TVK Vijay: ஈரோடு கூட்டத்தில், விஷால் பட்டத்தை தூக்கி விஜய்க்கு கொடுத்த செங்கோட்டையன்.. கலாய்க்கும் ரசிகர்கள்
சென்னை: இரண்டு மாதத்திற்கு பிறகு மறுபடியும் விஜய் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்நாட்டில் சுற்றுப்பயணத்தை தொடங்கி இருக்கிறார். கரூர் சம்பவத்திற்கு பிறகு இன்று ஈரோட்டில் பொது கூட்டம் நடக்கிறது. அதில் பேசிய செங்கோட்டையன் "நாளை தமிழகத்தை ஆளப்போவது புரட்சித் தளபதி விஜய் தான்" என்று பேசி இருக்கிறார். இது இப்போது சோசியல் மீடியாவில் ட்ரோல் ஆகி வருகிறது.
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் இன்று தவெக தலைவர் விஜய் மக்கள் பரப்புரை கூட்டம் நடத்தி இருக்கிறார். கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு 81 நாட்களுக்குப் பின் தமிழ்நாட்டில் பொதுவெளியில் விஜய் பரப்புரை செய்கிறார். அந்த கூட்டத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டுள்ளார்.

செங்கோட்டையனின் சொந்த மாவட்டமான ஈரோட்டில் தான் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சியில் பேசிய செங்கோட்டையன், பெரியார் மண்ணில் இந்த நிகழ்ச்சி நடைபெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த கூட்டத்தை பார்க்கும் போது நாளை தமிழகத்தின் முதல்வர் இவர்தான் என வரலாறு படைக்கும் என்பது போல உள்ளது.
ஆண்டுக்கு 500 கோடி வருவாயை விட்டு மக்களுக்காக சேவை செய்யும் வகையில் வரும் தவெக தலைவர் விஜய். இதற்கு முன்பு புரட்சி தலைவரை பார்த்தேன். இன்று அதேபோல் விஜய்யை நேரில் பார்க்கிறேன்." நாளை தமிழகத்தை ஆளப்போவது புரட்சி தளபதி விஜய் தான்" என்று அந்த நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார்.
இதற்கு சில ரசிகர்கள் புரட்சித்தளபதி பட்டம் ஏற்கனவே விஷால் வைத்திருக்கிறார். அந்த பட்டத்தை அவரிடம் அனுமதி கேட்காமல் செங்கோட்டையன் விஜய்க்கு தூக்கி கொடுக்கிறாரே என்று கலாய்க்கின்றனர். இன்னும் ஒரு சிலர் இதற்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமியை தானே புரட்சி தளபதி அண்ணன் எடப்பாடி என்று சொல்லி வந்தார்கள் இப்போது விஜய் புரட்சி தளபதியா மாறிட்டாரா? இளைய தளபதி பட்டம் அப்போ வாடகைக்கு விடப்பட்டிருக்கிறதா என்றும் கலாய்த்து வருகின்றனர்.
அதேபோல விஜய்யின் ரசிகர்கள் செங்கோட்டையன் பேசியது சரிதான் என்றும் எங்க அண்ணன் விஜய் தான் நாளை தமிழகத்தை ஆளே போகும் புரட்சி தளபதி என்றும் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். செங்கோட்டையன் சொன்ன வார்த்தையை வைத்து இப்போது சோசியல் மீடியாவில் வார்த்தை போர் தொடங்கியிருக்கிறது.
-
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்! -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
விஜய் சினிமாவை விட்டு விலக உண்மையான காரணம் இதுதான்! நேரடியாகவே சொன்னாரு! நடிகர் ஷியாம் ஓபன் -
முதல் நாளே இப்படியா? விஜய் மீது 5 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு! காவல்துறை அதிரடி -
குழந்தையை விட்டு வந்துருக்கோம் எங்க வேதனை புரியுமா..வில்லிவாக்கத்தில் விஜய்யை திட்டி தீர்த்த பெண்கள் -
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 10 நாள் முன்பு ஜாமீனில் வந்தவர் வேட்பாளர்.. விஜய் அறிவிப்பால் சலசலப்பு -
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
மீண்டும் மீண்டுமா? விஜய்யை பார்க்க டிரான்ஸ்ஃபார்மர் மீது ஏற முயன்ற தவெகவினர்! அசம்பாவிதம் தவிர்ப்பு -
ஜோதிடம் மூலம் புற்றுநோய் குணமா.. கோவை தவெக பெண் வேட்பாளரின் சர்ச்சை பின்னணி -
என்ன விஜய் இதெல்லாம்? கம்பத்தில் கதி கலங்கிய தவெக! 'சாதி வெறியன்' என அறிவித்துக்கொண்டவருக்கு சீட்!











Click it and Unblock the Notifications