தமிழ்நாட்டு நிலைமை.. சட்டசபையில் நடந்த சம்பவம்! குருவி ! பிரபலம் என்ன இப்படி சொல்லுறாரு!
சென்னை: தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் விஜய் முதலமைச்சர் ஆனது ஒரே நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது தான் தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாக பேசப்பட்டு வருகின்றன. நடிகரும் தவெக தலைவருமான விஜய் முதலமைச்சராக பதவியேற்றதையடுத்து, அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள சினிமா தொடர்பான விவாதங்களும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

சட்டப்பேரவை நிகழ்ச்சி
நேற்று விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்ற நிலையில், இன்று சட்டப்பேரவையில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்று பதவியேற்றனர். இந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. குறிப்பாக, அரசியல் ரீதியாக எதிர்கட்சிகளாக இருக்கும் இருவரும் ஒரே இடத்தில் இருந்த தருணம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
குருவி பட சம்பவம்
இந்த சூழலில், பழைய சினிமா தொடர்புகளும் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற "குருவி" திரைப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் தரணி இயக்கியிருந்தார். ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்து வந்த இந்த திரைப்படம் அப்போது ரசிகர்களிடையே பெரிய அளவில் பேசப்பட்டது. மேலும், இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹீரோவும், தயாரிப்பாளரும்
இதனால், ஒருகாலத்தில் ஹீரோவும் தயாரிப்பாளரும் ஆக இணைந்திருந்த விஜய் மற்றும் உதயநிதி ஸ்டாலின், இன்று அரசியல் அரங்கில் எதிரெதிர் தரப்பில் அமர்ந்திருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை மையமாகக் கொண்டு, திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதளத்தில் "குருவி படத்தின் ஹீரோவும் தயாரிப்பாளரும் சட்டமன்றத்தில் சந்திப்பு" என பதிவிட்டது வைரலாகி வருகிறது.
விஜய், உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு
அதே நேரத்தில், விஜய் பதவியேற்ற விழாவில் நடந்த சில நிகழ்வுகளும் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக, உதயநிதி ஸ்டாலின் முகத்தை திருப்பிக் கொண்ட சில புகைப்படங்கள் வைரலாகி, பல்வேறு கருத்துக்களை கிளப்பியுள்ளது. இது உண்மையா அல்லது தவறான புரிதலா என்ற விவாதமும் சமூக வலைதளங்களில் நடந்து வருகிறது.
முன்பு நட்பாக இருந்த இருவரும் தற்போது அரசியல் ரீதியாக எதிர்க்கட்சிகளில் முக்கிய பதவிகளில் இருப்பது, எதிர்கால அரசியல் சூழலை மேலும் சுவாரஸ்யமாக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். "இனி தான் அரசியல் ஆட்டம் ஆரம்பம்" என ரசிகர்களும், நெட்டிசன்களும் தொடர்ந்து கருத்துகளை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications