பராசத்தியில் அண்ணா சீனை தூக்கிய சென்சார்.. ஆனால் படக்குழு எடுத்த சூப்பர் முடிவு! மீடியாவில் தீ பரவியது
சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்ட நிலையில், வெளிநாடுகளில் ஷோக்கள் முன்பே தொடங்கி விட்டன. வெளியாவதற்கு முன்பே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய இந்த படம், இப்போது தடைகளை எல்லாம் தாண்டி திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.
சிவகார்த்திகேயனுக்கு 25ஆவது படமாகவும், ஜிவி பிரகாஷுக்கு 100ஆவது படமாகவும் அமைந்துள்ள பராசக்தி, 1960-களில் தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி திணிப்புக்கு எதிரான மாணவர் போராட்டங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ரிலீஸ் வரை தொடர்ந்த சென்சார் டென்ஷன்
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து சென்சாருக்கு அனுப்பப்பட்டபோது, பராசக்திக்கு உடனடியாக சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் திட்டமிட்டபடி படம் பத்தாம் தேதி வெளியாகுமா என்ற சந்தேகம் நேற்று பிற்பகல் வரை நீடித்தது. ஒருவழியாக, மொத்தம் 25 இடங்களில் திருத்தம், கட், மியூட் என்ற நிபந்தனைகளுடன், யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனால் ரிலீஸ் உறுதி செய்யப்பட்டாலும், சென்சார் குழு விதித்த கட்டுப்பாடுகள் படக்குழுவையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தின.
பேரறிஞர் அண்ணா வசனம்
சென்சார் திருத்தங்களில் அதிக விவாதத்தை ஏற்படுத்தியது, பேரறிஞர் அண்ணா தொடர்பான முக்கிய வசனம். "நான் கொண்டு வந்ததை யாராவது மாற்ற நினைத்தால் மக்கள் வெகுண்டெழுவார்கள்..."
என்ற வரலாற்று முக்கியத்துவம் கொண்ட வசனம் படத்தில் இடம்பெற்றிருந்த நிலையில், அந்த சீனையே முழுவதுமாக நீக்க சொல்லப்பட்டது.
மேலும், "தீ பரவட்டும்" என்ற வசனத்தை "நீதி பரவட்டும்" என்று மாற்ற அறிவுறுத்தப்பட்டதும் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளானது. இந்த மாற்றங்கள் இந்தியாவில் வெளியாகும் ப்ரிண்ட்டில் மட்டுமே இடம்பெற்றுள்ளன. வெளிநாடுகளில் பராசக்தி அன்-கட் வெர்ஷனாகவே திரையிடப்படுகிறது.
படக்குழுவின் ஸ்மார்ட் மூவ்
திரையில் அந்த வசனங்களை பார்க்க முடியாத ஏமாற்றம் ரசிகர்களிடம் நிலவிய நிலையில், படக்குழு ஒரு ஸ்மார்ட் மூவ் செய்துள்ளது. சென்சார் கட்டுப்பாடுகள் திரையரங்குகளுக்கு மட்டுமே என்பதால், டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் ப்ரோமோக்களில் அந்த வசனங்களை இடம்பெறச் செய்துள்ளனர். இதை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.
படத்தில் பேரறிஞர் அண்ணாவாக சேத்தன் நடித்துள்ள காட்சிகள், ட்ரெய்லரிலேயே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
தடைகளை தாண்டி தொடங்கிய நல்ல ஓபனிங்
சென்சார் சர்ச்சைகள், வசனக் கட்டுப்பாடுகள், அரசியல் பேசுபொருள் என பல பிரச்சனைகளுக்கு மத்தியில் வெளியான பராசக்தி, முதல் நாள் காட்சிகளிலேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் கருத்தும், சுதா கொங்கராவின் இயக்கமும், சிவகார்த்திகேயனின் அரசியல் சார்ந்த நடிப்பும் ரசிகர்களிடையே விவாதத்தை உருவாக்கியுள்ளது.
தடைகள் எத்தனை இருந்தாலும், பராசக்தி வெளியான முதல் நாளிலேயே ஒரு சாதாரண சினிமாவைத் தாண்டி, ஒரு கருத்து பேசும் படமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications