தட்ஸ்தமிழில் கமெண்ட்ஸ்.. வாசகர்களுக்கு மீண்டும் ஒரு வேண்டுகோள்...
-ஏ.கே.கான்
தட்ஸ்தமிழ் இணையத்தளத்தின் மதிப்பு மிக்க வாசகர்களுக்கு மீண்டும் ஒரு வேண்டுகோள்.
தினந்தோறும் லட்சக்கணக்கானோரால் படித்து பயன்படுத்தப்படும் உங்கள் தட்ஸ்தமிழ் இணையத்தளத்தில் சிலர் தனிப்பட்ட நபர்கள் குறித்து அவதூறான கருத்துக்களை எழுதியும், ஜாதீய, மதரீதியான தாக்குதல்களைத் தொடுத்தும், தலைவர்களை கொச்சைப்படுத்தும் வகையிலும் கமெண்ட்ஸ் எழுதுகின்றனர்.
எங்களால் முடிந்த அளவுக்கு தவறான கமெண்ட்ஸ்களை நீக்கி வருகிறோம். ஆனாலும் ஆயிரக்கணக்கில் வரும் கமெண்ட்ஸ்களை கண்காணிப்பது மிகவும் சிரமமான காரியமாகவே உள்ளது.
இதனால் இது போன்ற கமெண்ட்ஸ்களைத் தவிர்க்குமாறு நாம் அவ்வப்போது விடுக்கும் வேண்டுகோளை பலர் மதித்தாலும் சிலர் மதிக்காமல் தொடர்ந்து தவறான, பிறரை புண்படுத்தும் வகையில் எழுதி வருகின்றனர்.
இவர்கள் மீது இனி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறோம்.
தமிழக சிபிசிஐடியின் சைபர் கிரைம் பிரிவுக்கு இந்த நபர்களது ஐபி அட்ரஸ் உள்ளிட்ட விவரங்கள் அனுப்பி வைக்கப்படும். இதனால் ஏற்படும் சிக்கல்களுக்கு தவறான கமெண்ட்ஸ் எழுதுவோறே முழுக்க முழுக்க பொறுப்பாவர்.
சைபர் கிரைம் பிரிவு கோரியபடி முதல்கட்டமாக 'தத்தாச்சாரியார்', 'PedoMo', 'siripporsangam', 'tamilan' உள்ளிட்டோரின் IP விவரங்கள் அந்தப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டோருக்கும் சைபர் கிரைம் பிரிவுக்கும் தட்ஸ்தமிழ் நிர்வாகம் முழு அளவில் துணையாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இனியாவது பிறரை எந்த வகையிலும் புண்படுத்தாமல் கமெண்ட்ஸ்களை எழுதுமாறு மீண்டும் கோரிக்கை வைக்கிறோம்.
அன்புடன்,
ஆசிரியர் ஏ.கே.கான்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications