந்து வேறுபடுத்துகிறது.
சினிமா அளித்த புகழை விட, வாழ்க்கையை அமைதியாக வாழ கற்றுக் கொடுத்தது ஆன்மீகம் தான் என்று ரஜினிகாந்த் கூறிய இந்த பேச்சு, தற்போது ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும், "இதுதான் ரஜினி... அதனால் தான் இன்னும் உச்சத்தில் இருக்கிறார்" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.














Click it and Unblock the Notifications