Sirai: ‘நீலோத்தி’ன்னா என்ன அர்த்தம்? – ‘சிறை’ படத்தின் ஹிட் பாடலுக்குப் பின்னாடி இருக்கும் அழகான ரகசியம்
சென்னை: விக்ரம் பிரபு, அக்ஷய் குமார் நடித்த 'சிறை' படம் தியேட்டர்களில் வெளியானதிலிருந்து நல்ல ரெஸ்பான்ஸ் பெற்று வருகிறது. பெரிய ஹீரோயிசம், மாஸ் பில்ட்அப் இல்லாமலே கதையின் வலிமை, எமோஷனல் டிராமா மூலம் ரசிகர்களை கவர்ந்த படம் இது. அந்த படத்திலேயே ஒரு முக்கியமான பிளஸ் பாயிண்ட் என்றால், சந்தேகமே இல்லாமல் 'நீலோத்தி' பாடல் தான். ரிலீஸான சில நாள்களிலேயே இந்த பாடல் ரீல்ஸ்ல, ஷார்ட்ஸ்ல, ஸ்டேட்டஸ் வைரலாகி, பலரின் மனசுக்குள் உட்கார்ந்து விட்டது.
பாடலைக் கேட்கும்போதே, "நீலோத்தி"ன்னா என்ன வார்த்தை? இதுக்கு உண்மையிலேயே அர்த்தம் இருக்கா? இல்ல புதுசா உருவாக்கப்பட்ட வார்த்தையா?"ன்னு நிறைய பேருக்கு கேள்வி வந்தது. இதுக்கான பதிலை கவிஞர் சாரதி தான் கொடுத்திருக்கிறார். உலகத்தில் அதிகம் இருக்குற நிறம் நீலம். கடல்னா நீலம், ஆகாயம்னா நீலம் - நம்ம கண் படும் பெரும்பாலான பரப்பும் நீலமே. அந்த உணர்வை வைத்து, "என்னோட உலகத்துல பாதிக்கு மேல நீ தான்"ன்னு நாயகன் நாயகியிடம் சொல்லுற மாதிரி, 'நீலோத்தி'ன்னு ஒரு புதிய வார்த்தையை உருவாக்கினாராம். அதனால தான் இந்த வார்த்தை கேட்கவே ரொம்ப புதுசா, கவிதை மாதிரி ஃபீல் கொடுக்குது.

இந்தப் பாடல் வரிகளில் இன்னொரு அழகான விஷயம் என்னன்னா, காதலை மதம், இனம்னு பிரிச்சு காட்டாம, இரண்டையும் சேர்த்து சொன்ன விதம். நாயகன் இஸ்லாமியர், நாயகி இந்து - அவர்களோட காதலை வெளிப்படுத்துற வரிகளில் 'மூஸாவ தேடி ஈசன் கிட்ட தூவாவம் செஞ்சி வணங்குவேன்'ன்னு வருது. மூஸா இஸ்லாமிய தூதர், ஈசன் இந்து கடவுள் - இரண்டு மதத்தையும் இணைத்து எழுதப்பட்ட இந்த வரிகள் தான் பாடலுக்கு இன்னும் ஒரு லேயர் அழகை சேர்த்திருக்கிறது.
அதுக்கு அடுத்த வரிகளில், "இருட்டறையில தான் இருந்தவன் வெளிச்சத்த காட்டிய முமினுமே நீ"ன்னு வருது. இங்க 'முமின்'ன்னு சொல்லுற வார்த்தைக்கு நம்பிக்கை உடையவர் அப்படின்னு அர்த்தம். சிறையில் இருந்த நாயகனுக்கு வெளிச்சமாக, நம்பிக்கையாக நாயகி இருந்தாள்னு ரொம்ப அழகா சொன்ன மாதிரி இருக்கும். இது வெறும் காதல் வரி மட்டும் இல்லாம, அந்த கேரக்டரோட வாழ்க்கை நிலையைச் சொல்லுற ஒரு வரியா இருக்கிறது.

நாயகி பாடுற பகுதியிலும் கவிஞர் சாரதி நிறைய அழகான சிம்பிள் வரிகளை வைத்திருக்கிறார். "நேந்துக்கிட்ட சாமிகிட்ட எஞ்சாமிய பாத்துக்க"ன்னு, நாயகனைத் தன்னோட கடவுள் மாதிரி நினைத்து, அவனை பாதுகாப்பா பார்த்துக்க சொல்லி சாமியிடம் வேண்டிக்கிட்ட மாதிரி வருது. அதே நேரத்துல, "படச்ச சாமி கேட்காததையும் படிச்ச சாமி கேக்குதே"ன்னு போலீஸ் ஆஃபிசராக இருக்கும் விக்ரம் பிரபுவை சுட்டிக்காட்டுற மாதிரி ஒரு வரி. படிச்ச சாமி என்ற வார்த்தை ரொம்ப இயல்பாக, கிராமத்து பேச்சு வழக்கில் வர்றதால தான் பாடல் இன்னும் நெருக்கமாகத் தோன்றுது.
'சிறை' படத்தைப் பற்றி பேசினா, இது ஒரு ஆக்ஷன் டிராமா மட்டும் இல்ல. மனித உறவுகள், நம்பிக்கை, சிறைக்குள் இருக்கும் மனிதர்களோட மனநிலை - இதையெல்லாம் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். விக்ரம் பிரபு போலீஸ் அதிகாரியாக, அக்ஷய் குமார் சிறைக்கைதியாக நடித்திருக்கும் காட்சிகள் நிறைய இடங்களில் கைதட்டல் வாங்கியிருக்கிறது. வழக்கமான ஹீரோயிசம் இல்லாமல், கதைக்குத் தேவையான அளவுக்கு மட்டுமே ஹீரோ பில்ட்அப் வைத்திருப்பதும் இந்த படத்துக்கு பெரிய பிளஸ்.

மியூசிக் டைரக்டர் பாடலுக்கு மெலோடி டச் கொடுத்ததால தான் 'நீலோத்தி' பாடல் எல்லா வயசு மக்களுக்கும் பிடிச்ச மாதிரி ஆகிடுச்சு. காதல், வலி, நம்பிக்கை - இந்த மூன்றையும் ஒரே பாடலுக்குள்ள கொண்டு வந்திருப்பதால தான் இந்த பாடல் ரீல்ஸ்ல மட்டுமில்லாமல், நேர்ல கேட்கும் போதும் மனசை தொட்டுக்குது.
மொத்தத்தில், 'சிறை' படத்தின் வெற்றிக்கு கதையும் நடிப்பும் காரணம்னா, அந்த வெற்றியை இன்னும் ஒரு லெவல் மேல கொண்டு போனது 'நீலோத்தி' பாடல்தான். அதனால தான் இப்போ படம் பார்க்காதவர்கள்கூட, "நீலோத்தி பாடல் சூப்பர்"ன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications