Raja Saab review: பேய் படத்தை இப்படி பண்ணி வச்சிருக்கீங்களே! பிரபாஸின் தி ராஜா சாப்- யை பங்கம் பண்ணிய ப்ளூசட்டை மாறன்
சென்னை: பொங்கல் ரிலீஸ் என்றாலே கொண்டாட்டம், குடும்பம், திரையரங்குகள் நிரம்பும் கூட்டம் என்று இருந்த காலம் போய், தற்போது "இந்த தடவை எந்த படம் மொக்கை?" என்ற கேள்வியோடு ரசிகர்கள் தியேட்டர் போகும் நிலை உருவாகி விட்டதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. அந்த வரிசையில், பிரபாஸ் நடிப்பில், மாருதி இயக்கத்தில் வெளியான 'தி ராஜா சாப்' திரைப்படம், ரிலீஸ் ஆன சில மணி நேரங்களிலேயே கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.

பான் இந்தியா ஹீரோ
ஒரே ஊர், ஒதுக்குப்புறம் அமைந்த பேய் பங்களா, அதற்குள் மூன்று ஹீரோயின்களுடன் ஜாலியாக பிக்னிக் போகும் பிரபாஸ் - இதுதான் 'தி ராஜா சாப்' படத்தின் மையக் கதை. பேய் படம் என்ற பெயரில் தொடங்கும் இந்த திரைப்படத்தில், பேய் அமாவாசை நாளில் மட்டும் எட்டிப் பார்க்கிறது. அதுவும் பயமுறுத்த அல்ல; "டைம் கிடைச்சா வர்றேன்" என்ற ரேஞ்சுக்கு.
ராஜா சாப் படத்தை பற்றி ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில், இந்த படம் எந்த ஜானருக்கும் சரியாக சேர்ந்ததில்லை என கடுமையாக சாடியுள்ளார். காதல் காட்சிகள் ரசிக்கும்படி இல்லை, காமெடி காட்சிகள் சிரிப்பை வரவழைக்கவில்லை, பேய் படமாக எந்த திகிலும் இல்லை. "மொத்தத்தில் கதையே இல்லாமல் ஒரு பான் இந்தியா ஹீரோவை வைத்து மூன்று மணி நேரம் டார்ச்சர் செய்துள்ளார் இயக்குநர் மாருதி" என அவர் பங்கம் செய்துள்ளார்.
3 மணி நேர சித்ரவதை
ஆதிபுருஷ் படம் வெளியானபோது, "3 மணி நேர முப்பரிமாண சித்ரவதை" என விமர்சிக்கப்பட்டது அனைவருக்கும் நினைவிருக்கும். அதே வகையான அனுபவத்தை 'தி ராஜா சாப்' மூலம் பிரபாஸ் மீண்டும் கொடுத்துள்ளார் என ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார். அரத பழைய கதையை எடுத்துக் கொண்டு, அதிலும் எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் இழுத்து வைத்துள்ளதாக அவர் கிண்டலடித்துள்ளார்.

மூன்று ஹீரோயின்கள்
பேய்கள் சுற்றும் வீட்டில், பிரபாஸ் மூன்று ஹீரோயின்களுடன் மாறி மாறி ரொமான்ஸ் செய்கிறார். "அதாவது, அந்த காதல் காட்சிகளாவது ஓகேவா?" என்றால், அதுவும் இல்லை என விமர்சனம். காதல், காமெடி, ஹாரர் மூன்றிலும் தோல்வி அடைந்த படம் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
"படத்தில் வரும் பேய் கூட பயமில்லை. ஆனால் பிரபாஸின் மோசமான மேக்கப், முகத்தை பட்டி டிக்கரிங் பண்ணி போட்ட CGI பார்த்து தான் பயந்துட்டேன்" என ப்ளூ சட்டை மாறன் கடுமையாக கிண்டலடித்துள்ளார். பேய் படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு, விஷுவல் எஃபெக்ட்ஸே பயமூட்டும் அனுபவமாக மாறியதாக கூறப்படுகிறது.
பொங்கல் ரிலீஸ்
விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு, கடந்த ஆண்டுகளின் பொங்கல் ரிலீஸ் தோல்விகள் என தொடர்ச்சியாக பெரிய நட்சத்திர படங்கள் ஏமாற்றி வருவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அந்த பட்டியலில் இப்போது 'தி ராஜா சாப்' இணைந்துள்ளதாக விமர்சனம்.
'தி ராஜா சாப்' என்பது பேய் படமா, காமெடி படமா, லவ் ஸ்டோரியா என்றே தெரியாமல் ஓடும் படம் என விமர்சகர்கள் கூறுகின்றனர். பெரிய ஹீரோ, பெரிய பட்ஜெட், பான் இந்தியா லேபிள் இருந்தாலும், உள்ளடக்கம் இல்லையென்றால் ரசிகர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்பதற்கு இந்த படம் இன்னொரு உதாரணமாக மாறியுள்ளது.
பொங்கல் பண்டிகை என்றாலே கொண்டாட்டம் வேண்டும் என்ற ரசிகர்களின் ஆசையை, இந்த படம் மீண்டும் ஒரு முறை சிதைத்துள்ளதாக சமூக வலைதளங்கள் முழுக்க விவாதம் நீடித்து வருகிறது. ஏற்கனவே பொங்கலுக்கு ஜனநாயகன், பராசக்தி வருமா? வராதா? என்று கேள்வியோடு இருக்கும் ரசிகர்களுக்கு இப்போது வெளியான பிரபாஸின் படம் கூட மொக்கை கதை என்று வருத்தத்தை கொடுத்திருக்கிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications