Rajinikanth: வாழ்த்து சொன்னவர்களுக்கு நன்றி தெரிவித்த ரஜினி! ஆனால் அந்த பதிவில் இதை கவனிச்சீங்களா?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நேற்று டிசம்பர் 12ஆம் தேதி பிறந்தநாள் என்பதால் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். அவர் தன்னுடைய பிறந்தநாளை சூட்டிங் ஸ்பாட்டில் வைத்து எளிமையாக கொண்டாடி இருந்தார். அவருடைய போயஸ் கார்டன் வீட்டு முன்பு அவரை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் காத்திருந்தனர் . பிரதமர் முதல் முதலமைச்சர் வரை பல பிரபலங்களும் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் இன்று ரஜினிகாந்த் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார்.
ரஜினிகாந்த் தன்னுடைய 75வது பிறந்த நாளை நேற்று கொண்டாடி இருந்தார். சோசியல் மீடியா முழுவதும் ரஜினிகாந்துக்கு தான் வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருந்தது. சினிமா பிரபலங்கள் பலரும் ரஜினிகாந்துடன் எடுத்த புகைப்படங்கள் மற்றும் அவருடைய நினைவுகள் பலவற்றையும் பகிர்ந்து வந்தனர். தொலைக்காட்சியில் ரஜினிகாந்த் படமே முழுக்க ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.

உலகம் முழுவதும் அதிகமான ரசிகர்களைக் கொண்ட ரஜினிகாந்த், முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பிரதமர் உட்பட அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்த நிலையில் தன்னுடைய பதிவில் ரஜினிகாந்த் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

அந்த பதிவில்," என்னுடைய பிறந்தநாளில் வாழ்த்து தெரிவித்த அருமை நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி திரு கே பழனிச்சாமி அவர்களுக்கும், அனைத்து அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் திரையுலக நண்பர்கள், ஊடக துறையினர் மற்றும் என்னை வாழவைக்கும் தெய்வங்கள் ஆன அனைத்து ரசிக பெருமக்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். இந்த பதிவை பார்த்ததும் பிரதமரை ரஜினிகாந்த் மிஸ் பண்ணி விட்டாரே என்று சிலர் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் ரஜினி பிறந்தநாளில் இன்னொரு விஷயமும் பூதாகரமாக வெடித்துக் கொண்டிருக்கிறது. அதாவது ரஜினி மற்றும் விஜய் இருவருக்கும் இடையே ஏற்கனவே பிரச்சனை இருக்கிறது என்று ஒரு பேச்சு வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று ரஜினியின் பிறந்தநாளுக்கு விஜய் வாழ்த்து சொல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜய் வாழ்த்து சொல்லவில்லை என்பதும் விமர்சனங்களை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications