“வரலாறு” பட சின்ன அஜித் இப்படி மாறிட்டாரா? இத்தனை படங்களில் நடித்தும் தற்போதைய நிலை! உருக்கமான தகவல்
சென்னை: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்த பலர், காலப்போக்கில் முற்றிலும் மாறி ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவது புதுசல்ல. அந்த வரிசையில் தற்போது பேசப்பட்டு வருபவர், அஜித் குமார் நடித்த வரலாறு படத்தில் சிறுவயது அஜித்தாக நடித்த சச்சின் லக்ஷ்மணன் தான்.

அந்த பையனா இது?
சமீபத்தில் சமூக வலைதளங்களில் சச்சின் லக்ஷ்மணன்-ன் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. அதை பார்த்த ரசிகர்கள், "வரலாறு படத்துல இருந்த அந்த குட்டி பையனா இது?""முழுக்க மாறிட்டாரே!" என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
வரலாறு முக்கியமான பாத்திரம்
2006-ம் ஆண்டு கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான வரலாறு படம், அஜித் குமார்-க்கு மிக முக்கியமான படங்களில் ஒன்று. அதில் அவர் அப்பா மற்றும் இரட்டை மகன்கள் என மூன்று வேடங்களில் நடித்திருந்தார். இந்த படத்தில் சிறுவயது அஜித்தாக, குறிப்பாக "தீயில் விழுந்த தேனா" பாடலில் தாய்க்காக ஏதையும் செய்யும் பாசமான பையனாக நடித்தது தான் சச்சின் லக்ஷ்மணன்-க்கு பெரிய கவனத்தை பெற்றுத்தந்தது.
பல ஹிட் படங்களில் குழந்தை நட்சத்திரம்
வரலாறு மட்டும் அல்லாமல், சச்சின் லக்ஷ்மணன் பல முக்கியமான படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அர்ஜுன் நடித்த கிரி, விஜய் நடித்த திருப்பாச்சி, சூர்யா - ஜோதிகா நடித்த சில்லுனு ஒரு காதல் போன்ற இப்படங்களில் சின்ன வேடங்களாக இருந்தாலும், அவர் நடித்த காட்சிகள் ரசிகர்களுக்கு நினைவில் நிற்கும் வகையில் இருந்தது.
அதிலும் கிரி படத்தில் கதையே இவரை வைத்து தான். இவரை கொலை செய்வதற்காகத்தான் வில்லன் குரூப் சுற்றிக் கொண்டிருக்கும். அப்போது குழந்தையாக இவருடைய குட்டி குட்டி ரியாக்சன் கூட அப்போது பலருக்கும் பிடித்திருந்தது. அர்ஜுன் கையில் குட்டி குழந்தையாக இருந்த இவர் இப்போது வளர்ந்த இளைஞராக மாறி இருக்கிறார்.
அஜித் - விஜய் குறித்து அவர் சொன்ன நினைவுகள்
சமீபத்திய பேட்டியில், சச்சின் லக்ஷ்மணன் சில சுவாரஸ்யமான விஷயங்களையும் பகிர்ந்துள்ளார். வரலாறு படப்பிடிப்பின்போது, அஜித் குமார் தன்னிடம் "படிப்பை எப்போதும் விடக்கூடாது" என்று கூறியதாக அவர் நினைவுகூர்ந்துள்ளார். அதேபோல், திருப்பாச்சி படப்பிடிப்பில் விஜய் தினமும் "குட் மார்னிங்" சொல்லி பேசுவார் என்ற இனிய அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார்.

சினிமாவை விட்டு வேறு பாதை
குழந்தை நட்சத்திரமாக நல்ல அடையாளம் பெற்றிருந்தாலும், சச்சின் லக்ஷ்மணன் பின்னர் சினிமாவில் தொடர்ந்து நடிக்கவில்லை. அவரது கவனம் முழுவதும் படிப்புக்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் மாறியது.
தற்போது அவர் சினிமாவுக்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறாராம் ஆனால் அவர்களுக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்று ஒரு பேட்டியில் உருக்கமாக பேசியிருந்தார் அதே நேரத்தில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக தான் இருக்கிறார் சில போட்டோ ஷூட் புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.
ஒரு காலத்தில் திரையில் கண்ணீர் வரவைத்த அந்த சிறுவன்... இன்று முற்றிலும் மாறி பெரியவராக ரசிகர்களை ஆச்சரியப்படுத்துகிறார். சச்சின் லக்ஷ்மணன் மீண்டும் திரைக்கு வருவாரா என்பது தெரியவில்லை. ஆனால் வரலாறு பார்த்தவர்களுக்கு, அந்த சிறுவன் நினைவு இன்னும் புதிதாகவே இருக்கிறது என்பதே உண்மை.












Click it and Unblock the Notifications