Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மரண விளிம்பு! டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் 5 பேரும் எப்படி இருந்தார்கள்? வெளியான வீடியோ! உண்மையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் பார்க்க சென்று 5 பேர் பலியான நிலையில் அவர்கள் மரணத்தின் விளிம்பில் எப்படி இருந்தார்கள்? என்பது தொடர்பாக இணையதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி அதிகமாக ேஷர் செய்யப்பட்டு வரும் நிலையில் அது உண்மையா? என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

1912ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நீராவி என்ஜினுடன் இயங்கிய மிகப்பெரிய சொகுசு கப்பலான டைட்டானிக் பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டைட்டானிக் கப்பல் 2 துண்டுகளாக உடைந்து கடலில் மூழ்கியது. இந்த கோர விபத்தில் 1500க்கும் அதிகமானவர்கள் இறந்தனர். இதையடுத்து டைட்டானிக் கப்பலின் பாகங்களை தேடும் பணி தொடங்கியது.

Fact Check: Amid of 5 death the video shared on social media its shot inside the Titan during to visit Titanic wreckage?

பல ஆண்டுகளாக இந்த பணி நடந்தது. கடந்த 1985ல் டைட்டானிக் கப்பலின் பாகங்கள் கனடாவின் நியூ பவுண்ட்லாந்திலிருந்து 400 மைல் தொலைவில் கடலுக்கடியில் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த கப்பல் கடலில் 12,500 அடி ஆழத்தில் கிடக்கிறது. இதையடுத்து டைட்டானிக் கப்பல் தண்ணீரில் மூழ்கியதை வைத்து டைட்டானிக் படம் உருவானது.

மேலும் கடலுக்கடியில் மூழ்கி கிடக்கும் டைட்டானிக் கப்பலை பார்க்க ‛தி ஓசன் கேட்' நிறுவனம் நீர்மூழ்கி கப்பல் மூலம் சேவையை தொடங்கியது. கடந்த 18 ம் தேதி டைட்டன் என்ற நீர்மூழ்கி கப்பலில் பிரிட்டன் தொழிலதிபர்களான ஹமிஷ் ஹார்டிங் (வயது 58), ஷாஜதா தாவூத் (48) அவரது மகன் சுலைமான் (19), பிரெஞ்ச் ஆய்வாளர் பால் ஹென்றாி நர்கோலெட் (77) மற்றும் ‛தி ஓசன் கேட்' நிறுவனத்தின் சிஇஓ ஸ்டாக்டன் ரஷ் ஆகியோர் டைட்டானிக் கப்பலை பார்க்க சென்றனர்.

இந்த நீர்மூழ்கி கப்பல் கடலுக்கடியில் சென்ற 1.45 மணிநேரத்தில் கடலின் மேற்பரப்பில் நிறுத்தப்பட்டு இருந்த கப்பலிடம் இருந்து தகவல் தொடர்பை இழந்தது. இதையடுத்து 4 நாட்களாக மீட்பு பணிகள் நடந்தன. சோனார் கருவி மற்றும் புது டெக்னாலஜியுடன் தயாரிக்கப்பட்ட ரிமோட் கண்ட்ரோல் கருவிகள் மூலம் நீர்மூழ்கி கப்பலை தேடும் பணி தீவிரமாக நடந்தது.

இந்த மீட்பு பணியின் 5வது நாளில் நீர்மூழ்கி கப்பல் கடலுக்குள் அழுத்தம் தாங்காமல் வெடித்து சிதறியதும், அதில் பயணித்த 5 பேரும் உயிரிழந்ததும் தெரியவந்தது. இந்த விபத்து தொடர்பாக தற்போது சர்வதேச விசாரணை ஏஜென்சிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் நீர்மூழ்கி கப்பலின் பாகங்களை கண்டுபிடிக்கும் பணி நடந்து வரும் நிலையில் மனித எச்சங்களுடன் கூடிய பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் தான் தற்போது இணையதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதாவது டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் டைட்டானிக் கப்பல் அருகே சென்றது போல் அந்த வீடியோ உள்ளது. மேலும் நீர்மூழ்கி கப்பலின் ஜன்னல் வழியே அதில் பயணித்த 5 பேரும் டைட்டானிக் கப்பலின் பாகங்களை பார்ப்பது போன்றும் அந்த வீடியோ அமைந்துள்ளது. இது தான் டைட்டானிக் கப்பலை பார்க்க சென்ற 5 பேரின் இறுதி நொடிகள் எனக்கூறி அந்த வீடியோ வேகமாக பரப்பப்பட்டு வருகிறது. 45 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவை பார்க்கும் பலரும் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் இன்னும் சிலர் வீடியோ குறித்து சந்தேகம் எழுப்பினர். அதாவது இந்த வீடியோ என்பது டைட்டானிக் சொகுசு கப்பலின் உடைந்த பாகங்களை பார்க்க சென்று இறந்த 5 பேர் இல்லை என தெரிவித்தனர். இதனால் மக்களுக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அந்த வீடியோவில் பயணிப்பது யார்? வீடியோ எப்போது எடுக்கப்பட்டது? என்பது பற்றி ஆய்வு தொடங்கியது. இந்த ஆய்வில் அந்த வீடியோவின் உண்மை தன்மை கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது, அந்த வீடியோ என்பது டைட்டானிக் கப்பலை பார்க்க சென்ற டைட்டன் நீர்மூழ்கி கப்பல் தான் என்பது தெரியவந்துள்ளது. ஆனால் இந்த வீடியோ என்பது இப்போது எடுக்கப்பட்டது இல்லை. தற்போது பரவும் இந்த வீடியோ கடந்த 2021ல் எடுக்கப்பட்டதாகும். அதோடு தற்போது பயணம் செய்தவர்களில் 5 பேரும் ஆண்கள் தான். ஆனால் வலைதளங்களில் பரவி வரும் வீடியோவில் பெண் ஒருவர் உள்ளார்.

மேலும் இந்த வீடியோ குறித்து ஓரியன் கேட் நிறுவனத்தை சேர்ந்த ஆரோன் நியூமன் இன்டர்வியூ ஒன்றை கொடுத்துள்ளார். அந்த இன்டர்வியூவில் தற்போது பரவும் வீடியோ காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதாவது ஆரோன் நியூமன் உள்பட சிலர் 2021 ஆகஸ்ட்டில் டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் டைட்டானிக்கை பார்த்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தான் தற்போது வேகமாக பரவி வருவதும் தெரியவந்தது. மேலும் அதில் உள்ள பெண் பெயர் பிரிட்ஜெட் பக்ஸ்ட்ன். இவர் ஒரு கடல் தொல்பொருள் ஆய்வாளர் என்பதும் உறுதியாகி உள்ளது.

Fact Check

வெளியான செய்தி

கடலுக்கடியில் டைட்டானிக் கப்பலை பார்க்க சென்று இறந்த 5 பேரின் இறுதி நொடிகள் என டைட்டன் நீர்மூழ்கி கப்பல் தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.

முடிவு

இந்த வீடியோ டைட்டானிக்கை பார்க்க சென்ற டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் தான் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வீடியோ இப்போது எடுக்கப்படவில்லை. இந்த வீடியோ கடந்த 2021ல் எடுக்கப்பட்டதாகும்.

ரேட்டிங்

Misleading
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+