கதாநாயகியாகும் குஷ்புவின் மகள்.. அதுவும் அஜித் பட பெயர்தான் டைட்டில்! கூட யாரு பாருங்க
சென்னை: தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திர தம்பதியரான சுந்தர். சி - குஷ்பு குடும்பத்தில் அடுத்த தலைமுறையும் சினிமா பாதையில் காலெடுத்து வைக்க ஆரம்பிச்சுட்டாங்க. இரு மகள்களும் தங்களுக்கென தனித்தனி பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். மூத்த மகள் அனந்திதா, உதவி இயக்குநராக பணியாற்றி, விரைவில் தனியாகவே ஒரு படத்தை இயக்கப் போகிறார் என்ற தகவல் ஏற்கனவே கவனம் ஈர்த்தது.
அதே நேரத்தில், இளைய மகள் அவந்திகா நடிகையாக அறிமுகமாகும் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஹீரோயினாக களமிறங்கும் அவந்திகாவின் முதல் படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டு, அதிகாரப்பூர்வமாக அவரது சினிமா பயணம் தொடங்கிவிட்டது.

குஷ்பூ மகள் நடிக்கும் படம்
குஷ்புவின் இளைய மகள் அவந்திகா, இப்போது நடிகையாக சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். இவரது முதல் படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டு, அதிகாரப்பூர்வமாக ஷூட்டிங் தொடங்கியிருக்கிறது. இந்த படத்தின் பெயர் "ஆரம்பம்". அதே பெயரில் அஜித் குமார் நடித்த படம் தமிழ் ரசிகர்களிடம் பெரிய ஹிட் ஆனது நினைவிருக்கலாம். அந்த டைட்டிலே இப்போது அவந்திகாவின் சினிமா ஆரம்பத்துக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதே பலருக்கு சுவாரசியமாக தெரிகிறது.
இந்த படம் மலையாளத்தில் உருவாகினாலும், தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் பான்-இந்தியா ரிலீஸாக வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். படத்தை மலையாள இயக்குநர் சுஜீஷ் அன்னி ஈப்பன் இயக்குகிறார். முதல் படமே பல மொழி ரசிகர்களை அடையும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா, சுந்தர். சி இயக்கத்திலோ அல்லது குஷ்பு தயாரிக்கும் படத்திலோ அவந்திகாவை அறிமுகப்படுத்தல. அவ்னி சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை பெற்றோர் நடத்தி வந்தாலும், "சொந்த முயற்சியில் தான் ஹீரோயினாக வரணும்"ன்னு அவந்திகா எடுத்த முடிவு சினிமா வட்டாரத்தில் நல்ல மதிப்பை பெற்றிருக்கிறது. ஸ்டார் கிட் என்றாலும், தன் பாதையை தானே தேடி பிடிக்க முயற்சி செய்திருப்பது பலருக்கு பிடிச்ச விஷயமா பேசப்படுகிறது.
இந்த படத்தில் மலையாள சினிமாவின் அனுபவம் வாய்ந்த நடிகர்களான இந்திரன்ஸ், அல்தாஃப் சலீம், விஜயராகவன், கிருஷ்ணா சங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். முதல் படமே இப்படிப்பட்ட நட்சத்திர பட்டாளத்தோடு உருவாகுறது, அவந்திகாவுக்கு நல்ல அனுபவமாக இருக்கும் என்கிறார்கள்.

சரிதாவின் சந்தோஷம்
ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ஒரு சுவாரசியமான விஷயமும் இப்போ பேசுபொருளாகியுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நடிகை சரிதா, "குஷ்புவின் முதல் படத்திலேயே நான் நடித்தேன். இப்போ அவங்க மகளோட முதல் படத்திலும் நான் இருக்கேன். காலம் எவ்வளவு வேகமா ஓடுது. அம்மாவுக்கு இருந்த சினிமா ஆர்வம், இந்தப் பொண்ணுக்கும் இருக்கு. கண்டிப்பா இவங்களும் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவாங்க"ன்னு அவந்திகாவை மனதார பாராட்டி பேசியுள்ளார். இந்த வார்த்தைகள் படக்குழுவிலும் ரசிகர்களிடமும் நல்ல உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
மொத்தத்தில், சுந்தர். சி குஷ்புவின் குடும்பத்தில் அடுத்த தலைமுறை சினிமா பயணம் தொடங்கியிருக்கிறது. மூத்த மகள் இயக்குனர் பாதையில் பயணிக்க, இளைய மகள் அவந்திகா நடிகையாக அறிமுகமாகிறார். 'ஆரம்பம்' என்ற பெயரிலேயே அவரது சினிமா வாழ்க்கையும் ஒரு புதிய தொடக்கத்தை பார்க்கப் போகிறது. இந்த முதல் படமே அவந்திகாவுக்கு எப்படிப்பட்ட அடையாளத்தை உருவாக்கித் தரப்போகிறது என்பதைக் காண ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.
-
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications