அமெரிக்கா: வால்மார்ட் கடைகளில் மாத்திரை வடிவில் விற்பனைக்கு வந்த மஞ்சள் தூள்!
-சதுக்கபூதம்
மஞ்சளின் மருத்துவ குணத்தை இந்தியர்கள் பல நூற்றாண்டுக்கு முன்பே கண்டறிந்து விட்டனர். தமிழர்களின் உணவு பழக்கவழக்கங்களில் மஞ்சள் ஒரு முக்கிய பங்கை ஆற்றி வருகிறது.
உணவோடு உட்கொள்வது மட்டும் அல்லாமல் பெண்கள் உடம்பின் மேல் பூசி குளிக்கவும் பல காலமாக பயன் படுத்துகிறார்கள். மஞ்சள் பற்றிய குறிப்புகள் சங்கத்தமிழ் இலக்கியங்களிலேயே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மஞ்சளின் மகிமை:
குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்த
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால
கல்வி அழகே அழகு. - நாலடியார்

புற்று நோய், நீரழிவு நோய்க்கு மருந்து:
இன்றைய விஞ்ஞானமும் மஞ்சளுக்கு புற்று நோய், நீரழிவு நோய், மூட்டு வலி போன்ற நோய்களுக்கு நோய் எதிர்ப்பு தன்மையும், கிருமி நாசினி தன்மையும் இருப்பதாக தெரிவிக்கிறது.

வால்மார்ட் கடைகளில்:
தற்போது அமெரிக்காவில் வால்மார்ட் கடைகளில் இந்த மஞ்சத்தூள் Food Supplement பகுதியில் காப்சூலாக கிடைக்கிறது. மஞ்சத்தூளை 500 மில்லிகிராம் அளவு சிறு காப்சூல்களில் அடைத்து விற்கிறார்கள். தினமும் ஒரு காப்சூல் சாப்பிட வேண்டுமாம்.
லேபிலில் தவறாமல் மஞ்சளின் உபயோகத்தை இந்தியாவில் பல காலமாக உபயோகிப்பது பற்றி தெரிவிக்கபட்டிருந்தது.

நம் முன்னோர்களின் கண்டுபிடிப்பு:
சில வருடங்களுக்கு முன் மஞ்சளை காப்புரிமை பெற்று தனியுடமை கொண்டாட சிலர் முயன்றதாக குற்றசாட்டு வைக்கப்பட்டது. அது போல் இல்லாமல் உலக மக்கள் அனைவருக்கும் நம் முன்னோர்களின் கண்டுபிடிப்பு தடையின்றி சென்றடைந்து பயனுள்ளதாக இருந்தால் மகிழ்ச்சியே!
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications