The Raja Saab Review: பிரபாஸின் தி ராஜா சாப் எப்படி இருக்கு? வெர்த்தா, இல்லையா? ட்விட்டர் ரிவ்யூ
சென்னை: பாகுபலி மூலம் பான் இந்தியா உச்சத்தில் நின்ற பிரபாஸ், அதன் பிறகு தன்னுக்கென தனி இடம் பிடிக்கப் போராடி வரும் நிலையில், இந்த பொங்கலுக்கு வெளியாகியுள்ள "தி ராஜா சாப்" அந்த தேடலுக்கு பதிலா... இல்லை புதிய கேள்வியா என்றே ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர்.
மாருதி இயக்கத்தில், ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் பிரபாஸ் - ராஜாவாக, சஞ்சய் தத் - கனக ராஜூவாக மிரட்ட, நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ரித்தி குமார் மூவரும் கவர்ச்சியில் எந்தக் குறையும் வைக்கவில்லை. ஆனாலும், 189 நிமிட நீளத்தில் படம் ஓடும்போது ரசிகர்களின் பொறுமையும் கூட ஓடிவிடுகிறது என்பதே கசப்பான உண்மை.

தி ராஜா சாப் கதை
அல்சைமர் பாதிக்கப்பட்ட பாட்டி, காணாமல் போன தாத்தா, நர்சாபூர் காட்டுக்குள் இருக்கும் மர்ம கோட்டை, அதில் நடக்கும் தந்திரங்கள், பேய்... பயம்... காமெடி... எல்லாமே இருக்கிறது. ஆனால் எல்லாம் சரியான அளவா கலந்து இருக்கிறதா என்றால், அங்குதான் படம் சறுக்குகிறது.
நிறைவேற்றம் குறைவு
பிரபாஸ் ஸ்டைலிஷ், துடிப்பு, எனர்ஜி - எல்லாமே இருக்கிறது. "இப்படியான ஹாரர் காமெடி படத்தில் பிரபாஸ் எப்படி ஒத்துக்கிட்டார்?" என்ற ஆச்சரியமும் கூட ரசிகர்களுக்கு வருகிறது. ஆனால், திரைக்கதையில் தேவையில்லாத காதல் பாடல்கள், நீளமான காட்சிகள், சரியாக வேலை செய்யாத சவுண்ட் மிக்ஸிங் ஆகியவை படம் பார்க்கும் அனுபவத்தை தடை செய்கின்றன.
இதனால் பாடல் வரிகளும், சில வசனங்களும் "இது பேயா பேசுது? இல்ல சவுண்ட் இன்ஜினியரா?" என்ற அளவுக்கு புரியாமல் போயுள்ளது.
சோஷியல் மீடியா ரியாக்ஷன்
"படம் நல்லா இல்லைன்னா என் வீட்டுக்கு வந்து கேளுங்க" என்று இயக்குநர் மாருதி அட்ரஸ் வரை கொடுத்த நிலையில், ரசிகர்கள் உண்மையிலேயே அவரது வீட்டை முற்றுகையிடப் போகிறார்கள் போல சோஷியல் மீடியாவில் ஒரே கிண்டல் மழை.
ஆதி புருஷுக்கு அப்புறம் பிரபாஸுக்கு இன்னொரு வொர்ஸ்ட்!. தி ராஜா சாப் இல்ல... பிரபாஸ் பொட்டென்ஷியல் சாப்!" ஸ்பிரிட் படத்தில் சந்தீப் ரெட்டி வங்கா எடுத்த கிளாஸ் இங்க வரலை!" என்று ட்விட்டர் முழுக்க ட்ரோல்களே ஆட்சி.
குறிப்பாக, குவாலிட்டி இல்லாத CGI, வயதான லுக் மேக்கப், மனித பிரமிட் செய்து பானை உடைக்கும் இன்ட்ரோ காட்சி - எல்லாமே "குருவி படத்தை நினைவு படுத்துது" என்ற அளவுக்கு கலாய்க்கப்படுகிறது.
பாசிட்டிவ் கொஞ்சம் இருக்கு
அதே சமயம், "பொங்கலுக்கு ஏத்த ஃபேமிலி எண்டர்டெயினர், இரண்டாம் பாதி சூடுபிடிக்கும், "கிளைமேக்ஸ் பக்கா பீக் என்று படம் திகிலாகவும் ஜாலியாகவும் இருப்பதாக ஒரு தரப்பு ரசிகர்கள் கொண்டாடவும் செய்கிறார்கள்.
Parasakthi first review: பராசக்தி படம் எப்படி இருக்கு? வெளிநாட்டில் இருந்து வந்த முதல் ரிவ்யூ!
பிரபாஸ் கடின உழைப்பை கொட்டியிருக்கிறார். சஞ்சய் தத்தின் வில்லத்தனம் பெரிய பிளஸ். ஆனால், மாருதி நினைத்த அளவுக்கு ராஜா ராஜாவாக எழவில்லை.
ட்ரெய்லரை பார்த்து பெரும் எதிர்பார்ப்புடன் போனால் ஏமாற்றம்... எதையும் எதிர்பார்க்காமல் போனால் ஓரளவு பொங்கல் டைம் பாஸ்! என்று விமர்சனங்கள் வந்திருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications