வெல்கம் பேக் விக்ரம் பிரபு.. சிறை பிச்சு உதறுது.. திரைக்கதையில் நின்ற தமிழ்.. பேர் சொல்லும் பிள்ளை
சென்னை: சிறை ஒரு அற்புதமான படம்.. இது உணர்வுகளோடு கனெக்ட் ஆகும் வகையில் சொல்லப்பட்டிருக்கிறது .. அனைவரும் பார்க்க வேண்டிய படம்.. சின்ன சின்ன நுணுக்கங்கள் சொல்லப்பட்டுள்ள படம் சிறை" என்று பெரும் பாராட்டை தந்துள்ளார் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு.. மேலும் இயக்குனர் தமிழ் குறித்தும் பல்வேறு திறமைகளை பாராட்டி கூறியிருக்கிறார்.
Aagaym Cinemas யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு "அறிமுக இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி சிறை படத்தை இயக்கியுள்ளார்.. திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை தமிழ் எழுதி உள்ளார்... இவர் ஏற்கனவே விக்ரம் பிரபுவை வைத்து 'டாணாக்காரன்' என்ற வெற்றிப் படத்தை இயக்கியவர்.
சிறை படத்தின் கதையை, தயாரிப்பாளர் லலித்திடம் தமிழ் சொன்னபோது, இந்தப் படத்தை தமிழையே சொல்லியிருக்கிறார். தமிழும் அதற்கு ஓகே சொன்னார்..
{image-sirai-tamil-movie-review-jpg-1766928373959_1766928259573-600x338.jpg tamil.oneindia.com
டீடெயிலிங் - தமிழ்
ஆனால் அதே காலகட்டத்தில், நடிகர் கார்த்தி நடிக்கும் 'மார்ஷல்' என்ற பெரிய படத்திற்கான வாய்ப்பு தமிழுக்குக் கிடைத்தது. அந்த படம் ஒரு கடற்கரை சார்ந்த கதைக்களம் கொண்டதாலும், அதில் முழு கவனம் செலுத்த வேண்டியிருந்ததாலும், 'சிறை' படத்தின் கதையை சுரேஷ் ராஜகுமார் என்பவரிடம் தமிழ் ஒப்படைத்தார். அப்படித்தான் இந்த படம் உருவானது.
இயக்குநர் தமிழ் ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரி. அதனால், காவல்துறைக்குள் நடக்கும் மிக நுணுக்கமான விஷயங்கள் டீடெயிலாக அவருக்குத் தெரியும். ஒரு இன்சைடராக அவர் சொல்லும் விவரங்கள் கதையை மிகவும் நம்பகத்தன்மையுடன் மாற்றியுள்ளன. அப்படியே நிஜமான கதை போலவே திரைக்கதையை சொல்கிறார் தமிழ்,.
கம்பேக் விக்ரம் பிரபு
உதாரணத்துக்கு, ஒரு கைதியை தூரமான ஊர்களுக்கு அழைத்து செல்லும்போது துப்பாக்கியை லோடு செய்யக்கூடாது என்ற சட்ட நுணுக்கத்தையெல்லாம் திரைக்கதையில் மிக சிறப்பாக பயன்படுத்தியுள்ளார்... மிகச்சிறந்த ஸ்கிரீன் பிளே ரைட்டர் தமிழ்... உணர்ச்சிகரமான டயலாக்குகளுடன் கதையை நேர்த்தியாக அமைத்துள்ளார். படத்தின் வெற்றிக்கு இயக்குநரின் உழைப்பு ஒருபுறம் இருந்தாலும், தமிழின் "அழுத்தமான எழுத்து" மிக முக்கியமான அடித்தளம்.
இதில் விக்ரம் பிரபு ஒரு போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்துள்ளார். 'கும்கி' படத்திற்குப் பிறகு அவருக்கு இது ஒரு மிகச்சிறந்த 'கம்பேக்' படமாக இருக்கும் என்றும், அவரது நடிப்புத் திறன் இதில் மிகச் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது
பேர் சொல்லும் பிள்ளை
விக்ரம் பிரபுவின் நடிப்புத் திறன் அவரது ரத்தத்திலேயே இருக்கிறது.. அது அவரது குடும்பப் பாரம்பரியம்..நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் என்பதை இந்தப் படத்தில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் நிரூபித்துவிட்டார்.. "பேர் சொல்லும் பிள்ளை" என்றே சொல்லலாம்..
இதுவரை அவர் நடித்த படங்களில் இல்லாத அளவுக்கு, இந்தப் படத்தில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் கேரக்டரில் மிகவும் நுணுக்கமாகவும், எதார்த்தமாகவும் நடித்துள்ளார்.. கும்கி படத்திற்குப் பிறகு விக்ரம் பிரபு அறிமுகமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், அந்தப் படத்திற்குப் பிறகு அவர் பெரிய அளவில் பேசப்படும்படியான வெற்றிப் படங்கள் எதுவும் அமையவில்லை. சரியான கதைகளும், திறமையை வெளிக்கொண்டு வரும் சரியான இயக்குநர்களும் விக்ரம் பிரபுவுக்கு அமையவில்லை.
சிறந்த படம் சிறை
'இவன் வேற மாதிரி' போன்ற படங்கள் ஓரளவுக்கு பேசப்பட்டாலும், அதற்கு அடுத்து அவர் நடித்த பல படங்கள் பெரிய தோல்வியை தழுவின. இந்த தொடர் தோல்விகளால், ஒரு கட்டத்தில் மக்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு நாயகனாகவே இருந்தார் விக்ரம் பிரபு.. ஆனலால் இந்த சிறை படம் விக்ரம் பிரபுவின் நடிப்புப் பயணத்தில் ஒரு மிகச்சிறந்த அடையாளமாக இருக்கும்
அதேபோல இந்த வருடத்தின் சிறந்தபடமாக சிறை உள்ளது.. பல வருட காலம் இந்த சிறை படம் சினிமாவில் நிலைத்து நிற்கும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்,
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு












Click it and Unblock the Notifications