''விண்வெளியில் இருந்து இந்தியாவைப் பார்த்தால் எப்படி இருக்கிறது சர்மாஜி?''
-ஏ.கே.கான்
''விண்வெளியில் இருந்து இந்தியாவைப் பார்த்தால் எப்படி இருக்கிறது சர்மாஜி?''
''மேடம், சாரே ஜகான் சே அச்சா!''
இது 1984ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி முதன்முதலாக விண்ணுக்குச் சென்ற இந்தியரான ராகேஷ் சர்மாவுக்கும் பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கும் இடையே நடந்த உரையாடல். விண்ணில் ரஷ்ய விண்வெளி மையத்தில் இருந்த சர்மாவிடம் இந்திரா காந்தி கேட்ட கேள்விக்கு, எல்லா நாடுகளையும் விட மிக அழகாக இருக்கிறது (சாரே ஜகான் சே அச்சா!) என்று பதில் தந்தார் ராகேஷ்.
நிற்க.

நாஸாவின் விண்வெளிப் படங்கள்:
இப்போது அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா இரவு நேரத்தில் பூமியின் தோற்றத்தைப் படம் பிடித்து வெளியிட்டுள்ளது. இவ்வாறு பலமுறை உலகின் பல பகுதிகளை நாஸா படம் பிடித்து வெளியிட்டிருந்தாலும் அது ஏவிய Suomi National Polar-orbiting Partnership satellite என்ற செயற்கைக் கோள் எடுத்த படங்கள் இவை.
பூமியை பகுதி, பகுதியாக இந்த செயற்கைக் கோள் எடுத்த படங்கள் ஒன்றாக இணைக்கப்பட்ட படம் இது. பூமி முழுதும் ஒரே நேரத்தில் இரவாய் இருந்தால், இந்தப் படத்தில் இருப்பது போலத்தான் இருக்கும்.

ஏப்ரலிலும் அக்டோபரிலும்..
இந்தப் படங்கள் கடந்த ஏப்ரல் மாதம் 9 நாட்களும், அக்டோபர் மாதம் 13 நாட்களும் எடுக்கப்பட்டவை. இந்தப் படங்களில் இருந்து இந்திய நகரங்கள், இந்தியப் பகுதிகள் இரவில் எப்படித் தெரிகின்றன என்று ஒரு பார்வை....

இது தான் இரவில் சென்னையின் தோற்றம்..
நீங்கள் விண்வெளிக்குப் போனால் அங்கியிருந்து இரவில் சென்னையைப் பார்த்தால் இப்படித்தான் இருக்கும். ஒரு பக்கம் வங்கக் கடலின் இருட்டி, மறுபக்கம் சென்னைப் பகுதியின் மிகப் பிரகாசமான பகுதி, இதைச் சுற்றி வட தமிழகத்தின் பகுதிகள் என இரவில் ஜொலிக்கிறது சென்னை. (படத்தின் இடது பக்கத்தில் ஆங்காங்கே கும் இருட்டு இருக்கே.. நம்ம ஊர் பவர் கட்டாக இருக்குமோ?)

டெல்லிக்கு பவர் ஜாஸ்தி:
இது தான் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள். என்னமாய் ஜொலிக்குது இந்த ஊர். தலைநகரான இந்த ஊருக்கு 'பவர்' மட்டுமல்ல மின்சாரமும் உபரியாகவே உள்ளது. இந்த எக்ஸ்ட்ரா மின்சாரத்தில் கொஞ்சத்தைத் தான் தமிழ்நாடு கேட்கிறது, ஆனால், அதை காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே தருவதாக புகார் எழுந்துள்ளது.

மும்பை, புனே..
இது மும்பை, புனே ஏரியா.. இந்த இரண்டு ஊர்களைத் தவிர வேறு எந்த ஊரிலும் எதுவுமே இல்லை போலிருக்கிறது, ஒரு பல்பைக் கூட காணாமே. மும்பை மும்பை என்று அதை மட்டும் தூக்கி தலையில் வைத்து ஆடி மற்ற ஊர்களை வளரவே விடவில்லை மகாராஷ்டிரா.

பெங்களூர்..
இது தான் பெங்களூர். இதுவும் கிட்டத்தட்ட மகாராஷ்டிர கதை தான். பெங்களூரைத் தவிர மாநிலத்தின் மற்ற பகுதிகளில் வளர்ச்சி ரொம்ப ரொம்ப குறைச்சல். பெங்களூரைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பாருங்கள்.. தமிழ்நாடு மாதிரியே இருட்டா இருக்கு.

ஹைதராபாத்:
மற்ற பெருநகர்களோடும் அதைச் சுற்றிய பகுதிகளோடும் ஒப்பிடுகையில் ஹைதாபாதை ஒட்டிய பிற பகுதிகள் ஓ.கே. இங்கே ஹைதாராபாத் மட்டும் ஒளிரவில்லை, பரவலாக எல்லா பக்கமும் கரண்ட் இருக்கு. அதான், டெல்லி எக்ஸ்ட்ரா மின்சாரம் ஆந்திராவுக்குத் தானே போகுது!.

இது கொல்கத்தா..
இது, சென்னை மாதிரியே கிழக்கே வங்கக் கடல் சூழ்ந்த கொல்கத்தா நகரம்
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications