செல்வராகவனுக்கு வந்த மனச்சோர்வு.. 3 குழந்தைகளுக்காக கீதாஞ்சலி தம்பதி இணைவார்களா?
சென்னை: செல்வராகவன் ஒரு மிகச்சிறந்த திறமையாளர். சிறந்த அறிவாளி.. திறமையான இயக்குனர் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் தனது பிடிவாதமான குணம் மற்றும் மற்றவர்கள் புரிந்து கொள்ள முடியாத செயல்பாடுகளால் தனது திரைவாழ்க்கையையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் அவரே சிக்கலாக்கிக் கொண்டுள்ளதாக சினிமா விமர்சகர் வெங்கடேசன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கீதாஞ்சலி முதன்முதலில் செல்வராகவனிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தார். அப்போதுதான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

சோனியா அகர்வால்
சோனியா அகர்வாலை விவாகரத்து செய்தபிறகு, 2011-ல் செல்வராகவன் கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
செல்வராகவன் மற்றும் கீதாஞ்சலி இருவரும் தற்போது ஒன்றாக இல்லை..,. அதேசமயம், அவர்கள் பிரியப் போகிறார்களா என்பது தெரியவில்லை. அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இல்லை.. ஆனால் குழந்தைகளுக்காக இவர்கள் இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.
கீதாஞ்சலி செல்வராகவன்
செல்வராகவன் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் "தனிமை பிடிக்கும்", வெளிச்சம் பிடிக்காது என்பது போன்ற தத்துவப் பதிவுகளை பதிவிட்டு வருகிறார். இன்று செல்வராகவன் சரியாக இருக்கிறார், எந்த கெட்டப்பழக்கமும் இன்று அவரிடம் இல்லை. ஆனால் கடந்த காலங்களில் நிறைய பிரச்சனையில் சிக்கினார்..
ஆரம்பத்தில் செல்வராகவன் சரியான நேரத்தில் ஷூட்டிங் வராமல் போய், தயாரிப்பாளர்களை தவிக்கவிட்டபோது, சோனியா அகர்வால் இருவருமே களத்தில் இறங்கி நின்றுபோன ஷூட்டிங்கை சரி செய்தார்.. அதேபோலவே 'மாலை நேரத்து மயக்கம்' படத்தின் இயக்கப் பொறுப்பை ஏற்று அதை முடித்துக் கொடுத்தது கீதாஞ்சலிதான்..
3 குழந்தைகள்
எனினும் செல்வராகவன் கீதாஞ்சலி தம்பதிக்குள் கருத்து மோதல்கள் அதிகரித்தது.. கீதாஞ்சலி சமீப காலமாக தன்னுடைய உடல்நிலை குறித்த சில பதிவுகளை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்கிறார்.. அதில் சில கார்ட்டூன் சித்திரங்கள் மூலம் தனக்கு இருக்கும் உடல் ரீதியான அல்லது மன ரீதியான வலிகளை வெளிப்படுத்துகிறார்.. இதெல்லாம் பார்ப்பவர்களுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது..
செல்வராகவன் தொடர்ந்து "தனிமை பிடிக்கும்" எனப் பதிவிடுவதும், குடும்பத்தைக் கவனிக்காமல் இருப்பதும் கீதாஞ்சலியை விரக்தியடைய செய்திருக்கலாம். அதனால்தான், தங்களால் யாருக்கும் கஷ்டம் வேண்டாம் என்ற நோக்கில் விலகிச் சென்றிருக்கலாம் என தெரிகிறது.
தனுஷ் வாழ்க்கை
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோரது பிரிவு என்ன தந்தது? லட்சக்கணக்கிலான மதிப்புள்ள ஷூக்கள், 2-3 கோடி ரூபாய் மதிப்புள்ள வாட்ச் அணிகிறார் தனுஷ்.. லண்டன் போன்ற இடங்களுக்குச் சென்று ஒரு வாரத்திற்கு ஒரு கோடி ரூபாய் வரை தனுஷ் செலவு செய்கிறார்.. ஆனாலும், தனுஷூக்கு நிம்மதியற்ற வாழ்க்கைதான் உள்ளது.
யாராக இருந்தாலும் 60 வயதிற்கு மேல் செல்லும்போது செல்வம் மட்டும் போதாது, கூட இருக்க குடும்பம் மிக அவசியம்
செல்வராகவன் ஒரு காலத்தில் மிகச்சிறந்த இயக்குனராக இருந்தும், தற்போது படங்களில் நடிக்கத் தொடங்கியதற்குக் காரணம் அவரது ஒழுங்கற்ற வேலை முறையே.
ஒரு இயக்குனராக அவர் மிகவும் திறமையானவர்.. ஆனால், ஷூட்டிங்கில் அவரது செயல்பாடுகள் புதிராகவே உள்ளது.. திடீரென்று காணாமல் போவது, தயாரிப்பாளர் மற்றும் நடிகர்களின் நேரத்தையும் பணத்தையும் வீணடிப்பது போன்ற குணங்கள் செல்வராகவனிடம் உள்ளது.. அதனால்தான் பல தயாரிப்பாளர்கள் அவருக்குப் பட வாய்ப்பு வழங்க தயங்குகின்றனர்
திறமையான இயக்குனர் செல்வராகவன்
தனது மனைவி, குழந்தைகள், தம்பி தனுஷ், பெற்றோர் என அனைவரிடமிருந்தும் அவர் ஒருவித இடைவெளியை கடைப்பிடித்து வருகிறார்.. தனுஷுக்கே தனது அண்ணனைப் பற்றி நன்றாகத் தெரியும் என்பதால் தான் அவருடன் இணைந்து படம் பண்ணத் தயங்குகிறார்...
மிகப்பெரிய உயரத்திற்குச் செல்லும் தகுதி இருந்தும், செல்வராகவனே அதைத் தவறவிட்டுவிட்டார்.. சினிமாவில் அவர் காட்டும் தத்துவங்கள் நிஜ வாழ்க்கைக்குச் செட் ஆகாது.. மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இருக்கும்போது தனிமையை விரும்புவது ஒரு நல்ல குணாதிசயம் அல்ல.
மூன்று குழந்தைகளின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறிவிடக்கூடாது.. எனவே, கீதாஞ்சலி செல்வராகவன் மீண்டும் குழந்தைகளுக்காக ஒன்று சேர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications