"கமல் சம்மதிக்கலையா?" சுந்தர். சி விலகிய பின்னணி! ரஜினிக்கு வந்த பயம்? அடுத்த இயக்குநர்? ப்ளூ சட்டை மாறன் போஸ்ட்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 திரைப்படத்தை பற்றி பேச்சாக தான் கோடம்பாக்கம் முழுக்க இருக்கு! சுந்தர். சி இயக்குவதாக வந்த அறிவிப்பைவிட, அவர் விலகியது தான் இப்போ பெரிய விஷயமாக பேசப்படுகிறது! படத்திலிருந்து அவர் வெளியேறியதற்குப் பலரும் பல காரணங்களை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அந்த வரிசையில் ப்ளூ சட்டை மாறனும் தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

ரஜினிகாந்தின் எதிர்பார்ப்பு
ரஜினிகாந்த், குடும்பப் பார்வையாளர்களுக்காக படத்தில் நடித்து ரொம்ப வருஷங்கள் ஆகிவிட்டன. அதனால் இனி அப்படி ஒரு படம் செய்யலாம் என்ற மனநிலையில் இருந்தபோதுதான், ரஜினி - கமல் - சுந்தர். சி கூட்டணி உறுதி செய்யப்பட்டது. காமெடி சென்டிமென்ட் என குடும்பங்கள் கொண்டாடும் ஒரு படத்தை சுந்தர். சி தரமாக உருவாக்குவார் என்றுதான் ரஜினியும், கமலும் அவரை இந்தப் படத்துக்குள் அழைத்துவந்தார்கள்.
அதிர்ச்சி கொடுத்த சுந்தர். சி
அப்படி ஒரு நம்பிக்கையுடன் வந்த சுந்தர். சி, திடீரென படத்திலிருந்து விலகுவதாக அறிவித்து, ஒரு அறிக்கையும் வெளியிட்டார். அந்த அறிக்கை மிகவும் கண்ணியமான முறையில் இருந்தது. "தவிர்க்கவே முடியாத சில காரணங்களால் தலைவர் 173 படத்திலிருந்து விலகுகிறேன். கனத்த இதயத்துடனேயே இந்த முடிவை நான் எடுத்திருக்கிறேன். கமல் தயாரிப்பில் ரஜினியை இயக்குவது எனது சினிமா வாழ்க்கையின் மிகப்பெரிய கனவு."
"சில நேரங்களில் நாம் எதிர்பார்த்த அனைத்தும் வாழ்க்கையில் நடந்துவிடுவதில்லை. இந்த படம் பற்றி கடந்த மூன்று நாட்களாகப் பேசிக்கொண்டதெல்லாம் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமாகும். அதில் பல பாடங்களை அவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன்" என்றும், "விலகுவது மிகவும் கடினமான முடிவு" என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ப்ளூ சட்டை மாறன் எழுப்பிய கேள்வி
சுந்தர். சி விலகியதற்கு காரணம் என்னவென்று பலரும் யோசிக்க ஆரம்பித்துள்ள நிலையில், பிரபலத் திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், தன்னுடைய எக்ஸ் சமூக ஊடகப் பக்கத்தில் இரண்டு முக்கியமான கேள்விகளை எழுப்பி, சலசலப்பைக் கிளப்பியுள்ளார்:
1. "முதல் பிரதி (ஃபர்ஸ்ட் காப்பி) அடிப்படையில் படம் செய்து தருவதுதான் சுந்தர். சியின் பாணி. அதற்கு கமல் ஒப்புக்கொள்ளவில்லையா?"
2. "தாதா கேரக்டர் படங்கள் தமிழில் தோல்வியடைந்து வருவதால், ஜாலியாக படம் பண்ண நினைத்த ரஜினியின் எண்ணம் பலிக்காமல் போனதா?"
சுந்தர். சியின் வழக்கமானப் பாணிக்கும், கமலின் தயாரிப்பு நிறுவனத்தின் அணுகுமுறைக்கும் முரண்பாடு ஏற்பட்டதா? அல்லது ரஜினி தனது முந்தையப் படங்கள் கொடுத்த அனுபவத்தால் ஜாலியான படங்களை விரும்பியதில் மாற்றம் ஏற்பட்டதா என்பது போன்ற கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.
அடுத்த இயக்குநர் யார்
சுந்தர். சி விலகியதை தொடர்ந்து, அடுத்து யார் இந்தப் படத்தைக் கையில் எடுக்கப் போகிறார்கள் என்ற கேள்வியும் உண்டாகியுள்ளது. முதலில் வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ், நெல்சன் திலீப்குமார் உள்ளிட்டோரின் பெயர்கள் பட்டியலில் அடிபட்டன. இப்போது அந்தக் பட்டியலில் தூங்காவனம் இயக்குநர் ராஜேஷ் எம். செல்வா பெயரும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி - கமல் - சுந்தர். சி என்ற கனவுக் கூட்டணி ஏன் உடைந்ததென்ற மர்மம் நீடித்துக்கொண்டே இருக்கும் நிலையில், அடுத்ததாக ரஜினியின் குடும்பப் படம் யார் கையில் அமையும் என்ற எதிர்பார்ப்புத் தீவிரமடைந்துள்ளது!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications