பட விழாவில் ஜனநாயகன் மற்றும் துரந்தர் படத்தை விமர்சித்த வெற்றிமாறன்.. இவ்வளவு ஓபனா பேசிட்டாரே!
சென்னை: சென்னையில் நடைபெற்ற "நீளிரா" திரைப்பட ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் வெற்றிமாறன் பேசிய கருத்துகள் தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. குறிப்பாக அவர் கூறிய சில வார்த்தைகள், சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய "ஜனநாயகன்" திரைப்படத்தை மறைமுகமாக சீண்டியதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் நடிகர் ராணா டகுபதி இணைந்து தயாரித்துள்ள "நீளிரா" திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், அதன் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இதில் லோகேஷ் கனகராஜ், ராஜு முருகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு படத்தை பாராட்டினர்.

வெற்றிமாறன் பேச்சு
இந்த நிகழ்ச்சியில் பேசிய வெற்றிமாறன், "இந்த படத்தில் வெளிப்படையான வன்முறை காட்சிகள் இல்லையென்றாலும், உணர்ச்சிப்பூர்வமான வன்முறை மிகவும் ஆழமாக இருக்கிறது. ஒரு போர் மனிதர்களின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை இந்த படம் மிக நேர்த்தியாக காட்டுகிறது" என்று முதலில் பாராட்டினார்.
சர்ச்சை கேள்வி
ஆனால் அதற்குப் பிறகு அவர் casually கேட்ட ஒரு கேள்விதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் இயக்குநரை பார்த்து, "இந்த படம் சென்சாரில் ரிவைஸ் கமிட்டிக்கு போய்ச்சா?" என்று சிரிப்புடன் கேட்டார். அதற்கு இயக்குநர் "முதலிலேயே சான்றிதழ் கிடைத்துவிட்டது" என்று பதிலளித்தார்.
ஜனநாயகன் பிரச்சனை
இந்த ஒரு கேள்வி தான் தற்போது பெரிய விவாதமாக மாறியுள்ளது. சமீபத்தில் "ஜனநாயகன்" திரைப்படம் சென்சார் சான்றிதழ் தொடர்பாக சந்தித்த சிக்கல்களை மனதில் கொண்டு தான் வெற்றிமாறன் இந்த கேள்வியை எழுப்பியிருக்கிறார் என சிலர் கருதுகின்றனர். சில படங்கள் தணிக்கை குழுவில் சிக்கிக்கொள்ளும் நிலையில், சில படங்கள் எளிதாக சான்றிதழ் பெறுவது குறித்து அவர் மறைமுகமாக கிண்டல் செய்தாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மேலும், ராஜு முருகன் தனது பேச்சில் "போர் பற்றி பேசும் படமாக இருந்தும், வன்முறை காட்சிகள் இல்லாமல் சென்சார் சான்றிதழ் பெற்றிருப்பது ஒரு புத்திசாலித்தனமான அணுகுமுறை" என்று கூறியது, இந்த விவாதத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
ஜனநாயகனின் “Mute” செய்யப்பட்ட அரசியல் வசனம்.. இதுதான் காரணமா? விஜய்க்கு கிடைக்கும் நிம்மதி!
அதுபோல வெற்றிமாறன் பேசும்போது, இந்த படம் பிரச்சாரத்தை தாங்கி பிடிக்க கூடிய படம் அல்ல.. இது பல நூறு கோடி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வன்முறையையோ வெறுப்பையும் தூக்கி பிடிக்கிற படம் இல்லை என்று சொல்லி இருக்கிறார். இதை இவர் சொன்னதற்கு காரணம் துரந்தர் படத்தை பார்த்துதான் இவர் இப்படி பேசினார் என்றும் சில தகவல்கள் பரவி வருகிறது.
மொத்தத்தில், வெற்றிமாறன் பேசிய அந்த ஒரு வரி, "ஜனநாயகன்" போன்ற படங்களை மறைமுகமாக சுட்டிக்காட்டியதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி, தமிழ் சினிமாவில் மீண்டும் சென்சார் சர்ச்சையை தீவிரப்படுத்தியுள்ளது.
-
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications