Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

TN 2026 First Review : நட்டி நட்ராஜின், அரசியல் கலந்த தநா 2026 படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: நட்டி நட்ராஜ் நடிப்பிலும், உமாபதி ராமையா இயக்கத்திலும் உருவாகியுள்ள 'தநா 2026' (TN 2026) படம், ரிலீஸ்க்கு முன்பே பெரிய அளவில் கவனம் ஈர்த்திருந்தது. இன்று ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம், ஒரு சாதாரண கமெர்ஷியல் படமாக இல்லாமல், அரசியல் பின்னணியைக் கொண்டதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியது.

TN 2026 Natti Natraj Vijay Tamil Cinema

டீசர் வெளியானதும் கிளம்பிய விவாதம்

படத்தின் டீசர் வெளியான தருணத்திலேயே சமூக வலைதளங்களில் பெரிய அளவில் பேசப்பட்டது. ஒரு நடிகர் அரசியலுக்கு வருவது, ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்ததால், அது விஜய்யின் அரசியல் பயணத்தை நினைவூட்டுகிறது என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.

அதோடு, "தங்க நட்சத்திரம்", "இனி உங்களை தவிர்த்து அரசியல் பேச முடியாது" போன்ற வசனங்கள் நேரடியாக ஒருவரை குறிவைத்து பேசப்படுகிறதா என்ற சந்தேகத்தையும் கிளப்பின. இதனால், படம் ரிலீஸ்க்கு முன்பே சர்ச்சையின் மையமாக மாறியது.

ஸ்டைல் பிரதிபலிப்பு

இந்த படத்தில் நட்டி நட்ராஜின் தோற்றம் கூட அதிகமாக பேசப்பட்டது. சால்ட் & பெப்பர் தாடி, உடை ஸ்டைல், நடை, உடல் மொழி போன்றவை சிலருக்கு விஜய்யை நினைவூட்டும் வகையில் இருந்ததாக ரசிகர்கள் கூறினர். இதுவும் சர்ச்சைக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

போஸ்டர் முதல் பஞ்ச் டயலாக்ஸ் வரை

'Time to Lead' என்ற டேக்லைன் கொண்ட போஸ்டர் வெளியானதும், அது சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு முன்பும் இதே மாதிரி வாசகங்கள் சர்ச்சையை கிளப்பியிருந்ததால், இந்த படமும் அதே பாதையில் போகுமா என்ற எதிர்பார்ப்பு உருவானது.

மேலும், சில வசனங்கள் மற்றும் காட்சிகள், தற்போதைய அரசியல் சூழ்நிலையையும், சில சினிமா பிரபலங்களையும் மறைமுகமாக விமர்சிக்கிறது என்ற கருத்தும் பரவலாக பேசப்பட்டது.

தேர்தல் நேரத்தில் ரிலீஸ்

இந்த படம் தேர்தல் சூழ்நிலையில் வெளியானது என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம். இதனால், இது வெறும் படம் மட்டுமா அல்லது ஒரு அரசியல் கருத்தா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.

சிலர் இந்த படத்தை நேரடியாக ஒருவரை குறிவைத்து எடுக்கப்பட்டதாக கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். அதே நேரத்தில், மற்றொரு பகுதி ரசிகர்கள் இது முழுக்க கற்பனை கதை என்று ஆதரித்து பேசினர். இதனால், படம் பற்றிய விவாதம் இன்னும் அதிகரித்தது.

முதல் விமர்சனம்

(TN 2026 Review) ரிலீஸ்க்கு முன்பே சிலருக்கு இந்த படம் திரையிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அந்த ஆரம்ப கருத்துகளின் படி, 'தநா 2026' படம் சமகால அரசியலை நேரடியாகவும், தைரியமாகவும் கையாள முயற்சிக்கிறது என்று கூறப்படுகிறது.

படத்தின் பலம்

அரசியல் பின்னணி சித்தரிப்பு, நட்டி நட்ராஜின் நடிப்பு, கவனத்தை ஈர்க்கும் டயலாக்ஸ், சினிமா மற்றும் அரசியல் கலந்த கதை சொல்லல். ஆனால், இந்த மாதிரியான அரசியல் கான்டென்ட் எல்லாருக்கும் ஒரே மாதிரி வேலை செய்யாது என்பதும் குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக ரசிகர் அரசியல் உள்ள இடங்களில் இப்படம் பலவிதமான ரியாக்ஷனை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.

மொத்தத்தில் 'தநா 2026' ஒரு சாதாரண படம் இல்லை; இது பேச வைக்கும் ஒரு முயற்சி. சர்ச்சை, அரசியல், சினிமா மூன்றையும் கலந்த ஒரு படம் என்பதால், இது ரசிகர்களை இரண்டு பிரிவாகப் பிரித்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+