Fact Check: டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. பேருந்து சேவை நிறுத்தமா? உண்மை என்ன?
சென்னை: டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆனால் அந்தச் செய்தி பழையது. தற்போது பேருந்து சேவை நிறுத்தம் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. தற்போது பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் கனமழை காரணமாக, சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். அதற்கடுத்த இரு நாட்களில் வடமேற்கு திசையில் தமிழ்நாடு இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் சின்னம் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு நாளை (26.11.2024) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் (27.11.2024) ரெட் அலர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை எதிரொலியாக பேருந்து சேவை நிறுத்தம் என சமூக வலைதளங்களில் செய்தி ஒன்று பகிரப்பட்டு வருகிறது. அதில், “நாளை மதியம் 1 மணி முதல் ஏழு மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம். புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பேருந்து நிறுத்தம்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஆனால், இந்தச் செய்தி பழையது எனத் தெரியவந்துள்ளது. தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள தகவலில், அந்த நியூஸ் கார்டு பழையது என்றும், தற்போது டெல்டா மழை எச்சரிக்கையை முன்னிட்டு பரப்பப்பட் டு வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளது. ஆகவே, டெல்டா மாவட்டங்களில் வழக்கம் போல அனைத்து பேருந்துகளும் இயக்கப்படும், பேருந்து சேவை நிறுத்தம் என்பது உண்மை அல்ல.

Fact Check
வெளியான செய்தி
கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை மதியம் 1 மணி முதல், புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ஏழு மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக செய்தி பரவியது.
முடிவு
இந்தச் செய்தி பழையது. தற்போது இதுபோன்ற எந்த அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை.
ரேட்டிங்
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு












Click it and Unblock the Notifications