Fact check: 104க்கு போன் பண்ணா‘ரத்தம்’ வரும்..450 ரூபாய் தான்! வாட்ஸ் ஆப்பில் உலாவும் தகவல் உண்மையா?
சென்னை: "மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய திட்டம் பிளட் ஆன் 104. அதாவது 104 என்ற எண்ணுக்குப் போன் செய்தால் ரத்தம் உங்களைத் தேடி வரும். ஒரு பாட்டில் ரூ. 450 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து செலவாக கூடுதலாக ரூ. 100 தர வேண்டும்." என தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் உண்மையா என பார்க்கலாம்..
இந்தியாவில் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் சாலை விபத்துகளில் சிக்கி தங்கள் இன்னுயிரை இழந்து வருகின்றனர். மேலும் பலர் நிரந்தரவு ஊனம், பலத்த காயமடைந்து தங்கள் வாழ்வை தொலைத்து வருகின்றனர்.

எதிர்பாராத விபத்துகளில் சிக்குவோருக்கு அதிக அளவில் ரத்தம் தேவைப்படுகிறது. தானமாக பெறப்படும் ரத்தத்தில், ரத்த சிவப்பணுக்கள், தட்டையணுக்கள், வெள்ளையணுக்கள் என ரத்தத்தை பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.
ப்ளட் ஆன் கால்: இருந்த போதும், இந்தியாவில் உள்ள ரத்த வங்கிகளில் போதிய அளவு ரத்தம் இருப்பு இல்லை. இதன் காரணமாக சில நேரங்களில் அறிய வகை ரத்தம் கிடைக்காமல் உயிரிழப்புகள் ஏற்படும் நிலை கூட இருக்கிறது. இதனையடுத்து தமிழக அரசு மற்றும் மத்திய அரசு இளைஞர்கள் அதிக அளவில் ரத்த தானம் செய்ய வேண்டும் என ஊக்குவித்து வருகின்றன. மேலும் கல்லூரிகளில் சிறப்பு முகாம்கள் அமைத்து ரத்தம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தற்போது '104' என்ற எண்ணுக்கு கால் செய்தால் உடனடியாக ரத்தம் கிடைக்கும் என சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.
குறுஞ்செய்தி: அதில்,"*அரசாங்கத்தின் புதிய திட்டம்..... "இன்று முதல், "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" ஆக இருக்கப் போகிறது. "Blood_On_Call" என்பது, சேவையின் பெயர். இந்த எண்ணை அழைத்த பிறகு, 40 kms சுற்றளவில், நான்கு மணி நேரத்திற்குள், இரத்தம் டெலிவரி செய்யப்படும்.. ஒரு பாட்டிலுக்கு ரூ.450/- மற்றும் போக்குவரத்துக்கு ரூ.100/-. தயவுசெய்து இந்த செய்தியை மற்ற நண்பர்கள், உறவினர் ஆகியோருக்கும் மற்றும் நீங்கள் தொடர்பில் இருக்கும் குழுவிற்கும் அனுப்பவும். இந்த வசதி மூலம் பல உயிர்களை காப்பாற்ற முடியும்.." என கூறப்பட்டுள்ளது.
ரத்தம் கிடைக்குமா?: ஆனால் அந்த எண்ணுக்கு அழைத்தால் ரத்தம் கிடைக்காது தமிழக அரசின் மருத்துவ உதவி தான் கிடைக்கும். தற்போது இந்த செய்தியானது தவறானது என தெரிய வந்திருக்கிறது. 'பிளட் ஆன் கால் 104' என்ற சேவை 2013ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்குப் பிறகு ஒரு சில மாநிலங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில் போதிய ரத்தம் கிடைக்காததாலும் சில நடைமுறை சிக்கல்கள் காரணமாகவும் 2022ஆம் ஆண்டிலேயே இந்த திட்டம் கைவிடப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை என்ன?: அதே நேரத்தில் 104 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால் தமிழ்நாட்டில் மருத்துவ உதவிகளை பெறலாம். இந்த உதவி எண்ணை தமிழ்நாடு அரசே அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டால் தமிழக அரசின் மருத்துவ சேவைகள் மனநல ஆலோசனை நோய் தொடர்பான சந்தேகங்கள் ரத்ததானம் உடல் உறுப்புகள் தொடர்பான விவரங்களை கேட்டுக் கொள்ளலாம்.

Fact Check
வெளியான செய்தி
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய திட்டம் ’பிளட் ஆன் 104’. அதாவது 104 என்ற எண்ணுக்குப் போன் செய்தால் ரத்தம் உங்களைத் தேடி வரும். ஒரு பாட்டில் ரூ. 450 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முடிவு
'BLOOD ON CALL 104' என்ற திட்டம் மகராஷ்டிரா மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு கைவிடப்பட்டது. தற்போது ரத்தம் கிடைக்கும் என்ற செய்தி போலியானது ஆகும்
ரேட்டிங்
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications