சூட்டிங் ஸ்பாட்டில் விஜய் கன்னத்தில் அறைஞ்சுட்டாரு! அடுத்த நாள் நடந்த சம்பவம்.. உதவியாளர் குற்றசாட்டு
சென்னை: நடிகர் விஜய் என்று சேலத்தில் நடத்திய பரப்புரையின் போது ரசிகர் ஒருவர் உடல்நிலை குறைபாடு ஏற்பட்டு மரணம் அடைந்த செய்தி சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விஜய்யின் உதவியாளர் விஜய் குறித்து சில குற்றசாட்டுகளை வைத்து பேசிய பேட்டிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் விஜய் ரசிகர்கள் மத்தியில் "சாதாரண மனிதர் போலவே இருப்பவர்" என்ற எண்ணம் நிலவி வரும் நிலையில், அவரிடம் பத்து ஆண்டுகளாக உதவியாளராக பணிபுரிந்த செல்வம் என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

செல்வத்தின் பரபரப்பு குற்றச்சாட்டு
அந்த பேட்டியில் செல்வம் கூறியதாவது: ஒரு நாள் வழக்கம்போல் விஜய்க்கு சாப்பாடு பரிமாறுவதற்காக டேபிளில் உணவு எடுத்து வைத்து காத்திருந்தேன். அப்போது வெளியே யாரிடமோ செல்போனில் கடும் கோபத்துடன் பேசிக் கொண்டிருந்தார். அதே கோபத்தோடு உள்ளே வந்தவர் சாப்பிட ஆரம்பித்தார். திடீரென எனது கன்னத்தில் ஓங்கி அறைந்தார். நான் அருகில் இருந்த சோபாவில் விழுந்துவிட்டேன்.
அதன் பிறகு என்னை எட்டி உதைத்தார். அவர் ஏன் இப்படிச் செய்கிறார் என்று கூட எனக்கு புரியவில்லை. அவரின் முகத்தில் கடும் கோபம் இருந்தது. மறுநாள் காலை ஷூட்டிங் ஸ்பாட்டில் கேரவனில் இருந்தபோது என்னிடம் மன்னிப்பு கேட்டார் என்று செல்வம் கூறியுள்ளார்.
இந்தப் பேட்டி வெளியானதும், "எப்போதும் அமைதியாக இருப்பார் என்று நினைத்த விஜய் இப்படிப்பட்டவரா?" என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஒருபுறம் சிலர் செல்வத்தின் பேட்டியை நம்ப முடியாமல் விமர்சித்து வருகிறார்கள். மறுபுறம், "மனிதன் என்பதால் யாருக்கும் கோபம் வரலாம்; ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருந்தால் அது வருத்தம் தரக்கூடிய விஷயம்" என்று சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
செல்வம், விஜய்யின் தந்தையான இயக்குனர் எஸ்.சி. சந்திரசேகர் இயக்கிய பல படங்களில் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்ததாக கூறியுள்ளார். பின்னர் விஜய்க்கு உதவியாளராக அவரின் தந்தை தன்னை நியமித்ததாகவும் தெரிவித்துள்ளார். தற்போது எந்த வேலையும் இல்லாமல் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நிலையில் இருப்பதாக கூறியதும் பலருக்கு வேதனை அளிக்கும் விஷயமாக மாறியுள்ளது.
அது போல செல்வம் மேலும் பேசும்போது, நான் அவரிடம் 10 வருடமாக வேலைக்கு இருந்தாலும் அவர் என்னை வெளியே அனுப்பிய பிறகு நான் வேலை இல்லாமல் ரொம்பவும் கஷ்டப்பட்டேன். அந்த நேரத்தில் என்னுடைய மகளுக்கு கல்யாணம் வைத்திருந்ததோம். அப்போது அவர் அவரிடம் என்னுடைய மகள் நீங்க அப்பாவை வெளியே அனுப்பிய பிறகு அவர் ரொம்ப கஷ்டப்பட்டார் என்று சொன்னதற்கு அப்படியா என்று கேட்டுக் கொண்டார் வேறு எதுவுமே பேசவில்லை. பிறகு அவருடைய உதவியாளரிடம் 2000 ரூபாய் மொய் கொடுத்து அனுப்பி இருந்தார் என்றும் செல்வம் பேசி இருக்கிறார்.
கரூர், சேலம் கூட்டங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள்
இந்நிலையில், விஜய் பங்கேற்ற அரசியல் சார்ந்த பொதுக்கூட்டங்களில் ஏற்பட்ட சம்பவங்களும் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி வருகின்றன. சமீபத்தில் கரூரில் நடைபெற்ற கூட்டத்தின் போது கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அதேபோல இப்போது சேலத்திலும் ஒருவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எழும் கேள்விகள்
ஒருபுறம் உதவியாளர் செல்வம் கூறிய பேட்டி வைரலாகி வருகிறது. மறுபுறம், விஜய் கூட்டங்களில் தொடர்ச்சியாக உயிரிழப்புகள் ஏற்படுவது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. "ரசிகர்கள் உயிரை இழக்கும் அளவுக்கு கூட்டம் கூட வேண்டுமா?", "பொதுக்கூட்டங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா?" போன்ற கேள்விகள் சமூக ஊடகங்களில் அதிகமாக முன்வைக்கப்படுகின்றன.
விஜய் மீது இருந்த அமைதியான இமேஜுக்கும், தற்போது வெளிவரும் செய்திகள் உருவாக்கும் சர்ச்சைகளுக்கும் இடையில், அவரது ரசிகர்கள் குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் உள்ளனர். இந்த விவகாரங்களில் விஜய் அல்லது அவரது தரப்பிலிருந்து விளக்கம் வரும் பட்சத்தில் தான் உண்மை நிலைமை தெளிவாகும் எனவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
பச்சை துண்டு போட்டு விஜய் கத்துனா விவசாயி ஆயிடுவாரா? சூட்டிங் வைத்து 50 பேரை கொன்னுட்டாரு! ஜூலி வீடியோ -
“உண்மை வெளியானால் விஜய் ஆட்டம் முடியும்”! ரசிகர்களே வெறுப்பார்கள்.. கொளுத்தி போட்ட மோகன் ஜி -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய் பிரண்ட் சஞ்சீவ்வை சுற்றும் பிரச்சனை.. உண்மை தெரியாமல் பேசாதீங்க! ஓபனாக உடைத்து பேசிய ப்ரீத்தி சஞ்சீவ் -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
நான் போலீஸ் படங்களை எடுக்காத காரணம் இதுதான்! ஸ்டேஷனுக்குள் இருக்கும் நிலை மாறனும்! பா ரஞ்சித் ஓபன் -
“இது சிம்பதிக்காக சொல்லல… இதுதான் ரியாலிட்டி!”.. காளிதாஸ் 2 விழாவில் நடிகர் பரத் எமோஷனல் -
துரந்தர் 2 வசூலில் அதிரடி… 2 நாளில் இத்தனை கோடி வசூல்! உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸ் புயல் சுற்றுதே -
சினிமாவை விட்டு விலகும் திரிஷா.. காரணம் இதுதானா? அதிர்ச்சி பின்னணி! லீக்கான தகவல்கள் -
ஐடி விங் மூலமாக வெறுப்பை பரப்புறாங்க.. பொறுப்பு உங்களிடமே உள்ளது தலைவரே! வெளுத்த நடிகை நிவேதா -
நடிகை பானுப்ரியாவை வர்ணித்த நடிகருக்கு விழுந்த அடி.. இயக்குநர் செய்த தரமான சம்பவம்! இப்படியும் நடந்ததாம்! -
Durandar 2 : துரந்தர் 2 தமிழில் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்.. மாஸான வசூல்.. அடுத்தடுத்த சம்பவம்!












Click it and Unblock the Notifications