Thaai Kizhavi Kizhavi Box Office: தாய் கிழவி வசூல் சாதனை! 4 நாளில் இத்தனை கோடியாம்! கலக்கும் ராதிகா
சென்னை: நடிகராக வெற்றி மேடையில் நின்று கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளராகவும் அமைதியாக ஒரு வலுவான பாதையை அமைத்து வருகிறார். SK Productions என்ற நிறுவனத்தை தொடங்கி, தன்னுடன் இருந்த நண்பர்கள், புதுமுக இயக்குநர்கள், நல்ல கதைகள் - இவற்றை நம்பி தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறார். அந்த வரிசையில் சமீபத்தில் வெளியான படம்தான் தாய் கிழவி.

ராதிகா முன்னணி
இந்த படத்தில் லீட் ரோலில் நடித்திருப்பவர் ராதிகா சரத்குமார். பல வருட அனுபவம், ஸ்ட்ராங்கான திரைநடிப்பு - இதை எல்லாம் சேர்த்து இந்த கதாபாத்திரத்தில் அவர் வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். அவருடன் தம்பி இராமையா, அருள்தாஸ், பாலசரவணன், முனீஸ்காந்த், ரேச்சல் ரெபேக்கா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இசையை நிவாஸ் கே பிரசன்னா அமைத்திருக்கிறார்.
இயக்கத்தை பார்த்துக் கொண்டவர் சிவக்குமார் முருகேசன். கதையும், திரைக்கதையும், வசனங்களும் மிகவும் நேர்த்தியாக அமைந்திருக்கிறது என்று படம் பார்த்த பலரும் பாராட்டுகிறார்கள். இது அவருடைய முதல் படம் என்றே நம்ப முடியாத அளவுக்கு ஒரு நம்பிக்கையான வேலை என்று சொல்லப்படுகிறது.
ப்ரீமியர் ஷோவிலேயே கிளம்பிய ஹைப்
படம் வெளியாகும் முன்பே செலிபிரிட்டி ஷோ வைத்து காட்டப்பட்டது. அப்போது திரைத்துறை பிரபலங்களும், பத்திரிகையாளர்களும் படம் பார்த்து பாராட்டி பதிவுகள் போட்டனர். அந்த ஹைப் நேரடியாக தியேட்டருக்கு போய் சேர்ந்தது. பிப்ரவரி 27ஆம் தேதி படம் வெளியானதும் குடும்பங்களாகவே மக்கள் தியேட்டருக்கு சென்றனர்.
சில படங்களுக்கு சமூக வலைத்தள பாராட்டு மட்டுமே இருக்கும். ஆனால் இங்கே அதோடு சேர்த்து பொதுமக்கள் ரெஸ்பான்ஸும் நல்ல அளவில் இருந்தது. பெண்கள் மையமாக கதை இருந்தாலும், ஆண்களும் ரசித்து பார்க்கும் வகையில் அமைந்திருக்கிறது என்று பேசப்படுகிறது.
ராதிகாவுக்கு குவியும் பாராட்டு
இந்த படத்துக்குப் பிறகு ராதிகா பற்றி பேசும் விதமே மாறிவிட்டது. "இத்தனை வருடங்களாக இவருக்கு தேசிய விருது ஏன் கிடைக்கவில்லை?" என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. இந்த படத்துக்காவது சிறந்த நடிகைக்கான தேசிய விருது தர வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பலர் எழுதுகிறார்கள்.
அவர் நடித்த சில முக்கியமான காட்சிகளில் தியேட்டரிலேயே கைதட்டல் கேட்டதாக சொல்லப்படுகிறது. அந்த அளவுக்கு அவர் நடிப்பு மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
வசூல் நிலவரம் - நான்காம் நாளும் வலுவான பிடி
விமர்சன ரீதியாக வெற்றி கிடைத்தாலும், ஒரு படத்திற்கு வணிக ரீதியான வெற்றிதான் முக்கியம். அந்த விஷயத்திலும் தாய் கிழவி பின்தங்கவில்லை. தயாரிப்பு நிறுவன தகவல்படி தாய்க்கிழவி படம் முதல் மூன்று நாட்களிலேயே படம் 22 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்திருக்கிறது. இது ஒரு பெண்கள் மையப்படமாக வந்த படத்திற்கு நல்ல சாதனைதான்.

தாய்க்கிழவி நான்கு நாள் வசூல் நிலவரம்
மேலும், Sacnilk இணையதளம் வெளியிட்ட தகவல்படி (Thaai Kizhavi Box Office) நான்காவது நாளான நேற்று மட்டும் படம் 2 கோடி 75 லட்சம் ரூபாய் வசூல் செய்திருக்கிறதாம். வார நாட்களிலும் இந்த அளவுக்கு வசூல் வருவது படத்தின் மீது இருக்கும் நல்ல வார்த்தை பரவலை காட்டுகிறது.
இந்த படம் சுமார் 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த அளவில் பார்த்தால், வெளியான சில நாட்களிலேயே முதலீட்டை மீட்டுவிட்டது மட்டுமல்லாமல் லாபப் பாதையிலும் நுழைந்திருக்கிறது.

சிவகார்த்திகேயனுக்கு இரட்டை சந்தோஷம்
ஒரு பக்கம் நடிகராக தொடர்ந்து வெற்றி, இன்னொரு பக்கம் தயாரிப்பாளராக நல்ல உள்ளடக்கத்துடன் லாபம் தரும் படங்கள் - இது சிவகார்த்திகேயனுக்கு பெரிய பிளஸ். பெரிய மாஸ் படம் இல்லாமல், கதை மற்றும் நடிப்பை நம்பி வந்த ஒரு படம் இவ்வளவு வரவேற்பு பெறுவது அவருடைய தயாரிப்பு தேர்வுக்கும் ஒரு பாராட்டு.
இனி வரும் நாட்களில் வசூல் எப்படி இருக்கும் என்பதே பெரிய கேள்வி. ஆனால் தற்போதைய நிலவரத்தைப் பார்த்தால், தாய் கிழவி தியேட்டர்களில் இன்னும் சில வாரங்கள் நல்ல ஓட்டம் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு நல்ல கதை, வலுவான நடிப்பு, சரியான நேரத்தில் வெளியீடு - இந்த மூன்றும் சேர்ந்தால் என்ன ஆகும் என்பதற்கு தாய் கிழவி ஒரு நல்ல உதாரணம் என்று சொல்லலாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications