இலங்கையிலும் மாஸ்க் அணியும் காலம்!
காலத்திற்குக் காலம் உலகளவில் பாரிய அழிவுகளையும், அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தக்கூடிய வகையில் ஏதாவது விடயங்கள் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றன. இத்தகைய அழிவுகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் சில சந்தர்ப்பங்களில் இயற்கை அனர்த்தங்கள் அல்லது தொற்று நோய் பரவல்கள் காரணிகளாக இருக்கலாம்.
நோய்த் தொற்று என்ற அடிப்படையில் 21ம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்திலே உலகை அச்சுறுத்தும் ஒரு நோயாக பன்றிக் காய்ச்சல் என்றழைக்கப்படும் எச்1என்1 இன்புளுயன்சா / ஸ்வைன் ஃப்ளு (swine flu / swine influenza) வேகமாக பரவி வருகிறது.
இதுவரை பல உலக நாடுகளில் அச்சுறுத்தலாக இருந்து வந்த இன்புளுயன்சா எச்1என்1 வைரஸ் இலங்கையிலும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்த ஆரம்பித்து விட்டது. இலங்கையில் முதல் தடவையாக இன்புளுயன்சா எச்1என்1 நோய்த்தாக்கத்தின் காரணமாக கண்டியைச் சேர்ந்த 16 வயது மாணவரொருவர் நவம்பர் 04, 2009ம் தேதி உயிரிழந்துள்ளார். அதே நேரம் இந்நோய்த் தாக்கத்திற்கு உட்பட்டு உயிரிழந்தவர் வைத்தியத் தம்பதியினரின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனைவிட மாத்தறையிலும் கர்ப்பிணிப் பெண்ணொருவர் கடந்த நவம்பர் 10. 2009 உயிரிழந்துள்ளார்.
கண்டி மரணம் குறித்து பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லையென்று சில வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏனெனில் உயிரிழந்தவர் ஏற்கனவே முள்ளந்தண்டு மற்றும் நுரையீரல் பிரச்சினையினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவரை ஏ/ எச்1என்1 வைரஸ் தாக்கியிருக்கின்றது என இந்த வைத்திய அதிகாரிகள் நியாயப்படுத்தியுள்ளனர்
எப்படியிருப்பினும் எச்1என்1 வைரஸ் காரணமாக இலங்கையில் ஒரு மரணம் சம்பவித்து விட்டது. எனவே இது விடயமாக பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியமும், இந்நோய் பற்றிய விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு ஊடகங்களும், அரசாங்கமும் பிரயத்தனம் எடுக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டு விட்டது. ஏனெனில், ஒரு தொற்று நோயோ அல்லது பயங்கர நோய்களோ பரவி வரும் போது அந்நோய் பற்றிய சரியானதும், பூரணமானதுமான விளக்கங்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டியது அரசாங்கத்தினதும், சுகாதாரத் திணைக்களத்தினதும் மேலும் ஊடகங்களினதும் கடமையாகின்றது.
தற்போது வேகமாகப் பரவிவரும் பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய இன்புளுயன்சா எச்1என்1 வைரஸ் உலகிற்குப் புதிது. 2009 ஏப்ரல் காலகட்டத்தில் மெக்ஸிக்கோவிலிருந்து இந்த வைரஸ் உலக நாடுகளுக்கு பரவத் தொடங்கியது. இலங்கையில் பன்றிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட முதலாவது நோயாளி ஜூன் 16, 2009ம் தேதி இனங்காணப்பட்டார். எட்டு வயது சிறுவனான இவர் ஆஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூரினூடாக தனது தந்தையுடன் இலங்கைக்கு வந்தவர். சிங்கப்பூர் விமான நிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட சோதனையின்போது இச்சிறுவனின் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமியொருவரும் எச்1என்1 வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்ததையடுத்து அச்சிறுமியும் அவருடைய தாயாரும் சிங்கப்பூரில் தடுத்து வைக்கப்பட்டனர்.
சுகாதாரத் திணைக்களத்தின் அறிக்கையொன்றின் பிரகாரம் அவுஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, சவூதி அரேபியா மற்றும் மேலைத்தேய நாடுகளிலிருந்து இலங்கை வந்தவர்கள் இந்நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒக்டோபர் 15, 2009 தேதிப்படி இலங்கையில் 140 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது சுகாதாரத் திணைக்கள கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
எமது அண்டைய நாடான இந்தியாவிலும் இன்புளுயன்சா எச்1என்1 தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி ஜூலை 3, 2009ல் உயிரிழந்தார். இவரும் இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு வந்தவராவார். நவம்பர் 4, 2009 அறிக்கைப்படி இந்தியாவில் 477 பேர் பன்றிக் காய்ச்சலால் இறந்துள்ளனர். 14, 049 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அக்டோபர் மாத இறுதியில் அமெரிக்காவில் பன்றிக் காய்ச்சலினால் பலியானோரின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டிய நிலையில் அங்கு தேசிய அவசர நிலையை ஜனாதிபதி பராக் ஒபாமா பிரகடனப்படுத்தியுள்ளார். தேசிய அவசர நிலையின் கீழ் பன்றிக்காய்ச்சல் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். நவம்பர் 1, 2009 வரை உலகம் முழுவதும் வேகமாகப் பரவி 5712 பேரின் உயிர்களைப் பறித்துள்ள பன்றிக் காய்ச்சல் சற்றும் தொய்வில்லாமல் தொடர்ந்து பரவிய வண்ணம் உள்ளது.
ஜூன் 11, 2009 அன்று உலக சுகாதார நிறுவனம் பன்றிக் காய்ச்சலை கொள்ளை நோயாக அறிவித்துள்ளது. ஓரிரு ஆண்டுகளில் உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மக்களைப் பாதிக்கச் சாத்தியமுள்ள கொள்ளை நோயாக பன்றிக் காய்ச்சல் உருவெடுத்துள்ளது என உலக சுகாதார நிறுவன நிபுணர்கள் கருதுகின்றனர்.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications