Fact Check: வெள்ள மீட்பு பணியின்போது ஜாலியாக உதயநிதி ஸ்டாலின் செல்ஃபி எடுத்ததாக பரப்பப்பட்ட வதந்தி
சென்னை: தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காகச் சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செல்ஃபி எடுத்து மகிழ்ந்ததாக பாஜகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதன் உண்மைத் தன்மை குறித்து பார்க்கலாம்.
பாஜகவைச் சேர்ந்த பலரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செல்போனை உயர்த்திப் பிடித்தபடி இருக்கும் ஒரு படத்தைப் பதிவிட்டு, தென் மாவட்டங்களில் கொட்டிய கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில் அங்கு சென்று மகிழ்ச்சியாக செல்ஃபி எடுத்துக் கொண்டிருக்கிறார் என விமர்சித்து பதிவிட்டிருந்தனர்.

பாஜக நிர்வாகி கல்யாண் ராமனும் தனது எக்ஸ் தளத்தில் அந்தப் புகைப்படத்தை பதிவிட்டு கடுமையாக விமர்சித்திருந்தார். "ஒரு சோகமான சூழ்நிலையில் மற்றவர்கள் மனம் கோண சிரிப்பதும், மோசமான வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் செல்பி எடுப்பதும் அரக்கர்களின் மனநிலை; அறிவிலிகள் செயல்" எனத் தெரிவித்திருந்தார்.
ஆனால், இந்தப் புகைப்படம் குறித்து தேடியதில், இந்தப் புகைப்படத்தை தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினே பதிவிட்டிருந்தது தெரியவந்தது. அவரது பதிவின் மூலம், அது செல்ஃபி எடுத்த காட்சி அல்ல, வீடியோ கான்பரஸ் காலில் பேசும்போது எடுக்கப்பட்ட படம் என்பதும் தெரியவந்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தென் மாவட்டங்களில் அதிதீவிர கன மழை பெய்துள்ள நிலையில் நெல்லை - தூத்துக்குடி - கன்னியாகுமரி - தென்காசி ஆகிய மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை ஒருங்கிணைத்து வரும் அமைச்சர்கள் - அரசு உயர் அதிகாரிகள் - அலுவலர்களை டெல்லியிலிருந்து காணொலி காட்சி வாயிலாக தொடர்பு கொண்டு கள நிலவரத்தைக் கேட்டறிந்தார்.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், தென் மாவட்டங்களில் அதிதீவிர கன மழை பெய்துள்ள நிலையில் நெல்லை - தூத்துக்குடி - கன்னியாகுமரி - தென்காசி ஆகிய மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை ஒருங்கிணைத்து வரும் மாண்புமிகு அமைச்சர்கள் - அரசு உயர் அதிகாரிகள் - அலுவலர்களை… pic.twitter.com/8n62fNiRXm
— Udhay (@Udhaystalin) December 18, 2023
நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் நிவாரண உதவிகளை வழங்கி வரும் நிலையில், பாளையங்கோட்டை சமாதானபுரம் நிவாரண முகாமிலிருந்து நெல்லையில் உள்ள சூழல் குறித்து நம் முதலமைச்சர் அவர்களிடம் எடுத்துரைத்தோம். இந்த இயற்கைப் பேரிடர் நேரத்தில் மக்களை காப்பதற்கான பல்வேறு ஆலோசனைகளை முதலமைச்சர் வழங்கினார். ஒன்றிணைந்து செயல்பட்டு இப்பேரிடரிலிருந்து தென் மாவட்ட மக்களை மீட்போம்." எனத் தெரிவித்துள்ளார்.
ஒரு சோகமான சூழ்நிலையில் மற்றவர்கள் மனம்கோண சிரிப்பதும், மோசமான வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் செல்பி எடுப்பதும் அரக்கர்களின் மனநிலை; அறிவிலிகள் செயல் @udhaystalin pic.twitter.com/OiR8XjrceQ
— Kalyan Raman (@KalyaanBJP_) December 18, 2023
டெல்லியில் இருந்தவாறு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்தபோது எடுக்கப்பட்ட படத்தை, உதயநிதி ஸ்டாலின் செல்ஃபி எடுத்ததாக தவறான தகவலை பலரும் பரப்பியுள்ளனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கடந்த 3 நாட்களாக தென் மாவட்டங்களில் தீவிரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Fact Check
வெளியான செய்தி
வெள்ள பாதிப்பை பார்வையிடச் சென்ற இடத்தில் உதயநிதி ஸ்டாலின் செல்ஃபி எடுத்ததாக புகைப்படம் ஒன்று பரவியது.
முடிவு
உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோருடன் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பேசும் காட்சி அது.












Click it and Unblock the Notifications