ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் ஹோம் டூர் பார்த்துருக்கீங்களா? வீட்டுக்குள் நுழைந்த ஒன்இந்தியா டீம்
சென்னை: தமிழ் சினிமாவின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்களில் ஒருவரான ஜாக்குவார் தங்கத்தின் வீடு சமீபத்தில் கவனம் பெற்றுள்ளது. ஒன்இந்தியா குழு அவரது இல்லத்துக்குள் சென்று எடுத்த ஹோம் டூர் பேட்டி தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
வீட்டுக்குள் நுழைந்ததும், சினிமாவில் அவர் கடந்த நீண்ட பயணத்தை சொல்லும் விதமாக, சுவர்கள் முழுக்க நினைவுகளால் நிரம்பியிருக்கிறது. ஜாக்குவார் தங்கம் தனது வீட்டில், தான் பெற்ற பல்வேறு விருதுகளை ஒழுங்காக அடுக்கி வைத்துள்ளார். அதில் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி, ஜெயலலிதா, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களிடமிருந்து விருது பெற்ற புகைப்படங்களும், அதனுடன் அந்த விருதுகளையும் பாதுகாத்து வைத்திருக்கிறார்.

குறிப்பாக, ஜெயலலிதாவிடம் இருந்து விருது பெற்ற போது எடுத்த புகைப்படத்தை காட்டிய அவர், ஒரு வருட காலம் அவருக்கு பாடிகார்டாக பணியாற்றிய அனுபவத்தையும் பகிர்ந்தார். "விருது வழங்கும்போது அம்மா சிரித்தபடியே பேசினார்" என்று அந்த தருணத்தை நினைவுகூர்ந்தார்.
இதோடு மட்டுமல்லாமல், நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வீடு முழுவதும் இடம் பெற்றுள்ளன. அவரது ரசிகர்கள் மற்றும் சக கலைஞர்கள் பரிசாக வழங்கிய புகைப்படங்கள், நினைவுப் பொருட்களும் ஆங்காங்கே அலங்கரிக்கின்றன.

ஜாகுவார் தங்கம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் பல ஆண்டுகளாக ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். ஆபத்தான சண்டைக் காட்சிகளில் தனது தைரியமும் திறமையும் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர். அவரது வீடு, தமிழ் சினிமா வரலாற்றின் ஒரு சிறிய அருங்காட்சியகம் போலவே ரசிகர்களை ஈர்க்கிறது.
-
பாரதிராஜா இறுதி சடங்கிற்கு பிறகு மனைவி வெளியிட்ட உருக்கமான அறிக்கை.. ஆறுதல் சொல்லும் ரசிகர்கள் -
தேனி மண்ணில் பாரதிராஜா உடல் .. கை குழந்தைகளுடன் காத்திருக்கும் பெண்கள்.. பிரபலங்களின் நெகிழ்ச்சி செயல் -
கடைசியில யாருமே இல்லாம போயிட்டீங்க இல்ல? இப்படி அனாதையா.. பாரதிராஜா உடலை கண்டு கதறிய கங்கை அமரன் -
Bharathiraja: இறப்பதற்கு முன் பாரதிராஜா கூறிய கடைசி ஆசை? ரசிகர்களை கலங்க வைக்கும் நினைவுகள்! -
பாரதிராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு.. தீவிர மருத்துவ கண்காணிப்பு! இமய இயக்குனருக்கு என்ன ஆச்சு -
பாரதிராஜா யார்? ஸ்டூடியோக்களில் முடங்கிய திரையுலகை கிராமத்து மண்வாசனைக்கு கூட்டிச்சென்ற கலை வித்தகன் -
Bharathiraja: "கூட இருப்பவர்களையே நம்ப முடியாது..." ரசிகர்களை கலங்க வைக்கும் பாரதிராஜாவின் கடைசி பேட்டி -
உடைந்த பாரதிராஜா.. மகன் மனோஜ்ஜை மறக்க முடியாமல் தேம்பி தேம்பி அழுது, புத்திர சோகத்தாலேயே போன உயிர் -
பாரதிராஜா, இளையராஜா வாழ்க்கையில் நடந்த "ஒரே” துயரம்.. நம்பிக்கை நாயகனுக்கு இப்படியா நடக்கணும்! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை












Click it and Unblock the Notifications