விஜயை எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாது! சின்ன வயசுல இருந்தே எனக்கு தெரியும்.. ஒய் ஜி மகேந்திரன் ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு, அவரை சுற்றி விமர்சனங்களும், ஆதரவுகளும் கலந்த ஒரு சூழல் உருவாகி வருகிறது. ஒரு பக்கம் அவரது அரசியல் முடிவுகளை ஆதரிப்பவர்கள் இருந்தாலும், இன்னொரு பக்கம் தொடர்ந்து விமர்சனங்களும் எழுந்து கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில், மூத்த நடிகர் Y. G. மகேந்திரன் விஜய் குறித்து பேசிய ஒரு பழைய பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.

அந்த பேட்டியில் அவர் மிகவும் நெகிழ்ச்சியாக விஜயைப் பற்றி பேசுகிறார். "விஜய்யை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரை குறை சொல்லவே முடியாது" என்று தொடங்கும் அவர், விஜய்யின் தந்தை S. A. சந்திரசேகர் பற்றியும் பெருமையாக நினைவுகூர்கிறார்.

Vijay YG Mahendran SA Chandrasekhar

பிடித்த இயக்குனர்

"அந்த காலத்தில் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர். அவர் எடுத்த திரில்லர் படங்களின் ஃப்ரேமிங், காட்சிகள் இன்னைக்கும் யாராலும் அந்த மாதிரி எடுக்க முடியாது. அந்த அளவுக்கு அவர் ஒரு கம்பீரமான இயக்குநர். அவர் இயக்கிய 'வீட்டுக்கு ஒரு கண்ணகி' படத்தில் நான் நடித்த அனுபவம் இன்னும் நினைவில் இருக்கு" என்று கூறியுள்ளார்.

அதோடு, "அவருடன் ஆறு, ஏழு படங்களில் நான் நடித்திருக்கிறேன். அந்த நேரத்தில் விஜய்யை குழந்தையாக இருக்கும்போதே பார்த்திருக்கேன். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து 'ஹாய் அங்கிள்' என்று சொலலுவார். அந்த பையன் இப்போ இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறார் என்றால் அது முழுக்க அவருடைய உழைப்பின் பலன் தான்" என்று அவர் கூறியிருப்பது ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

திருப்புமுனை

இப்போது விஜய் அரசியலுக்கு வந்திருப்பது அவருடைய வாழ்க்கையில் பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. தனது அரசியல் கட்சியை தொடங்கி, நேரடியாக மக்களிடம் சென்று பேச ஆரம்பித்திருக்கிறார். குறிப்பாக இளைஞர்களிடம் அவர் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளார். அவரின் கூட்டங்கள், பேச்சுக்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் கவனம் பெறுகின்றன.

விமர்சனங்கள்

ஆனால் அதே நேரத்தில் சவால்களும் குறைவில்லை. அவரது கட்சி இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், அனுபவம் குறைவு, அரசியல் அழுத்தங்கள், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் போன்ற பல பிரச்சனைகளை அவர் சந்தித்து வருகிறார். சமீபத்தில் அவரது பெயரை குறிப்பிட்டு பல்வேறு அரசியல் மற்றும் சினிமா சம்பவங்களும் விவாதமாக மாறி வருகின்றன.

சிலர், "சினிமாவில் வெற்றி பெற்றவர் அரசியலிலும் அதே மாதிரி சாதிப்பாரா?" என்று கேள்வி எழுப்ப, மற்றொரு தரப்பு "விஜய் எடுத்த இந்த முடிவு இளைஞர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கை" என்று ஆதரிக்கின்றனர்.

இந்த சூழலில், ஒய்.ஜி. மகேந்திரன் பேசிய இந்த வார்த்தைகள் விஜய் ரசிகர்களுக்கு ஒரு பெரிய உற்சாகமாக மாறியுள்ளது. குறிப்பாக "அவரை குறை சொல்ல முடியாது" என்ற ஒரு வரி தான் தற்போது அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

மொத்தத்தில், விஜய் அரசியலுக்கு வந்த பிறகு அவர் குறித்து பேசப்படும் ஒவ்வொரு கருத்தும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதில் அனுபவம் வாய்ந்த மூத்த நடிகரின் இந்த பாராட்டு, விஜயின் பயணத்திற்கு ஒரு முக்கிய ஆதரவாகவே பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+