1000 கோடி பட்ஜெட்டில் ‘வேள்பாரி’.. பான்-இந்தியா படமாக உருவாகும் ஷங்கரின் பிரம்மாண்டம்! ஹீரோ யார் தெரியுமா?
சென்னை: இயக்குநர் ஷங்கரின் சினிமா பயணத்தில் 'இந்தியன் 2', 'கேம் சேஞ்சர்' ஆகிய படங்களுக்குப் பிறகு, ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையும் கவனம் திருப்பும் ஒரு முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழின் பெருமையான வரலாற்று நாவல்களில் ஒன்றான எழுத்தாளர் சு. வெங்கடேசனின் 'வேள்பாரி' நாவலை, ஷங்கர் திரைப்படமாக எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'வேள்பாரி' என்பது வெறும் ஒரு வரலாற்று கதை அல்ல. தமிழின் அடையாளம், வீர மரபு, அரசியல், காதல், தியாகம், அதிகாரம் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு மாபெரும் உலகம்.

பாரி - மூவேந்தர்களுக்கே தலை குனியாத ஒரு மன்னன். முல்லைக்குத் தேர் கொடுத்த அந்த கதாபாத்திரம், சினிமா திரையில் முழு வீச்சில் வந்தால் அது பாகுபலி அளவிலான தாக்கத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
இந்தப் படம் சுமார் 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாகவும், இது ஒரு முழுமையான பான்-இந்தியா திரைப்படமாக தயாரிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பிரம்மாண்ட முயற்சிக்கு மும்பையைச் சேர்ந்த முன்னணி தயாரிப்பு நிறுவனமான பென் மீடியா ஸ்டூடியோஸ் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது. இந்த தகவல் கோலிவுட் முதல் பாலிவுட் வரை பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இவ்வளவு பெரிய முதலீடு என்பதால், தயாரிப்பு நிறுவனம் சில முக்கிய நிபந்தனைகளையும் விதித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, இந்த படம் உலக அளவில் பிரபலமாக வேண்டும் என்றால் பாலிவுட்டில் அதிகமான பிரபலமாக இருக்கும் ஒருவரை வைத்து இந்த படத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் தயாரிப்பு நிறுவனம் கொடுத்திருக்கும் டாஸ்காம்
இந்த பின்னணியில்தான், 'வேள்பாரி' படத்தின் ஹீரோ தேர்வு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.இப்போது வெளியாகும் தகவல்கள் என்ன சொல்கின்றன என்றால், பாலிவுட் எனர்ஜி ஸ்டார் ரன்வீர் சிங், 'வேள்பாரி' படத்தில் பாரி கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
ரன்வீர் சிங் - அதிக எர்ஜி, இயல்பான நடிப்பு, உடலை வளைத்து மாறக்கூடிய நடிகன். 'பஜிராவ் மஸ்தானி', 'பத்மாவத்', '83' மாதிரியான வரலாற்று கதாபாத்திரங்களில் அவர் காட்டிய தீவிரம், 'வேள்பாரி'க்கு செட் ஆகுமா? என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. மேலும், இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம், இந்த படம் முழுமையான பான்-இந்தியா நட்சத்திரக் கூட்டணியுடன் உருவாகும் என்பது உறுதியாகியுள்ளது.

விக்ரம் + ஷங்கர் = 'அந்நியன்' நினைவுக்கு வராமலா போகும்? ஒருபக்கம் ரன்வீர் சிங்கின் தீவிரம், மறுபக்கம் விக்ராந்தின் நடிப்பு வேகம்...இரண்டையும் மோதவிட்டால் திரை எரியும் என்பதில் சந்தேகமே இல்லை. இயக்குனர் சங்கருக்கு கடந்த சில படங்கள் விமர்சன ரீதியாக எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை என்றாலும், 'வேள்பாரி' படத்தின் மூலம் இயக்குநர் ஷங்கர் தனது பழைய ஃபார்முக்கு திரும்ப முழு வீச்சில் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
'இந்தியன் 3' தொடர்பான தகவல்கள் தற்காலிகமாக வெளியிடப்படாத நிலையில், தொழில்நுட்ப ரீதியாகவும், கதை அமைப்பிலும், ராஜமௌலியின் 'RRR' உள்ளிட்ட படங்களின் சாதனைகளை முறியடிக்கும் முனைப்புடன் இந்த திட்டத்தில் ஷங்கர் இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கலை நுணுக்கமும், கமர்ஷியல் லாபமும் ஒரே நேரத்தில் இணையும் இந்த முயற்சி, தமிழ் சினிமாவின் எல்லையை உலகத் தரத்திற்கு உயர்த்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 'வேள்பாரி' திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் நடிகர் பட்டியல் வெளியாகும் நாளை திரையுலகம் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications