செம அழகு.. சுவீடனில் இப்படி ஒரு கிரகணமா? 5 ஆக பிரிந்தா சூரியன்? டிரெண்டாகும் வீடியோ - Fact Check
ஸ்டாக்ஹோம்: சுவீடன் நாட்டின் மலைப்பகுதியில் சூரிய கிரகணத்தை முன்னிட்டு சூரியன் ஐந்து ஓளிக்கதிர்களாக தென்பட்டதாக சமூக வலைதளங்கள் வீடியோ வெளியாகி காண்போரை கவர்ந்து இருக்கும் நிலையில் இதன் உண்மை தன்மையை அலசுகிறது இந்த செய்தி.
2022 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்காவின் வடகிழக்கு நாடுகள், மேற்கு ஆசியா, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல், வடக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் இன்று மாலை தென்பட்டது.
இந்தியாவில் மேற்கு வங்கத்துக்கு அப்பால் உள்ள அசாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்களை தவிர்த்து பெரும்பாலான பகுதிகளில் இந்த சூரிய கிரகணம் தென்பட்டுள்ளது.

இந்தியாவில் கிரகணம்
இந்தியாவில் இன்று மாலை 4:29 மணிக்கு தென்படத் தொடங்கிய இந்த சூரிய கிரகணம், சூரிய அஸ்தமன நேரமான 5:42 மணியளவில் மறைந்தது. முக்கிய நகரங்களில் மாலை 5:30 மணியளவில் முழு சூரிய கிரகணத்தையும் மக்கள் பார்த்து ரசித்தனர். இந்தியாவில் மொத்தம் 1.45 மணி நேரம் இந்த கிரகணம் தென்பட்டது.

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள், கோவை, ஊட்டி உள்ளிட்ட மேற்கு மாவட்டங்கள், கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் என மாநிலத்தின் பல்வேறு இடங்களில் சூரிய கிரகணம் தெளிவாக தென்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர். ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் சூரிய கிரகணம் தெரிந்துள்ளது.

பகிரப்படும் படங்கள்
இந்த சூரிய கிரகணத்தை சாதாரண கண்களில் சூரிய கிரகணத்தை பார்க்கக்கூடாது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து இருந்தனர். தொலைநோக்கிகள் உதவியுடன் இதனை பொதுமக்கள் கண்டுகளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. தமிழ்நாட்டில் சூரிய கிரகணம் தென்பட்டதற்காக புகைப்படங்களையும் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

சுவீடனில் கிரகணம்
இந்த புகைப்படங்களுக்கு மத்தியில் சுவீடனில் தென்பட்ட சூரிய கிரகணம் என்ற ஒரு வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. பனிசூழ்ந்த ஒரு மலைப்பகுதியில் அதில் சூரியன் 5 ஒளிக்கதிர்களாக காட்சி தருகிறது. இதனை அந்த மலைப்பகுதியில் பனிச்சருக்கு விளையாடும் வீரர்களும், பொதுமக்களும் ஆவலுடன் பார்த்து ரசித்து வருகிறார்கள்.

உண்மையான வீடியோவா?
நிறபிரிகை மற்றும் ஒளி வட்டத்தால் சூரியன் 5 பிரிவுகளாக பிரிந்து காட்சியளிக்கிறது என்ற விளக்கத்துடன் இந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது. ஆனால், சுவீடன் நாட்டு ஊடகங்கள் மற்றும் பிற சர்வதேச ஊடகங்களில் இந்த வீடியோவும், செய்தியும் வெளியிடப்படவில்லை. எனவே இது உண்மையான தகவல்தானா என்ற தேடுதலில் ஒன் இந்தியா ஈடுபட்டது.

5 ஆண்டு பழைய வீடியோ
இந்த வீடியோ இதற்கு முன் ஊடகங்களில், இணையதளங்களில் வெளியாகி உள்ளதா என்று நாம் தேடியபோது, தி லோக்கல் என்ற சுவீடன் ஊடகத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே இந்த வீடியோவின் ஸ்க்ரீன்ஷாட் பகிரப்பட்டு உள்ளது. முதன்முதலில் இந்த வீடியோவை பேஸ்புக்கில் பதிவிட்டவர் லட்விக் என்ற பனிச்சருக்கு வீரர். வளிமண்டத்தில் உறைந்த நிலையில் இருக்கு தண்ணீரில் சூரிய ஓளி பட்டு பிரதிபலிப்பதால் இவ்வாறு காட்சியளிப்பதாக நாசா விளக்கியுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
வெளியான செய்தி: சூரிய கிரகணத்தின்போது சுவீடன் மலைப்பகுதியில் சூரியன் 5 ஆக பிரிந்து காட்சியளித்ததாக பகிரப்படும் வீடியோ.
முடிவு
4 ஆண்டுகளுக்கு முன் சுவீடனில் எடுக்கப்பட்ட வீடியோ இது. சூரிய கிரகணத்தின்போது இவ்வாறு நிகழவில்லை
ரேட்டிங்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications