புதுவையில் வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர் நூல் அறிமுக விழா

Subscribe to Oneindia Tamil

Vairamuthu
புதுச்சேரி: கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய புகழ்பெற்ற நூலான மூன்றாம் உலகப்போர் தமிழக மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நூலின் அறிமுக விழா புதுச்சேரியில் நடைபெற உள்ளது. வெற்றித் தமிழர் பேரவையும், புதுச்சேரி சப்தகிரி அறக்கட்டளையும் இணைந்து இந்த விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகின்றன.

புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில், அக்டோபர் 12ம் தேதி மாலை 5 மணிக்கு விழா நடைபெறும்.

மூன்றாம் உலகப்போர் நூல் அறிமுக விழாவிற்குத் தொழிலதிபரும் சப்தகிரி அறக்கட்டளை நிறுவுநருமான வி.பி.சிவக்கொழுந்து தலைமை தாங்குகின்றார். தொழிலதிபர் முத்து பழனி அடைக்கலம் முன்னிலையில் விழா நடைபெறுகின்றது. வி.பி.இராமலிங்கம் வரவேற்புரையாற்றுகின்றார்.

மூன்றாம் உலகப்போர் நூல் அறிமுக உரையை வெற்றித்தமிழர் பேரவையின் அமைப்பாளர் தி.கோவிந்தராசு வழங்குகின்றார்.

கலைமாமணி மரபின் மைந்தன் ம. முத்தையா அவர்களும் முனைவர் நா.இளங்கோ அவர்களும் கருத்துரை வழங்குகின்றனர்.

கவிப்பேரரசு வைரமுத்து நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்புரையாற்றுகின்றார்.

கவிப்பேரரசு வைரமுத்து கையொப்பமிட்ட மூன்றாம் உலகப்போர் நூல் வாசகர்களுக்கு விழா அரங்கில் கிடைக்கும்.

தொடர்புக்கு:
98947 55557
94431 34108

செய்தி: முனைவர் மு. இளங்கோவன்
http://muelangovan.blogspot.in/

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+