Fact Check: தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள்.. ஜனவரி 26ல் வெளியாகிறது அறிவிப்பு! உண்மை என்ன?
சென்னை: தமிழகத்தில் உள்ள பெரிய மாவட்டங்களை பிரித்து ஐந்து மாவட்டங்கள் அறிவிக்கப்பட இருப்பதாகவும், இது தொடர்பான அறிவிப்பு ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழாவில் வெளியாகும் என நாளிதழ் செய்தி போல ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அது பொய்யான தகவல் என்பதும், இரண்டு ஆண்டு களுக்கு தயாரிக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை தற்போது மீண்டும் பரப்பி வருவது தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என சில மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தொடர்ந்து இது தொடர்பாக அரசுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது நாளிதழ் செய்தி போல வடிவமைக்கப்பட்ட அந்த படத்தில் தமிழகத்தில் புதிதாக ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்பட இருப்பதாகவும், ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழாவில் அறிவிப்பு வெளியாக உள்ளது என கூறப்பட்டிருக்கிறது.
அதில்," கடலூர் மாவட்டம் இரண்டாக பிரித்து விருத்தாசலம் மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம் இரண்டாக பிரித்து செய்யாறு மாவட்டம் கோயமுத்தூர் இரண்டாக பிரித்து பொள்ளாச்சி மாவட்டம். தஞ்சாவூர் மாவட்டம் இரண்டாக பிரித்து கும்பகோணம் மாவட்டம் சேலம் மாவட்டம் இரண்டாக பிரித்து ஆத்தூர் மாவட்டம். விருத்தாசலம் மாவட்டத்தில், விருத்தா சலம், ஸ்ரீமுஷ்ணம். திட்டக்குடி, வேப்பூர் தாலுக்காக்கள் அமையும்.
செய்யாறு மாவட்டத்தில். ஜமுனாமரத்தூர், போளூர், ஆரணி, செய்யாறு, வெண்பாக்கம், வந்தவாசி தாலுக்காக்கள் அமையும். பொள்ளாச்சி மாவட்டத்தில், கிணத்து கடவு, பொள்ளாச்சி, ஆனை மலை, வால்பாறை, உடுமலை, மடத்துகுளம் தாலுக் காக்கள் இருக்கும். கும்பகோணம் மாவட் டத்தில், கும்பகோணம், பாபநாசம் அமையும். திருவிடைமருதூர் ஆகிய தாலுக்காக்கள். திருவண்ணாமலை, காரைக்குடி, புதுக்கோட்டை, பொள்ளாச்சி, நாமக்கல், கோவில்பட்டி நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயரும்.
பெருந்துறை. சென்னிமலை, அவினாசி, அரூர். பரமத்தி வேலூர், ஊத்தங்கரை, செங்கம், போளூர், செஞ்சி. காட்டுமன்னார்குடி, தருவையாறு, ஓரத்தநாடு, பேராவூரணி, பொன்னமராவதி. தம்மம்பட்டி, அந்தியார். சங்ககிரி, வத்தலகுண்டு, ஆண்டிப்பட்டி ஐக்கம் பட்டி, உத்தமபாளையம், வேடசந்தூர். முது குளத்தூர், விளாத்திகுளம் ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகளாக உயரும். படப்பை, ஆண்டிமடம், திருமானூர், வேப்பந் தட்டை, தியாகதுருகம். வேப்பூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகள் பேரூராட்சிகளாக தரம் உயரும். இதன் மூலம் தமிழகத்தில் மாவட்டங்கள் எண்ணிக்கை 43 ஆக அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த புகைப்படங்களை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் (reverse image search) மூலம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட போது இது ஒரு போலி செய்தி என்பது தெரிய வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற ஒரு புகைப்படம் பகிரப்பட்ட நிலையில், தற்போது அதே புகைப்படத்தை மீண்டும் சமூக வலைதளங்களை பரப்பி வருவது தெரிய வந்துள்ளது.
Fact Check
வெளியான செய்தி
"தமிழகத்தில் உள்ள பெரிய மாவட்டங்களை பிரித்து ஐந்து மாவட்டங்கள் அறிவிக்கப்பட இருப்பதாகவும், இது தொடர்பான அறிவிப்பு ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழாவில் வெளியாகும்" என செய்தி
முடிவு
உண்மையில் இது பொய்யான செய்தி ஆகும். இரண்டு ஆண்டுகளுக்கு தயாரிக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை தற்போது மீண்டும் பரப்பி வருகின்றனர்.
ரேட்டிங்
Misleading
-
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
மேட்டர் சீரியஸ்.. களவாடப்பட்ட மின்வாரிய ஹார்ட் டிஸ்க்ஸ்! வேலையை ஆரம்பித்த சிபிசிஐடி! சிக்குவது யார்?












Click it and Unblock the Notifications