அடுத்த சில வினாடிகளில் கடும் இருள் சூழ.. மயானமானது ஹிரோஷிமா
8.15 மணி
எனோலா கே விமானத்தின் பாம் கதவுகள் திறக்க, லிட்டில் பாய் அணுகுண்டு கீழே பாய, 43 வினாடிகளை கவுண்ட் டவுன் செய்ய ஆரம்பிக்கிறது எனோலா கே விமானக் குழு. 31,000 அடிக்குக் கீழே ஏதும் அறியாத பச்சிளம் குழந்தைகள், முதியோர், பள்ளிச் சிறார்கள் என பல தரப்பட்ட மக்களும் தங்கள் அன்றாட வாழ்வில்... சரியாக தரையிலிருந்து 1,890 அடியை எனோலா கே எட்ட, 43 வினாடிகள் முடிய... இதுவரை உலகம் பார்த்திராத ஒரு மாபெரும் ஒளிப் பிழம்பு. இதுவரை கேட்டிராத ஒரு மாபெரும் ஒலி. அந்த குண்டு வெடித்த மையப் பகுதியில் இருந்து சுமார் 5 கி.மீ. சுற்றளவில் இருந்த மனிதர்கள், விலங்குகள் அனைத்தும் பஸ்பமாகிவிட, கட்டிடங்கள் சிதறி விட ஒன்றுமே மிச்சமில்லை.

அடுத்த சில வினாடிகளில் அணுகுண்டின் ஒளி மறைய, ஹிரோஷிமாவை ஆக்கிரமிக்கிறது கடும் இருளும் புகை மூட்டமும். மயான அமைதி. அதே நேரத்தில் குண்டுபோட்ட எனோலா கே விமானம் கதிர்வீச்சிலிருந்து தப்ப உயரத்தை அதிகரித்தபடியே, எதிர் திசையில் பறக்க அவர்களையும் விரட்டுகிறது அணுகுண்டு வெடிப்பின் அதிர்வலைகள்.
கீழே குண்டு வெடித்த இடத்திலிருந்து அதன் அதிர்வலைகள் எல்லா பக்கமும் பரவியபடி, வழியில் இருந்த உயிர்கள், கட்டிடங்களை நிர்மூலமாக்க, துணை விமானியான லூயிஸ், நாம் என்ன காரியம் செய்துள்ளோம். கீழே என்ன நடக்கிறது. எத்தனை பேரை கொன்று கொண்டிருக்கிறோம் என தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அலற, விமானத்தில் இருந்த அனைவரிடத்திலும் அதே கேள்விகள். இப்படி ஒரு சேதமா என தாங்களே வெறித்தபடி வேகமாக அமெரிக்கா நோக்கி திரும்புகிறது எனோலா கே.

இந்த தாக்குதலில் உடனடியாக பஸ்பமானவர்கள் சுமார் 1 லட்சம் பேர். கதிர்வீச்சால் உடல் எரிந்து, தோல் எரிந்து போய், உடல் திசுக்கள், உறுப்புகள் பாதிக்கப்பட்டு அடுத்த நாட்களில், வாரங்களில், மாதங்களில் பலியானவர்கள் மேலும் 1 லட்சம் பேர். குண்டுவெடித்ததில் ஏற்பட்ட பயங்கரமான அதிர்வலையில் பல பேரின் கண்கள் அவர்களின் கண் குழிகளில் இருந்து வெளியேறி தொங்கியது தான் மகா கொடூரம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications