விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முருகானந்தம் IAS என்று முதல்வர் ஸ்டாலின் கூறினாரா? உண்மை என்ன?
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முருகானந்தம் IAS என்று முதல்வர் ஸ்டாலின் கூறியதாக சமூக வலைதளங்களில் சிலர் வீடியோக்களை பரப்பி வருகிறார்கள். அதற்கு ஆதாரமாக முதல்வர் ஸ்டாலினின் சமூக வலைதளப்பக்கத்தில் போன நேரலை வீடியோவை இணைத்துள்ளார்கள். இதை பார்க்கும் போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முருகானந்தம் IAS என்று முதல்வர் கூறுவது போல் இருந்தது. இது உண்மையல்ல என்பது உண்மை சரிபார்ப்பில் தெரியவந்தது.
சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்களுக்கு நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் வழங்குதல் மற்றும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, அம்பேத்கர் நினைவு நாளான நேற்று நடந்தது. இந்த விழாவில் அமைச்சர்கள் நேரு, ரகுபதி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மதிவேந்தன், பெருநகர சென்னை மேயர் பிரியா, எம்.எல்.ஏ.க்கள் செல்வப்பெருந்தகை, பரந்தாமன், தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதேபோல் இந்த விழாவில் அரியலூர் மாவட்டத்தில் இருந்து காணொலிக்காட்சி மூலம் விடுதலை சிறுத்தைக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்றார்.

தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்களுக்கு நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்களை வழங்கிவிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களை தமிழில் மொழிபெயர்த்து அதை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது விரைவில் வெளிவர உள்ளது. தேச விடுதலைக்கு பிறகு, இதுவரை பட்டியலின பழங்குடியினருக்கு என்று தனியாக முதன்முதலாக தொடங்கப்பட்ட தொழில் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம். மிகவும் குறுகிய காலத்திலேயே 2,136 பயனாளிகளுக்கு வங்கிகளால் கடன்கள் அனுமதிக்கப்பட்டு, அதில் தகுதியான 1,303 தொழில் முனைவோர்க்கு, அரசு மானியமாக மட்டும் ரூ.160 கோடி வழங்கப்பட்டு இருக்கிறது. அதில் 288 பெண் தொழில் முனைவோருக்கு மட்டும் ரூ.33 கோடி மானியமாக வழங்கப்பட்டிருக்கிறது.
அரசுக்கு களப்பணியில் நல்ல பெயர் கிடைக்க முழு முதல் காரணம், தூய்மைப் பணியாளர்கள்தான். அரசின் பணிகளை ஊடகங்களும், பொதுமக்களும் பாராட்டும்போது மனசுக்குள் தூய்மைப் பணியாளர்களைதான் நினைத்துக்கொள்வேன். அரசு அதிகாரிகள், ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் என எல்லோரும் சேர்ந்து நேரம் காலம் பார்க்காமல் ஆற்றிய பணிகளால்தான் அந்த நல்ல பெயர் நமக்கு கிடைக்கிறது.
நான் எத்தனை நன்றி சொன்னாலும், அதெல்லாம் உங்கள் தொண்டுக்கு நிச்சயமாக ஈடாகாது. அதனால்தான், உங்களின் சுயமரியாதையை உங்கள் பணிக்கான மரியாதையை கொடுக்க உங்களில் ஒருவனாக உங்கள் கூடவே நான் இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரைக்கும், தூய்மைப் பணியாளர்கள் என்று சொல்வதைவிட, தூய உள்ளம் கொண்ட பணியாளர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் தொடங்கப்பட்டது. அதில் கடந்த மூன்று ஆண்டுகளில், 3 லட்சத்து 6 ஆயிரத்து 775 உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர். இன்று 35 ஆயிரம் உறுப்பினர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தில், பதிவு செய்திருக்கும் உறுப்பினர்களுக்கு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக, அடுக்குமாடிக் குடியிருப்புகளில் 90 சதவீதம் அரசு மானியத்துடன் ஆயிரம் வீடுகள் பல்வேறு மாவட்டங்களில் வழங்கப்பட்டு இருக்கிறது.
திருவான்மியூரில் தற்காலிக வீட்டில் வசித்து வரும் நரிக்குறவர், தூய்மைப் பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு முழு மானியத்துடன் தாட்கோ மூலமாக வீடு கட்டித் தரப்போகிறோம். நம்முடைய குறிக்கோள் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலநிலைக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வைத்த கோரிக்கையின்படி, உடனடியாக அதிகாரிகளை அழைத்து, அதை எந்திரமயமாக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டத்தின் மூலமாக பணியாளர்களுக்கு மாதத்திற்கு குறைந்தபட்ச வருமானமாக தலா ரூ.50 ஆயிரம் என்று 7 ஆண்டுகளுக்கு உறுதி செய்யப்படும்.
இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலமும் நிறைவேற்றாத, புதுமை திட்டங்களை நாம் நிறைவேற்றுகிறோம். சமூகநீதி வழியாக, சமத்துவ சமுதாயத்தை படைக்க பாடுபடுகிறோம். நம்முடைய லட்சிய பயண வழியில் ஒரு சில தடைகள், இடர்பாடுகள் இருப்பதை நான் மறுக்கவில்லை. உடனே அதை மட்டும் சிலர் பெரிதுப்படுத்தி, அரசியலாக பார்க்க என்னென்ன பேசுகிறார்கள். இதுதான் பெரியார் மண்ணா? இதுதான் அம்பேத்கர் மண்ணா? என்று கேள்வி கேட்கிறார்கள்.
ஒரு இடத்தில் நடந்த சம்பவத்தை முழுமையாக புரிந்துகொள்ளாமல் திட்டமிட்டு வதந்திகளை பரப்பி, அரசுக்கு அவப்பெயர் உண்டாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது, உங்கள் மதவெறி, சாதிவெறி எண்ணம் இந்த பெரியார் மண்ணில், அம்பேத்கர் கொள்கைகள் உரம் பெற்று இருக்கும் மண்ணில் ஒருபோதும் நிறைவேறாது, இந்த ஸ்டாலின் இருக்கும் வரை உங்களால் அதை நிறைவேற்றவும் முடியாது. சமூகத்தை பிளவுபடுத்தும் சக்திகளை மக்களிடம் அம்பலப்படுத்தி, சமூகநீதிக் கொள்கையை நிலைநாட்டி, சமத்துவ சமுதாயத்தை உருவாக்கியே தீருவோம். இதுதான் பெரியார் மீதும், அம்பேத்கர் மீதும் நாங்கள் எடுக்கும் உறுதிமொழி" இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
முன்னதாக நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசுவதற்கு ஆரம்பிக்கும் முன்பு, நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை மரியாதை நிமத்தமாக அழைத்தார். அதன்படி காணொலிக்காட்சி மூலம் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பெயரை குறிப்பிட்டார். இதேபோல் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஐஏஎஸ் பெயரையும் குறிப்பிட்டார். திருமாளவனை பற்றி குறிப்பிடும் போது, நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், என் அருமை சகோதரர் எழுச்சி தமிழர் திருமாவளவன் அவர்களே, துணை மேயர் மகேஷ் குமார் அவர்களே, தலைமை செயலாளர் முருகானந்தம் ஐஏஏஸ் அவர்களே என்று கூறினார்.
ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முருகானந்தம் IAS என்று கூறியதாக முதல்வர் ஸ்டாலினின் சமூக வலைதளப்பக்க லைவில் வந்தது. இதை பார்த்த சிலர், அதை மட்டும் எடிட் எடுத்து பரப்பி வருகிறார்கள். உண்மையில் ஸ்டாலின் பேசிய போது, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் என்று பேசிக்கொண்டிருக்கும் போதே லைவ்வில் கட்டாகி மீண்டும் வந்துள்ளது. இதனால் நேரடியாக முருகானந்தம் ஐஏஎஸ் என்று லைவில் வந்திருக்கிறது. இந்த உண்மை தெரியாமல், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முருகானந்தம் IAS என்று முதல்வர் ஸ்டாலின் கூறியதாக சிலர் வதந்தி பரப்பி வருகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

Fact Check
வெளியான செய்தி
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முருகானந்தம் IAS என்று முதல்வர் ஸ்டாலின் கூறியதாக வீடியோ பரவி வருகிறது. அதற்கு ஆதாரமாக முதல்வர் ஸ்டாலினின் சமூக வலைதளப்பக்கத்தில் போன நேரலையை இணைத்துள்ளார்கள்.
முடிவு
ஸ்டாலின் பேசிய போது, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் என்று பேசிக்கொண்டிருக்கும் போதே லைவ்வில் கட்டாகி மீண்டும் வந்துள்ளது.இதனால் நேரடியாக முருகானந்தம் ஐஏஎஸ் என்று சிலவினாடிகள் வந்துள்ளது
ரேட்டிங்
-
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications