Thaai Kizhavi Review: தாய் கிழவி எப்படி இருக்கு? ராதிகா நடிப்பு ஓகே.. ஆனால் இதுதான் படத்தின் பிளஸ்!
சென்னை: தமிழ் சினிமாவில் பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து முழு கதையையும் நகர்த்தும் படங்கள் மிகவும் குறைவு. அந்த வரிசையில் தன்னுடைய அழுத்தமான கண்டன்டாலும், வித்தியாசமான கதை சொல்லும் முறையாலும் கவனம் ஈர்த்திருக்கிறது தாய் கிழவி (Thaai Kizhavi review). அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார்.

தாய் கிழவி கதை
கருமாத்தூர் கிராமத்தில் வட்டித் தொழிலில் ஈடுபட்டு, யாருக்கும் தலைகுனியாமல் வாழும் அதிகாரம் மிக்க பெண் பவுனுத்தாயியாக ராதிகா சரத்குமார் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். தன் பிள்ளைகளுக்கே பயத்தை ஏற்படுத்தும் அளவுக்கு கட்டுப்பாட்டுடன் வாழும் இவர் திடீரென பக்கவாதத்தால் பாதிக்கப்படுகிறார்.
பேச முடியாத நிலையில், ஒரு கை விரல் மூலம் அவர் தெரிவிக்க முயலும் ரகசியம் என்ன, 160 பவுன் நகையைச் சுற்றி உருவாகும் பிரச்சனை குடும்பத்தை எவ்வாறு பாதிக்கிறது, இறுதியில் அவர் சொல்ல விரும்பிய உண்மை என்ன என்பதே படத்தின் மையம்.
நடிப்பு
இந்தப் படம் முழுவதும் ராதிகாவின் தோள்களில் பயணம் செய்கிறது. பாட்டி தோற்றம், உடல் மொழி, கண்ணால் மட்டுமே உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தருணங்கள் என அவர் வழங்கியிருக்கும் நடிப்பு மிகவும் இயல்பாகவும் தாக்கமிக்கதாகவும் இருக்கிறது.
மகன்களாக வரும் அருள்தாஸ் மற்றும் பால சரவணன் கதைக்கு தேவையான உணர்ச்சிகளை அளிக்கிறார்கள். சிங்கம்புலி கமல் ரசிகராக வரும் பகுதிகள் படத்திற்கு இடைப்பட்ட நகைச்சுவைத் துளிகளை சேர்க்கின்றன. முனீஸ்காந்த் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் அந்த மண்ணின் மனிதர்களைப் போன்ற இயல்புடன் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பம்
நிவாஸ் கே பிரசன்னா இசை காட்சிகளின் உணர்ச்சியை உயர்த்துகிறது. கிராமத்து வாழ்வியலை நெருக்கமாகப் பதிவு செய்துள்ள ஒளிப்பதிவு படத்தின் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது.
படத்தின் பலம்
ஸ்ட்ராங்கான தாய் கிழவி தான் தான் மையக் கதை, ராதிகாவின் ஆழமான நடிப்பு, இயல்பான கிராமத்து பின்னணி, பெண்களின் சுயமரியாதையை பேசும் வசனங்கள் பலராலும் பாராட்டப்படும்.
குறைகள்
இரண்டாம் பாதியில் சில இடங்களில் வேகம் குறைவது போன்ற உணர்வு, நகை தொடர்பான பகுதி சற்றே நீளமாகத் தோன்றுகிறது.
நெட்டிசன் கருத்து
சுதந்திரமாக வாழும் பெண்ணின் வாழ்க்கையை காட்டியிருப்பது, ராதிகாவின் மிரட்டலான நடிப்பு, இன்டர்வல் காட்சி, பெண்கள் முன்னேற்றத்தை பேசும் கதை ஆகியவை சமூக வலைதளங்களில் பாராட்டப்பட்டுள்ளன. குடும்பத்துடன் பார்க்கக்கூடிய, மனதைத் தொடும் படம் என்ற கருத்தும் அதிகமாக பதிவாகியுள்ளது.
வழக்கமான வசூல் அம்சங்களைத் தாண்டி, வயதான பெண்ணை மையமாக வைத்து அதிகாரம், குடும்பம், சுயமரியாதை ஆகியவற்றை பேசும் ஸ்ட்ராங்கான கன்டென்ட் படம் தான் தாய் கிழவி. ராதிகாவின் நடிப்பை ரசிக்க வேண்டிய முக்கியமான திரைப்படமாக இது அமைகிறது.
மொத்தத்தில், கமர்சியல் சார்ந்த படங்களை விரும்புவோருக்கு கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமாக தாய் கிழவி திகழ்கிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications