கட்டாய கல்வி-துபாய் சொற்பொழிவில் வலியுறுத்தல்

கடந்த 20ம் தேதி நடைபெற்ற சிறப்புச் சொற்பொழிவில் ராமநாதபுரம் ஜில்லா முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் முதுவைக் கவிஞர் மவ்லவி ஏ. உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ, 'கல்வி ஒன்றே வாழ்வின் ஒளிவிளக்கு' எனும் தலைப்பில் பேசினார்.
அவர் கூறுகையில், கல்வியை கட்டாயக் கடமையாக்கிய மார்க்கம் இஸ்லாம். நபி பெருமானாரின் அறிவுரையின்படி ஆண், பெண் அனைவரும் கல்வி கற்க வேண்டும். கல்வி பயில்வதற்காக வசதியற்றவர்களுக்கு உதவ வேண்டும்.
வருமான வரி உள்ளிட்டவற்றை செலுத்துவதற்காக ஆடிட்டர்கள அணுகும் நாம் ஜக்காத்தை கணக்கிட்டு வழங்குவதற்கும் நமது நிறுவனங்களில் ஆடிட்டரை நியமிக்க வேண்டும் என்றார்.
முஹம்மது மஹ்ரூப் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். மவ்லவி தாவூத் அலி மன்பயீ முதுவைக் கவிஞர் குறித்த அறிமுகவுரை நிகழ்த்தினார்.












Click it and Unblock the Notifications