“புன்னகைப் பூவே’ ஹீரோயின் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? ஆளே அடையாளம் தெரியலையே!
சென்னை: ஒரு காலத்தில் தமிழ் ரசிகர்களின் மனதில் காதல் ஹீரோயினாக இடம் பிடித்தவர் தான் ரேகா வேதவியாஸ் (Rekha Vedavyas). புன்னகைப் பூவே படம் மூலம் அறிமுகமான அவர், முதல் படத்திலேயே அழகும், நயமும் கலந்து இருந்த நடிப்பால் கவனம் ஈர்த்தார். அதிலும் யுவன் சங்கர் ராஜா இசையில் வந்த "ஒரு பூங்கிளி முத்தம் வைத்து..." - "வானம் தூவும் பூமழையே..." போன்ற பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் ஹிட்ஸ்.
ஒரு படம்... இரண்டு பாடல்கள்... ஒரு இனிமையான முகம்... அதுதான் ரேகா வேதவியாஸ் தமிழ் ரசிகர்களின் நினைவில் நிற்க காரணம். புன்னகைப் பூவே படத்தில் மெதுவாக சிரித்த அந்த முகம், காதல் பாடல்களில் தோன்றிய அந்த க்யூட்டான அழகு - இன்றும் டிவியில் அந்த பாடல்கள் வந்தால் சேனல் மாற்றாமல் பார்க்க வைத்துவிடும்.

யுவன் இசையில் வந்த "வானம் தூவும் பூமழையே..." பாடல்களோடு ரேகாவின் முகமும் சேர்ந்து ஒரு காலத்தை நினைவூட்டும். பெரிய ஹிட் ஹீரோயினாக தமிழில் வளர வாய்ப்பு இருந்தும், ஏதோ ஒரு இடத்தில் அந்த பயணம் நின்றுபோனது. ஆனால் கன்னடத்தில் அவர் முன்னணி நடிகையாக உயர்ந்தது பலருக்கும் தெரிந்த விஷயம்.
தமிழில் சில படங்களில் மட்டும் வந்து, காணாமல் போன ரேகா பல வருடங்களுக்கு பிறகு சமீபத்திய புகைப்படங்களில் மீண்டும் வந்திருக்கிறார். அந்த லேட்டஸ்ட் லுக்கை பார்த்த ரசிகர்கள் "இது நம்ம புன்னகைப் பூவே ஹீரோயினா?" "எவ்வளவு மாறிட்டாங்க..." ஆனா அந்த சிரிப்பு இன்னும் அதே மாதிரி தான்..." என்று உருகிப் போகிறார்கள்.

காலம் மனிதர்களை மாற்றிவிடும்... ஆனால் சில முகங்கள் மட்டும் நம்ம நினைவுகளில் மாறது. ரேகா வேதவியாஸ் அப்படிப்பட்டவர். தமிழில் அதிகம் நடிக்கவில்லை என்றாலும், ரசிகர்களின் 'பேவரிட் லிஸ்ட்'ல இருந்து அவர் பெயர் எப்போதும் நீங்கவில்லை.
இப்போது மீண்டும் சில புதிய படங்களில் அவர் பிஸியாக இருப்பதாக வரும் தகவல்கள் வருகின்றது, "மீண்டும் தமிழில் வருவாரா?" என்ற ஒரு இனிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

ஒரு காலத்தில் காதல் பாடல்களில் மலர்ந்த அந்த முகம்... இன்று நினைவுகளாக திரும்பி வந்து மனசை வருடுகிறது. தமிழ் சினிமா தவறவிட்டாலும், ரசிகர்கள் மறக்காத ஹீரோயின் - ரேகா வேதவியாஸ். இப்போது வைரலாகும் அவரது புதிய தோற்றம், "மீண்டும் தமிழ் திரையில் பார்க்கணும்" என்ற பழைய ரசிகர்களின் ஆசையை மீண்டும் தூண்டி வைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications