ஸ்கூட்டரில் வந்த சூப்பர் ஸ்டார்! ரூ.1001 அட்வான்ஸில் உருவான ‘சிவாஜி’.. ஏவிஎம் சரவணனின் சக்ஸஸ் இதுதான்
சென்னை: ஏவி மெய்யப்ப செட்டியாருக்கு 3 பிள்ளைகள் இருந்தாலும், அதில் முக்கியமாகவும், பிரதானமாகவும் பார்க்கப்பட்டவர் சரவணன் சார். காரணம் ஆரம்ப காலங்களில் ஏவிஎம் சரவணன் பொறுப்புக்கு வந்த காலகட்டத்தில்தான், ரஜினி, கமல் இருவருமே உள்ளே வந்தார்கள்.. இவர்களை வைத்து பல படங்களை சரவணன் சார் எடுத்தார்" என்று தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.
Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜிபிரபு, 80 ஆண்டு கால நிறுவனம் ஏவிஎம்.. சினிமா தொழிலின் நெளிவு சுழிவுகளை தெளிவாக அறிந்து செயல்பட்டாதால்தான், அவர்களால் தொடர்ந்து வெற்றி பெற முடிந்தது.. ஒருகட்டத்தில் சினிமா தங்களின் கட்டுப்பாட்டில் இல்லை என்றபிறகுதான், படங்களை தயாரிப்பதை ஏவிஎம் நிறுத்திவிட்டது.

ஏவிஎம் நிறுவனம்
இவ்வளவு பெரிய நிறுவனம், வருடம் ஒரு படமாவது எடுத்திருக்கலாம், ஆனால் முழுக்க முழுக்க ஆபத்தான துறையாக மாறிவிட்டதால், முழுமையாகவே சினிமா எடுப்பதில் இருந்து ஒதுங்கிவிட்டார்கள்.. முதலாளிகளுக்கு மரியாதை தர தெரியாத துறையாக மாறிவிட்டதால், இப்படியொரு முடிவை எடுத்தனர்.
இதில் சரவணன் சாரை யாராலும் மறக்கவே முடியாது.. ஏவி மெய்யப்ப செட்டியாருக்கு 3 பிள்ளைகள் இருந்தாலும், அதில் முக்கியமாகவும், பிரதானமாகவும் பார்க்கப்பட்டவர் சரவணன் சார்.
ஸ்கூட்டரில் ரஜினி
காரணம் ஆரம்ப காலங்களில் ஏவிஎம் சரவணன் பொறுப்புக்கு வந்த காலகட்டத்தில்தான், ரஜினி, கமல் இருவருமே உள்ளே வந்தார்கள்.. இவர்களை வைத்து பல படங்களை சரவணன் சார் எடுத்தார்..
ரஜினிகாந்த் பற்றி சரவணன் சார் ஒரு பேட்டியில், "ரஜினியை சந்திக்க முடியுமா? என்று நேரில் சென்று பார்த்து வாருங்கள்" என்று ஸ்டுடியோவின் புரொடக்ஷன் மேனேஜர் ஒருவரை அனுப்பி வைத்தேன்.
அந்த மேனேஜரும் ஸ்கூட்டர் எடுத்து கொண்டு, ரஜினி இருக்கிறாரா? என்று பார்த்துவர அவரது வீட்டுக்கு சென்றார்.. ஆனால் சிறிது நேரத்தில், அந்த மேனேஜரின் ஸ்கூட்டரிலேயே ஏறி ஸ்டுடியோவுக்கு வந்துவிட்டார் ரஜினி..
ஏவிஎம் சரவணன்
எனக்கு ஆச்சரியமாக போய்விட்டது.. "என்ன சார் நீங்க வருவீங்கன்னு தெரிந்திருந்தால், கார் அனுப்பி இருப்பேனே? என்றேன். அதற்கு ரஜினி, "பரவாயில்லை சார், நீங்க பார்க்கணும்னு சொல்லவும் உடனே வந்துட்டேன்" என்றார்.. இப்படித்தான் ஏவிஎம்-க்கும், ரஜினிக்கும் உறவு ஆரம்பமானது. 9 படங்கள் ஏவிஎம்முக்காக ரஜினி நடித்து தந்துள்ளார்" என்று கூறியிருந்தார் ஏவிஎம் சரவணன்.
ஒருமுறை ரஜினியை வைத்து ஒரு படம் எடுக்க, ஸ்கிரிப்ட்டை தயார் செய்து வைத்திருந்தாராம் டைரக்டர் ஷங்கர். ஆனால் ரஜினிக்கு தேதி தருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த கோபத்தில் ஷங்கரும், இனிமேல் ரஜினிக்கு படம் இயக்க மாட்டேன் என்று கோபத்தில் இருந்தாராம்..
ரூ.1001 ரூபாய் அட்வான்ஸ்
இந்த நேரத்தில்தான், ஒருமுறை ஏவிஎம்மில் நடிக்க வேண்டும் என்று ரஜினிக்கே விருப்பம் வந்து கேட்டுள்ளார்.. அதற்கு சரவணன், பெரிய பட்ஜெட்டில் ஷங்கரை வைத்து எடுக்கலாம் என்று சொல்லி உள்ளார்..
உடனே ரஜினி, என் மீது ஷங்கர் கோபமாக இருக்கிறார் போலும் என்றாராம்.. அதற்கு சரவணன், அதெல்லாம் கவலைப்படாதீங்க, நாங்கள் போய் பேசுறோம் என்று சொல்லி, அந்த விஷயத்தை சரிசெய்தார்.. திடீரென படம் முடிவாகிவிட்டதாலும், அன்றைய தினம் நல்ல நாள் என்பதாலும், ரஜினி, ஷங்கர் இருவருக்கும் 1001 ரூபாய் அட்வான்ஸ் தரப்பட்டுள்ளது.. படம் முழுக்க இந்த அட்வான்ஸ் 1001 மட்டுமே பெற்று ரஜினி நடித்தார்..
அதற்கு பிறகு, படம் முடிந்ததுமே ரஜினிக்கான சம்பளம், ஷங்கருக்கான சம்பளத்தை ஏவிஎம் வழங்கிவிட்டது.. இப்படி உருவானதுதான் ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி நடித்த சிவாஜி படம்.. அந்தவகையில், இந்த சிவாஜி படத்தை செயலாக்கம் செய்ததே ஏவிஎம் சரவணன்தான்" என்றெல்லாம் புகழ்ந்து கூறியிருக்கிறார்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications