அதிகாலையில் அலறிய செல்போன்.. அடுத்த நொடி விழுந்த ஏவுகணைகள்.. மத்திய கிழக்கில் வெடிக்கும் பதற்றம்!

Subscribe to Oneindia Tamil

துபாய்: வளைகுடாவில் இப்போது மீண்டும் பதற்றம் வெடித்துள்ளது. ஹார்முஸை மறு அறிவிப்பு வரும் வரை மூடுவதாக ஈரான் அறிவித்த நிலையில், ஈரானின் 140 முக்கிய ராணுவ இலக்குகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதனால் ஆத்திரமடைந்த ஈரான், அங்குள்ள பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் அமீரக நாடுகளை நோக்கி ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. இது அங்கு மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வளைகுடாவில் கடந்த இரு மாதங்களாக மெல்ல அமைதி திரும்பி வந்த நிலையில், இப்போது மீண்டும் மோதல் வெடித்துள்ளது. ஹார்முஸில் தான் அனுமதிக்கப்பட்ட ரூட்டை விட்டுவிட்டு வேறு ரூட்டில் பயணித்த கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதுவே இரு தரப்பிற்கும் இடையேயான மோதலை மீண்டும் ஆரம்பித்துள்ளது.

High alert in Middle east iran israel

வளைகுடாவில் பரவும் மோதல்

இப்போது இந்த மோதல் வளைகுடா முழுக்க பரவியுள்ளது.. ஒரு பக்கம் ஹார்முஸை முழுமையாக மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. இதனால் ஈரானில் உள்ள சுமார் 140 ராணுவ இலக்குகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்து. இதற்கு பதிலடியாக ஈரானும் மற்ற வளைகுடா நாடுகள் நாடுகள் மீது தாக்குதல் நடத்த நிலைமை இப்போது மோசமாகவே உள்ளது.

இந்த தாக்குதல்களை தொடர்ந்து வளைகுடா நாடுகள் தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகளை ஹை அலர்ட் நிலையில் வைத்துள்ளன. பல நாடுகள் வான்வெளி பாதுகாப்பை பலப்படுத்தியதுடன், பொதுமக்களுக்கு செல்போன் மூலம் அவசர எச்சரிக்கை மெசேஜ்களையும் அனுப்பியுள்ளன. உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தகப் பாதைகளில் ஒன்றாக கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள இந்த பதற்றம் மீண்டும் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் தாக்குதலை அமீரகம் தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் இடைமறித்துவிட்டதாகக் கூறியுள்ளது. குவைத்தும் தனது பாதுகாப்பு படை எதிரி ஏவுகணைகளை தடுத்து அழித்ததாக கூறியுள்ளது.

ஈரான் விளக்கம்

இந்த தாக்குதல்களை ஈரானும் உறுதி செய்தாலும், அது தனது அண்டை நாடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தவில்லை என கூறியுள்ளன. இதற்கிடையில் கத்தாரில் உள்ள மத்திய கிழக்கின் மிக பெரிய அமெரிக்க ராணுவத் தளமான அல் உதைத் விமானப்படை தளத்தை ஏவுகணைகள் மூலம் தாக்கியதாக ஈரான் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. அங்கு போர் விமான பராமரிப்பு மையம் மற்றும் கட்டுப்பாட்டு மையம் சேதமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த தகவல்களை அமெரிக்கா அல்லது கத்தார் உறுதிப்படுத்தவில்லை.

அதிகாலை பறந்த எச்சரிக்கை மெசேஜ்

இந்த திடீர் தாக்குதலில் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து, பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் அவசர எச்சரிக்கையை அறிவித்தது. இதையடுத்து பல பகுதிகளில் அபாய சைரன்கள் ஒலிக்கப்பட்டன. கத்தாரிலும் பல பகுதிகளில் பெரும் வெடிப்பு சத்தங்கள் கேட்கப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.36 மணிக்கு அங்குள்ள மக்களுக்கு எச்சரிக்கை மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. வான்வெளி தாக்குதல் அபாயம் இருப்பதால் யாரும் ஜன்னல்களுக்கு அருகில் செல்ல வேண்டாம் என்றும் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதேபோல ஜோர்டனில் உள்ள பிரின்ஸ் ஹசன் விமானப்படை தளத்தில் செயல்பட்டு வரும் அமெரிக்க ராணுவ மையங்கள் மீதும் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இப்படி வளைகுடா முழுக்க மீண்டும் போர் பதற்றம் சூழ்ந்துள்ளது.

மாறி மாறி மிரட்டல்

இப்படிப் போர் நடவடிக்கைகள் தீவிரமடைந்த நிலையில், அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்செத் ஈரானை நேரடியாக எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர், "ஈரான் தவறான முடிவை எடுத்துள்ளது. இப்போது அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்" என்று பதிவிட்டார். மறுபுறம் ஈரானும் அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது.

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஈரானின் மூத்த பேச்சுவார்த்தை பிரதிநிதி முகமது பாகர் காலிபாஃப், "நாங்கள் ஏற்கனவே கூறிவிட்டோம். எங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுங்கள்.. இல்லை என்றால் அதற்கான விலையை கொடுக்க வேண்டி இருக்கும். ஒருதலைபட்ச நடந்து கொண்டாலும் அமைதியாக இருந்த காலம் முடிந்துவிட்டது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+