Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லாரியில் ரஜினிக்காக தண்ணீர் அனுப்பி வைத்த மனசு.. "கை கட்டி நிற்பது பணிவு".. AVM சரவணனின் கடைசி நாள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாழ்ந்து கெடாத மனிதர் என்று ஏவிஎம் சரவணனை சொல்லலாம்.. சரவணனின் இந்த இழப்பு, சினிமா துறைக்கு மிகப்பெரிய இழப்பாகும்.. நேற்று பிறந்த நாள் கொண்டாடி இருக்கிறார்.. இன்று மரணித்துள்ளார். இன்பமும் துன்பமும் நிறைந்ததுதான் வாழ்க்கை என்பதையே ஏவிஎம் சரவணனின் மரணம் உணர்த்தி உள்ளது" என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். .

Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, "சினிமா, ஒரு தொழில் என்பதையும் தாண்டி, இன்று சூதாட்டமாகிவிட்டது. என்று ஒரு மேடையில் ஏவிஎம் சரவணன் துணிச்சலாக சொன்னார்.. ஏவிஎம் செட்டியாருக்கு மூன்று பிள்ளைகள்.. இதில் மூத்தவர் குமரன், சரவணன், பாலசுப்பிரமணியன் என்று மூவருமே சினிமாவின் தயாரிப்பு பணியில் இருந்தவர்கள்..

Cinema Rajini AVM Saravanan

பிற்காலத்தில் சினிமாவில் கிடைத்த கசப்பான காரணங்கள் காரணமாக சினிமா தயாரிப்பதையே ஏவிஎம் நிறுத்தி கொண்டது. பெரிய பெரிய நடிகர்களுக்கு கோடிகளில் சம்பளம் தருவது, பிரம்மாண்டமான இயக்குநர்களுக்கான சம்பளம் தருவது போன்றவற்றில் எளிதாக செயல்பட முடியவில்லை..

பிரம்மாண்டம் - சம்பளம்

அந்த காலத்தில் இயக்குநர்களுக்கான சம்பளத்தை நிர்ணயம் செய்வதே ஏவிஎம் நிறுவனமாகத்தான் இருந்தது.. ஆனால் இன்று சம்பளத்தை முடிவு செய்துவிட்டு, அதற்கு பிறகு தயாரிப்பாளர்கள் யார் என்று தேடும் நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது.

ஏவிஎம்மில் செட் போட்டு, விசுவை வைத்து எடுக்கப்பட்ட சம்சாரம் அது மின்சாரம் நன்றாக போகவில்லையா என்ன? 4 தலைமுறைகளாக ஏவிஎம் படங்களை எடுத்து கொண்டிருந்த நிலையில், லாபகரமாக இந்த சினிமா தொழிலை செய்ய முடியாது என்று தெரிந்த பிறகுதான், ஓதுங்கிவிட்டார்கள்.. நடிகர்கள், இயக்குநர்கள் சம்பளத்தை அவர்களால் தர முடியவில்லை..

அந்தவகையில் ஏவிஎம் ஸ்டுடியோவில் பாதி இடங்கள் அப்பார்ட்மென்ட்டாகிவிட்டது.. படம் தயாரிப்பதை கைவிட்டு 15 வருடங்கள் ஆகிவிட்டபோதும், ஏவிஎம் என்ற பிராண்டு இன்றும் உள்ளது.

கை கட்டி நின்ற பணிவு

எனினும், சினிமாவிலேயே பிறந்து சினிமாவையே சுவாசித்து வளர்ந்தவர்கள் ஏவிஎம் பிள்ளைகள்.. சினிமாவை தவிர வேறு எதுவும் அவர்களுக்கு தெரியாத நிலையில், எப்படித்தான், தயாரிப்பில் இருந்து ஒதுங்கி நின்றார்களோ தெரியவில்லை.. அந்த அளவுக்கு சினிமாவை அவர்கள் நேசித்தவர்கள். எனவே அந்த கவலை சகோதரர்களுக்குள் இருக்கலாம்.

எப்போதுமே ஏவிஎம் சரவணன் என்றால் கைகட்டி நிற்பார்..கை கட்டி நின்றாலே அடிமைத்தனம் என்பதை உடைத்து, கை கட்டி நிற்பது பணிவு என்பதை வெளிப்படுத்தியவர் ஏவிஎம் சரவணன்... அது அவரது பிராண்டாகவே நின்றுவிட்டது. நேற்று பிறந்தநாள் கொண்டாடியிருக்கிறார்.. இன்று மரணமடைந்துள்ளார். விடைதெரியாத கேள்விதானே மரணம்? வயது மூப்பில்தான் இறந்துள்ளார்..

ஆனால், வாழ்ந்து கெடாத மனிதர் என்று சரவணனை சொல்லலாம்.. சரவணனின் இந்த இழப்பு, சினிமா துறைக்கு மிகப்பெரிய இழப்பாகும்..

ரஜினிக்கு லாரியில் தண்ணீர்

மற்றவர்களின் நலனில் அக்கறை காட்டக்கூடியவர் ஏவிஎம் சரவணன்.. ஒருமுறை எஜமான் படத்தின் ஷூட்டிங் மைசூரில் நடந்து கொண்டிருந்தது.. அவர்கள் தங்கியிருந்த இடத்தில் சுத்தமான தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் ரஜினிக்கு ஏதாவது உடல்நல கோளாறு ஏற்பட்டுவிடும் என்பதற்காக சென்னையில் இருந்து லாரியில் தண்ணீர் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தார் ஏவிஎம் சரவணன்..

அதாவது நடிகர், நடிகைகளின் நலனில் எந்த அளவுக்கு அக்கறை எடுத்து கொண்டாரோ, அதே அளவுக்கு சிக்கனங்களையும் தங்கள் படங்களில் கடைப்பிடிப்பார்..

நேற்று பிறந்த நாள் கொண்டாடி இருக்கிறார்.. இன்று மரணித்துள்ளார். இன்பமும் துன்பமும் நிறைந்ததுதான் வாழ்க்கை என்பதையே ஏவிஎம் சரவணனின் மரணம் உணர்த்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+