“சங்கீதா ரொம்ப டைப்பிகல் ஹவுஸ் வைஃப்.. வீட்ல இப்படித்தான் இருப்பாங்க! விஜய் அம்மா ஷோபா உருக்கம்
சென்னை: இன்று விஜய் - சங்கீதா (Vijay Sangeetha Divorce) விவாகரத்து வழக்கு குறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பு அதிகரித்து வரும் நிலையில், விஜய்யின் அம்மா ஷோபா அளித்த பழைய பேட்டி தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் சங்கீதாவைப் பற்றி அவர் கூறியுள்ள விஷயங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

27 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு முறிவு
1999ஆம் ஆண்டு விஜய் - சங்கீதா திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில், செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் சங்கீதா விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த மனுவில், ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருந்தது 2021 ஏப்ரல் மாதத்தில் தான் தெரிந்தது என்றும், அதன்பிறகும் அந்த உறவு தொடர்ந்ததால் மனஉளைச்சல் ஏற்பட்டதாகவும் கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக நீதிமன்றம் மார்ச் 20ஆம் தேதி ஆஜராக நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், விஜய் நேரில் வரவில்லை என்றாலும் அவரது தரப்பில் வழக்கறிஞர் ஆஜராக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷோபா பேட்டி
பேட்டியில் ஷோபா பேசும்போது, "சங்கீதாவை கீதா என்று தான் நான் கூப்பிடுவேன். வீட்டின் எல்லா பொறுப்பையும் அவங்கள்தான் பார்த்துக்குவாங்க. குழந்தைகளை கவனிப்பது, விஜய்யை கவனிப்பது, ஸ்கூலுக்கு கூட்டிட்டு போவது, வீட்டு வேலைகள் - எல்லாமே அவங்களே செய்வாங்க. ரொம்ப பொறுப்பானவர்" என்று கூறியுள்ளார்.
வாரம் ஒரு நாள் வந்தாலும் சந்தோஷம்
மேலும், "என் பேரப்பிள்ளைகளும் மருமகளும் வாரத்தில் ஒரு நாள்தான் வீட்டுக்கு வருவாங்க. அந்த நாள் ரொம்ப சந்தோஷமாக இருக்கும். ஒரு மணி நேரம் இருந்தாலும் போதும்; அடுத்த முறை எப்ப வருவாங்கன்னு காத்திருப்பேன்" என்று எமோஷனல் ஆக பேசி இருக்கிறார்.
எப்போதுமே என் தோழி
சங்கீதாவுடன் உள்ள உறவை பற்றி பேசும்போது, "அவங்க எப்போதுமே என்னோட தோழி மாதிரி தான். எங்களுக்குள் எந்தப் பிரச்சனையும் வந்ததே கிடையாது. ரொம்ப டைப்பிகல் ஹவுஸ் வைஃப்" என்று ஷோபா பாராட்டியுள்ளார்.
விவாகரத்து
27 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு, செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், இந்த பேட்டி மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே விஜய்யிடம் இருந்து தனியாக வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
குடும்ப நிகழ்ச்சிகளில் சங்கீதா
கடைசியாக மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய்யுடன் சங்கீதா பங்கேற்றார். அதன் பிறகு எந்தப் படம் தொடர்பான விழாவிலும் அவர் காணப்படவில்லை. விஜய் அரசியல் கட்சி தொடங்கிய நிகழ்ச்சியிலும் அவரது பெற்றோர் மட்டும் கலந்து கொண்டது, குடும்ப இடைவெளி குறித்து ஏற்கனவே கேள்விகளை எழுப்பியிருந்தது.












Click it and Unblock the Notifications