கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றியை பாகிஸ்தான் கொடியுடன் கொண்டாடினார்களா? உண்மை என்ன

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில் அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, காங்கிரஸ் கட்சியினர் பாகிஸ்தான் கொடியுடன் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் பரவின. அது உண்மையா? என பார்க்கலாம்.

கர்நாடகத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் 24 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால் 16-வது சட்டமன்றத்தை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 10 ஆம் தேதி நடைபெற்றது.

Fact Check: Congress victory celebration with Pakistani flag in Karnataka? What is the truth?

ஆளும் பா.ஜனதா 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 207 தொகுதிகளிலும் போட்டியிட்டன. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

இதில், துவக்கத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வந்தது. நேரம் செல்ல செல்ல, காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்று வந்தன. ஒரு கட்டத்தில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை காங்கிரஸ் கட்சி சர்வ சாதாரணமாக தாண்டியது. தற்போது காங்கிரஸ் கட்சி 136 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி முகம் கண்டுள்ளது.

இதன் மூலம் அக்கட்சி 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடிக்கிறது. அதிகாரப்பூர்வமாக முடிவு அறிவிக்கப்பட்ட 202 தொகுதிகளில் காங்கிரஸ் 123 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வெற்றியை அக்கட்சியினர் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக கர்நாடகாவில் உற்சாகம் கரைபுரண்டுள்ளது.

இதனிடையே, கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றியின் மூலம் இந்துக்கள் பாதிக்கப்பட போகிறார்கள் என்றும் பாஜக தலைவர்கள் சிலர் கூறத் தொடங்கினர். குறிப்பாக தமிழக பாஜக மூத்த நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி தனது ட்விட்டரில், "கர்நாடகாவில் இந்துக்கள் பாதிக்கப்பட போகிறார்கள். அதிகார பசி கொண்ட காங்கிரஸ் தலைவர்கள் கர்நாடகாவில் ஜனநாயகத்தை அழித்து எல்லாவற்றிலும் ஊழலை செயல்படுத்துவார்கள். தேச விரோதிகளுக்கு ஆதரவான மாநிலமாக கர்நாடகா மாறும். கர்நாடகாவில் மோசமான நாட்கள் வரப்போகின்றன" என்றார்.

Fact Check: Congress victory celebration with Pakistani flag in Karnataka? What is the truth?

அதேபோல், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து பாகிஸ்தான் கொடியை ஏற்றி சிலர் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதாகவும் பாஜக ஆதரவாளர்கள் சிலர் ட்விட்டரில் பதிவிட்டதை காண முடிந்தது. இது தொடர்பாக சய் வெங்கட அஜய் என்பவர் தனது ட்விட்டரில் பாகிஸ்தான் கொடியை வைத்து காங்கிரஸ் வெற்றியை சிலர் கொண்டாடுவதாகவும் மதச்சார்பின்மை தேசத்தை அழிக்க போவதாகவும் பதிவிட்டு இருந்தார்.

ஆனால், சமூக வலைத்தளங்களில் பாகிஸ்தான் கொடி என பரப்பப்படும் இந்த வீடியோவில் உண்மை இல்லை என தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் நாட்டு தேசிய கொடியில் கொடிக்கம்பத்தை ஒட்டிய பகுதியில் வெள்ளை நிற பட்டை இருக்கும். ஆனால், வீடியோவில் பாகிஸ்தான் கொடி என சொல்லப்படும் கொடி அவ்வாறு இல்லை.

எனவே, இது பாகிஸ்தான் கொடி இல்லை என்பது உறுதியாக தெரிகிறது. அதாவது, இஸ்லாமிய அமைப்புகள் மட்டுமின்றி, அந்தந்த பகுதிகளில் இருக்கும் பள்ளிவாசல் ஜமாத்துகளும் தனியாக கொடிகளை பயன்படுத்துவது வழக்கம். குறிப்பாக கர்நாடகா, கேரளாவில் இதுபோன்ற கொடிகள் பயன்படுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. எனவே இது அதுபோன்ற ஒரு உள்ளூர் ஜமாத் அல்லது அமைப்பின் கொடியாக இருக்கலாம்.

Fact Check

வெளியான செய்தி

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதும் பாகிஸ்தான் கொடியுடன் சிலர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவி வருகிறது.

முடிவு

உண்மையில் அது பாகிஸ்தான் நாட்டு கொடி இல்லை. பள்ளிவாசல் ஜமாத்துகளும் தனியாக கொடிகளை பயன்படுத்துவது வழக்கம். அதுபோன்ற கொடியாக இருக்கலாம்.

ரேட்டிங்

Misleading
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+