With Love Review: வித் லவ் படம் எப்படி இருந்தது? காதல் மனதை கவர்ந்ததா? கடுப்பாக்கியதா? ரிவ்யூ இதோ
சென்னை: 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் மூலம் பிரபலமான அபிஷன் ஜீவிந்த், முதல் முறையாக முழு ஹீரோவாக நடித்துள்ள படம் தான் 'With Love'. அவருடன் அனஸ்வரா ராஜன், காவ்யா அனில் ஆகிய இரு முக்கிய பெண் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சரவணன், தேனி முருகன், சச்சின் நாச்சியப்பன், ஹரிஷ் குமார் உள்ளிட்ட பலர் துணை வேடங்களில் வருகிறார்கள்.
சவுந்தர்யா ரஜினிகாந்த், பஸிலியான் நசரேத், மகேஷ்ராஜ் பஸிலியான் ஆகியோர் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தை மதன் கதை, திரைக்கதை, இயக்கம் என மூன்றையும் கையில் எடுத்துச் செய்திருக்கிறார். முதல் படத்திலேயே உணர்வுகளோடு விளையாடும் ஒரு மெச்சூரான முயற்சியாக 'With Love' அமைந்திருக்கிறது.

கனெக்ட் ஆகும் பயணம்
கதையின் மையத்தில் இருக்கும் இளைஞன் (அபிஷன் ஜீவிந்த்), அம்மாவை இழந்த வலியால் வருத்தத்தில் இருக்கிறார். அதோடு அப்பாவிடம் ஓபனாக பேசாமல் ஒருவிதமான மன அழுத்தத்திலேயே இருக்கிறார். அவரை மீண்டும் வாழ்க்கையின் ஓட்டத்தில் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில், அக்கா அவருக்கு திருமணம் பேச முடிவு செய்கிறாள்.
மேட்ரிமோனி வழியாக பார்க்கச் செல்லும் பெண் (அனஸ்வரா ராஜன்) அவருக்கு முற்றிலும் புதிதானவள் இல்லை என்பது தெரிய வரும் தருணத்தில் தான் கதைக்கு ஒரு சுவாரஸ்யமான திருப்பம். இருவரும் பள்ளிக்கால நண்பர்கள் என்பதும், அந்தக் கால நினைவுகள் மீண்டும் உயிர் பெறுவதும் படம் முழுக்க ஒரு நெகிழ்ச்சியான டோனை உருவாக்குகிறது.
இதோடு, பள்ளி நாட்களில் ஹுரோக்கு இருந்த காதல் (காவ்யா அனில்) மற்றும் அந்தக் காதலின் பின்னணி கதைகள், "பழைய காதல் மீண்டும் சந்தித்தால் என்ன ஆகும்?" என்ற கேள்வியை முன்னிறுத்தி கதையை திருச்சி வரை இழுத்துச் செல்கிறது. நண்பர்கள், நினைவுகள், தவறுகள், வருத்தங்கள் என வாழ்க்கையின் பல பரிமாணங்களை படம் மெதுவாக விரிக்கிறது.

விமர்சனம்
'With Love' ஆரம்பமே இயல்பான ஒரு சிச்சுவேஷனில் தொடங்குவது நல்ல விஷயம். கல்யாணப் பெண் பார்க்கும் சீனில் வரும் ட்விஸ்ட், கதையின் பாதையை சீராக அமைத்து விடுகிறது.
முதல் பாதியில் சில இடங்களில் வசனங்கள் கொஞ்சம் செயற்கையாகத் தோன்றினாலும், கதையின் நோக்கத்தை புரிய வைக்கும் வேலை சரியாக நடக்கிறது. சில தருணங்களில் "இது இவ்வளவு ஓபனா பேச வேண்டிய விஷயமா?" என்ற கேள்வி தோன்றலாம். ஆனாலும், அந்த குறைபாடுகளை எல்லாம் இரண்டாம் பாதி தூக்கி நிறுத்துகிறது.
இடைவேளைக்குப் பிறகு படம் வேறு ஒரு லெவலுக்கு மாறுகிறது. சென்டிமென்ட், நினைவு, வாழ்க்கையின் யதார்த்தம் - மூன்றையும் கலந்த திரைக்கதை பாராட்டும்படி இருக்கிறது. சரவணன் நடித்த ஆசிரியர் கதாபாத்திரம் பெரிய திருப்பம் கொடுக்காவிட்டாலும், சொல்லப்பட்ட விதம் மனதில் தங்குகிறது.
பெண்கள் கதாபாத்திரங்களுக்கு மரியாதை
இந்தப் படத்தின் ஒரு பெரிய பிளஸ் - பெண்களின் தனித்தன்மை, சுயமரியாதை, தன்னம்பிக்கை போன்ற விஷயங்களை எந்த 'பிரசங்கம்' இல்லாமல் இயல்பாக சொல்லியிருப்பது.
ஒரு பெண் கதாபாத்திரம் முதல் பாதியில் தோன்றும் விதமும், இரண்டாம் பாதியில் எடுக்கும் மாற்றமும் பார்வையாளர்களை உண்மையிலேயே ஆச்சரியப்படுத்தும். பழைய காதலை இழந்த ஒரு மனிதன் அனுபவிக்கும் மனநிலை, அதற்குப் பிறகு அவன் எப்படி உள்ளுக்குள் உடைந்து, மீண்டும் எழுந்து நிற்கிறான் என்பதை இயக்குநர் நுணுக்கமான காட்சிகளாக மாற்றியுள்ளார்.
'உள்ளம் கேட்குமே' படத்தில் லைலா கதாபாத்திரம் ஏற்படுத்திய தாக்கத்தை நினைவூட்டும் அளவுக்கு இந்தப் படத்தில் ஒரு பெண் கதாபாத்திரம் எழுதப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
படத்திற்கு உயிர்
அனஸ்வரா ராஜன் - அதிகமாக வசனம் பேசாமல், கண்களாலேயே உணர்வுகளை சொல்லி விடுகிறார். முகபாவனைகளில் வரும் சிறிய மாற்றங்களே கதையை முன்னெடுத்து செல்கிறது. காவ்யா அனில் - கேமரா முன் இயல்பான அழகோடு தோன்றுகிறார். நடிப்பிலும் உடல் மொழியிலும் எந்த விதமான செயற்கை தனமும் இல்லை. அபிஷன் ஜீவிந்த் - ஹீரோவாக நல்ல தொடக்கம்.
குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் சென்டிமென்ட் காட்சிகளில் அவர் நடிப்பு நன்றாக வேலை செய்கிறது. தேனி முருகன், சச்சின் நாச்சியப்பன், ஹரிஷ் குமார் ஆகியோர் தங்களுக்குக் கிடைத்த இடத்தில் சரியான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
படத்தின் பலம்
ஷ்ரேயஸ் கிருஷ்ணா - ஒளிப்பதிவு கண்களுக்கு இனிமை. ஷான் ரோல்டன் - பின்னணி இசையில் முழு தாக்கம். குறிப்பாக இரண்டாம் பாதியில் உணர்ச்சியை உயர்த்தும் இடங்களில் அவரது இசை பெரிய ப்ளஸ். சுரேஷ்குமார் - எடிட்டிங் வேகமாகவும் சீராகவும் இருக்கிறது. இரண்டாம் பாதி தடை இல்லாமல் ஓடுவதற்கு அவருடைய பங்களிப்பு முக்கியமானது.
முதல் பாதியில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் படம் இன்னும் வலுவாக இருந்திருக்கும். ஆனால் இரண்டாம் பாதியில் வரும் சென்டிமென்ட், கதாபாத்திரங்களின் மாற்றம், காதல் - இவை எல்லாம் சேர்ந்து 'With Love' படத்தை ஒரு மனதோடு கனெக்ட் ஆகும் நல்ல அனுபவமாக மாற்றுகிறது.
ரொம்ப சத்தம் இல்லாத, மென்மையான காதல் கதை, வாழ்க்கையைப் பற்றிய சின்ன சிந்தனை - இப்படி படம் பார்க்க விரும்புறவங்களுக்கு 'With Love' கண்டிப்பாக ஒரு நல்ல சாய்ஸ்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications