சிறுமிக்கு நடந்த பாலியல் தொல்லை.. இதற்கும் பரிதாபங்கள் டீம் சப்போர்ட்டுக்கு வருவாங்களா? சின்மயி ஆதங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாடகி சின்மயி சமூக அக்கறை தொடர்பான எந்த விஷயமாக இருந்தாலும் நேராகவும் தயக்கமின்றியும் தனது கருத்தை பதிவு செய்வதில் எப்போதுமே முன்னிலையில் இருப்பவர் தான். மீ டூ விவகாரம் முதல் பெண்கள் மீதான அநீதிகள் வரை பல பிரச்சனைகளில் வெளிப்படையாக பேசுபவர் என்ற பெயரை பெற்ற அவர், இப்போது மீண்டும் சமூக வலைதளங்களில் சூடான விவாதத்தை கிளப்பியிருக்கிறார்.

கடந்த மாதம் கேரளாவில் நடந்த பேருந்து சம்பவம் இன்னும் மக்களின் நினைவில் இருந்து மறையவில்லை. கூட்ட நெரிசலில் தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக ஒரு பெண் வெளியிட்ட வீடியோ வைரலானது. அந்த வீடியோ வெளியான சில நாட்களிலேயே குற்றம் சாட்டப்பட்ட தீபக் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Chinmayi

பின்னர் தீபக்கின் அம்மா அளித்த புகாரின் அடிப்படையில் அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதும் செய்யப்பட்டது. இந்த விவகாரம் பெண்கள் பாதுகாப்பு - பொய்யான குற்றச்சாட்டு - சோசியல் மீடியா பிரபலம் என்ற மூன்று கோணங்களில் தீவிரமாக பேசப்பட்டது.

இந்த சூழ்நிலையில், இந்த சம்பவத்தை பரிதாபங்கள் youtube சேனல் சுதாகர் மற்றும் கோபி காமெடியாக ஒரு வீடியோ வெளியிட்டது டான்ஸ் ஆடி வெடிக்குது தங்கமே வந்து படிச்சு கொஞ்சம் சாப்பிடுவியாமா ஓர் சர்ச்சையை கிளப்பியது. யாருக்கு அனுதாபம்? யாருக்கு நீதி? என்ற விவாதம் தொடர்ந்து கொண்டே இருந்தது.

அப்படிப்பட்ட நேரத்தில் தான் சின்மயி தனது 'X' பக்கத்தில் பகிர்ந்த புதிய வீடியோ கவனத்தை ஈர்த்தது. அந்த வீடியோவில் பேருந்தில் ஒரு சிறுமியிடம் அத்துமீறி நடக்கும் ஒருவரை ஒரு பெண் நேரில் எதிர்த்து கண்டிக்கிறார். தவறு செய்தவனை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பதற்கான சாட்சியாக அந்த வீடியோ பார்க்கப்பட்டது.

இந்த வீடியோவை பகிர்ந்த சின்மயி, நேரடியாக பெயர் சொல்லாமல், "இப்படி தவறு செய்தவரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததால் அவன் உயிரை மாய்த்துக்கொண்டால், அவருக்கும் அனுதாப வீடியோ பரிதாபங்கள் சேனலில் வரும் தானே?" என்ற கேள்வியை எழுப்பினார். இந்த ஒரு வரி பதிவு தான் தற்போது இணையத்தில் தீப்பிடித்தது போல பரவி வருகிறது.

சின்மயி இப்படிப்பட்ட கருத்துகளை பதிவு செய்வது இது முதல் முறை அல்ல. டப்பிங் ஆர்டிஸ்டாகவும், தேசிய விருது பெற்ற பின்னணி பாடகியாகவும், பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடிய கலைஞராகவும் இருக்கும் அவர், பெண்கள் பாதுகாப்பு, பாலியல் தொந்தரவு போன்ற விஷயங்களில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இதனால் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் அவருக்கு எப்போதும் இருக்கிறார்கள்.

ஆனால் எந்த விமர்சனத்தையும் பொருட்படுத்தாமல் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக சொல்லும் தன்மை தான் அவரை சமூக வலைதளங்களில் வித்தியாசமாக காட்டுகிறது. இப்போது அவர் போட்டுள்ள இந்த பதிவு மீண்டும் ஒரு பெரிய விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+