உலகை புரட்டிப் போட வரும் இந்தியா, சீனா, ரஷ்யாவின் 'அரசியல்' வங்கி!

Subscribe to Oneindia Tamil

-ஏ.கே.கான்

1939ம் ஆண்டு தொடங்கிய இரண்டாம் உலகப் போர் 1945ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி முடிவுக்கு வந்த நேரம், உலக நாடுகள் பலவும் போரால் சின்னாபின்னாவாகி அவற்றின் பொருளாதார நிலைமை சிதிலமடைந்து போன நிலை..

உலகமே கூடி ஐக்கிய நாடுகள் சபையை உருவாக்கியதோடு உலக நாடுகளின் பொருளாதாரத்தை மீட்டு எடுக்கவும் போரால் சேதமடைந்த கட்டமைப்பை மீண்டும் உருவாக்கவும் 1945ம் ஆண்டு டிசம்பரில் உருவாக்கியது தான் உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியம் எனப்படும் International Monetary Fund அமைப்பும்.

BRICS establish $100bn bank and currency reserves to cut out Western dominance

188 உலக நாடுகள் இணைந்து அவரவர் சக்திக்கு ஏற்ப பணத்தைப் போட்டு உருவாக்கியது தான் இந்த வங்கி. ஆனால், இந்த வங்கிக்கு இதுவரை 12 தலைவர்கள் இருந்துள்ளனர். அவர்கள் அனைவருமே அமெரிக்கர்கள் தான். வங்கியின் தலைமையகம் இருப்பதும் வாஷிங்டனில். ஆரம்பத்தில் உலக வங்கி முழுக்க முழுக்க ஐரோப்பிய நாடுகளுக்கே நிதியுதவி அளித்து வந்தது.

பின்னர் ஐரோப்பாவில் கம்யூனிஸ்ட் ரஷ்யா தனது ஆதிக்கத்தை பரப்ப முயல, ஐரோப்பிய நாடுகளுடன் ஒன்றிணைந்து அமெரிக்கா European Recovery Program என்ற ஒரு புதிய உதவித் திட்டத்தை தொடங்கியது. Marshall Plan என அழைக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்காவே நேரடியாக நிதியுதவி வழங்க ஆரம்பித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+