விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள்
சென்னை: நடிகர் விஜய் குறித்து சமீபத்தில் வெளிவந்த ஒரு பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. விஜய்யின் முன்னாள் மேனேஜரான பி.டி. செல்வகுமார் அளித்த இந்த பேட்டியில், விஜய்யின் ஆரம்ப கால கேரியரில் நடந்த முக்கிய சம்பவங்கள் குறித்து சில அதிர்ச்சியான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

விஜய்யின் கேரியரை மாற்றிய திருப்பம்
இன்று விஜய்யின் வாழ்க்கையில் மிகப்பெரிய மைல்கல்லாக பேசப்படும் பூவே உனக்காக படத்தை பற்றி பி.டி. செல்வகுமார் கூறியதாவது, ஒரு நாள் தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி அலுவலகத்திற்கு சென்றபோது, "பூவே உனக்காக" படத்தின் கதையை உன்னிடம் சொன்னார்கள். அந்த கதை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. உடனே, "இந்த கதையில் விஜய்யை நடிக்க வைத்தால் அவருடைய கேரியருக்கு பெரிய உதவியாக இருக்கும்" என்று நினைத்தேன்.
அதற்காக அவர் உடனடியாக விஜய்யின் தந்தையான எஸ்.ஏ. சந்திரசேகருக்கு போன் செய்து, நேரில் வரச் சொன்னேன். ஆனால் அந்த நேரத்தில், அந்த படத்தில் ஹீரோவாக நடிக்க முதலில் திட்டமிட்டது பிரசாந்த் தான். அவருக்காக சம்பளச் செக்கும் தயாராக வைத்திருந்தாரார் ஆர்.பி. சவுத்ரி என்று செல்வகுமார் பேசி இருக்கிறார்.
அந்த சமயத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் வந்து பேசிக் கொண்டதன் பிறகு தான், பிரசாந்துக்காக எழுதப்பட்டிருந்த செக்கை கிழித்துவிட்டு, விஜய்யை ஹீரோவாக ஒப்பந்தம் செய்தார்கள் என்று பி.டி. செல்வகுமார் தெரிவித்துள்ளார். இந்த ஒரு முடிவுதான் விஜய்யின் கேரியரை முற்றிலும் மாற்றிய ஒரு முக்கிய திருப்பமாக பின்னர் அமைந்தது என்று கூறி இருக்கிறார்
யூத் படத்தை ஹிட்டாக்கிய 'வில்லங்க' ஐடியா
அதற்குப் பிறகு, யூத் படம் குறித்து பி.டி. செல்வகுமார் கூறிய தகவலும் தற்போது அதிகம் பேசப்படுகிறது. வின்சென்ட் செல்வா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விஜய்யுடன் சந்தியா, விவேக், விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் வந்த "ஆள் தோட்ட பூபதி நானடா" பாடல் அந்த காலத்திலேயே மிகப்பெரிய ஹிட்டானது. விஜய்யும், சிம்ரன் இணைந்து ஆடிய அந்த பாடல் இன்னும் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.
ஆனால், படம் வெளியான ஆரம்ப நாட்களில் விநியோகஸ்தர்கள் இந்த படம் "சுமார்" என்று கூறியதாக பி.டி. செல்வகுமார் தெரிவித்துள்ளார். அப்போது தான் அவர் ஒரு வித்தியாசமான முடிவு எடுத்தாராம். விஜய் ரசிகர்களுக்கு நேரடியாக போன் செய்து, "ஆள் தோட்ட பூபதி" பாடல் எப்படி இருக்கிறது என்று கேட்டிருக்கிறார். அதற்கு ரசிகர்கள் "சூப்பர்" என்று கூறியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து, அவர் ரசிகர்களிடம் சொன்னதாக கூறிய விஷயம் தான் தற்போது சர்ச்சையாக பேசப்படுகிறது: "யூத் படத்தை விளம்பரம் செய்ய, அந்த பாடலுக்கு தியேட்டரில் டான்ஸ் ஆடி ஸ்கிரீனை கிழித்துவிடுங்கள்" என்று ரசிகர்களிடம் கூறியதாக பி.டி. செல்வகுமார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, தியேட்டர்களில் ரசிகர்கள் உற்சாகமாக ஆடி, ஸ்கிரீனை கிழித்த சம்பவம் நடந்தது. பின்னர் "விஜய் ரசிகர்கள் ஸ்கிரீனை கிழித்தனர்" என்ற செய்தி தீயாக பரவி, அதுவே படத்திற்கு பெரிய பப்ளிசிட்டியாக மாறியது. அந்த செய்தி வெளியான பிறகு தான், தியேட்டர்களுக்கு கூட்டம் அதிகரித்து, படம் ஹிட்டானது என்றும் அவர் கூறியுள்ளார்.
அரசியல் சூழலில் கிளம்பிய சர்ச்சை
இந்த பேட்டி வெளிவந்துள்ள நேரமும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறார் என்ற சூழலில், அவரை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து உருவாகி வருகின்றன. இந்த நிலையில், அவருடைய முன்னாள் மேனேஜரே இப்படியான தகவல்களை வெளியிட்டிருப்பது ரசிகர்களிடம் கலவையான உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்கள் மனநிலை
விஜய் ரசிகர்கள் மத்தியில் இந்த விவகாரம் ஒரு அளவுக்கு வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. "இப்போதே தேவையா இப்படிப் பேசுவது?" என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதே நேரத்தில், சிலர் "இது பழைய சம்பவம்... இப்போதைய விஜய்யுடன் இதை இணைக்க வேண்டாம்" என்றும் கூறி அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications