செல்வ மகள் சேமிப்புத் திட்டம்! ரூ.250 முதலீட்டில் மகளுக்கு லட்சாதிபதி கனவு! மத்திய அரசின் 8.2% வட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: செல்வ மகள் சேமிப்புத் திட்டம் பற்றின சர்ப்ரைஸ் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.. பெற்றோர்கள் தங்கள் வீட்டு மகள்களுக்காக, அரசுத் திட்டத்தில் முதலீடு செய்து வருவது சமூகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது... ஆம், பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் SSY எனப்படும் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் புதிய அப்டேட் ஒன்றை மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தற்போது வெளியிட்டுள்ளார்..

பெண் குழந்தைகளின் கல்வியையும், அவர்களின் கல்யாண செலவுகளையும் கவலையின்றி எதிர்கொள்வதற்காகவே, மத்திய அரசு கொண்டு வந்துள்ள மிகச்சிறந்த திட்டம்தான், "செல்வ மகள் சேமிப்புத் திட்டம்" (Sukanya Samriddhi Yojana).

Selva Magal

செல்வ மகள் சேமிப்புத் திட்டம் (Sukanya Samriddhi Yojana)

10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் இந்த திட்டத்தில் அக்கவுண்ட்டை கணக்கை தொடங்கலாம். குறைந்தபட்சம் ரூ. 250 முதல் அதிகபட்சம் ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். இப்போது இந்த திட்டத்திற்கு 8.2% வட்டி வழங்கப்படுவது, மற்ற எந்தவொரு பாதுகாப்பான சேமிப்புத் திட்டத்தை விடவும் அதிகம்.

அதுமட்டுமல்ல, முதலீடு செய்யும் தொகைக்கு வருமான வரி விலக்கும் கிடைப்பதால், நடுத்தர வர்க்கக் குடும்பங்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகவே உள்ளது

பெண் குழந்தைகளுக்கான வரப்பிரசாதம்.

இந்த திட்டத்தில் கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 15 ஆண்டுகளுக்கு மட்டுமே பணம் செலுத்தினால் போதும். ஆனால், 21 ஆண்டுகள் வரை அக்கவுண்ட் முதிர்ச்சியடையும் வரை அதற்கு வட்டி தொடர்ந்து சேரும். பெண் குழந்தைக்கு 18 வயது முடிந்ததும், உயர்கல்விக்காக கணக்கில் உள்ள தொகையில் பாதியை எடுத்துக்கொள்ளும் வசதியும் உண்டு. இந்த அளவுக்கு சிறப்பான திட்டத்தை, உங்கள் அருகிலுள்ள தபால் நிலையம் அல்லது வங்கியில் எளிதாகவே தொடங்கலாம்.

மத்திய அமைச்சர் தந்த சர்ப்ரைஸ்

இந்நிலையில், மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இந்த திட்டம் பற்றின சில முக்கிய தகவல்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், "இந்திய தபால் துறை வாயிலாக இதுவரை, 14.96 கோடி பேருக்கு, ஆதார் சேர்க்கைகள், திருத்தங்கள் செய்யப்பட்டு, வீட்டிற்கே ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. கடந்த 2017ம் ஆண்டு முதல், இந்தியா முழுதும் 454 பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்பட்டு, 2.2 கோடி பேரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு உள்ளன.

இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் பாங்க் - அதிரடி

அதேபோல், 2018ல் தொடங்கப்பட்ட, இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் பாங்க் வாயிலாக, 12.98 கோடி கணக்குகள், வாடிக்கையாளர்களின் வீட்டிலேயே தொடங்கப்பட்டுள்ளன. அதில், 49 சதவீதம் பெண்கள்; 77 சதவீதம் கிராமத்தினர் பயனாளிகளாக உள்ளனர். அதிலும் மக்கியமாக 2015ல் தொடங்கப்பட்ட, "சுகன்யா சம்ரித்தி" என்ற செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் இதுவரை, 3.88 கோடி பெண் குழந்தைகளுக்கு கணக்குகள் தொடங்கப்பட்டு, அவர்களின் எதிர்காலத்தை நம்பிக்கைக்கு உரியதாக ஆக்கியுள்ளது.

முதலீடு - வட்டி - பாதுகாப்பு

இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய வெற்றியே, சமூகத்தின் அடிமட்ட நிலையில் உள்ள மக்களையும் நிதி ரீதியாக உள்ளடக்கியிருப்பதுதான். பெண் குழந்தைகளின் கல்வியையும், அவர்களின் எதிர்காலத் தேவைகளையும் ஒரு சுமையாக பார்க்காமல், ஒரு முதலீடாகப் பார்க்கும் மனப்பான்மையை இந்தத் திட்டம் நம்முடைய குடும்பங்களிடையே உருவாக்கியுள்ளது.

முக்கியமாக, கிராமப்புறப் பகுதிகளில் வாழும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கக் குடும்பங்களுக்கு, பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதி செய்யத் தபால் துறை வழங்கியுள்ள இந்தச் சிறு துளி சேமிப்புத் திட்டம், ஒரு மிகப்பெரிய பொருளாதாரப் பாதுகாப்பு வளையமாக மாறியுள்ளது என்பதே இந்தச் சாதனையின் முக்கிய சிறப்பாகும்" என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+