Fact Check: என்னாது பெங்களூர் மழை வெள்ளத்தில் முதலை அடித்து வரப்பட்டதா? உண்மை என்ன?
பெங்களூர்: பெங்களூரில் பெய்து வரும் மழை வெள்ளத்தில் முதலை ஒன்று அடித்து வரப்பட்டதாக சமூகவலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால் அந்த வீடியோ பெங்களூரில் எடுக்கப்பட்டது இல்லையாம்.
கர்நாடகாவில் கடந்த சில தினங்களாக பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர பெங்களூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடை மழை பெயது வருகிறது.
தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனல் பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுவிட்டது. பெங்களூரின் மெஜஸ்டிக், சில்க்போர்டு உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

போக்குவரத்து நெரிசல்
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல மணி நேரம் காத்திருந்து வாகனங்கள் ஊர்ந்து சென்று வருகின்றன. தாழ்வான பகுதிகளில் உள்ள ஐடி ஊழியர்கள் எல்லாம் டிராக்டர், ஜேசிபி, படகுகளில் தங்கள் அலுவலகங்களுக்கு சென்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெல்லந்தூர் ஏரி முழுவதும் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.

ரிங் ரோடு பகுதி
அவுட்டர் ரிங் ரோடு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த பகுதிகளில் உள்ள நிறுவனங்களுக்கு ஊழியர்கள் வர இயலாததால் ரூ 225 கோடி இழப்பு ஏற்பட்டதாக அந்த பகுதி நிறுவனங்களின் சங்கத்தினர் புகார் கூறினார். மேலும் பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்டவைகளை சரி செய்து கொடுக்காவிட்டால் பெங்களூரை விட்டு வெளியேறுவோம் என கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

பெங்களூர்
பலர் தொழிலாளர்கள் பெங்களூரை விட்டு வெளியேறி தங்கள் ஊர்களுக்கு சென்று வருகிறார்கள். இந்த நிலையில் சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீரில் முதலை ஒன்று அடித்து வரப்பட்டதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதனால் பெங்களூர் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

உண்மை என்ன?
ஆனால் உண்மை என்ன என விசாரித்த போதுதான் அது பெங்களூர் இல்லை. மத்திய பிரதேசத்தில் மழை பெய்த போது அங்குதான் இந்த முதலை மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டிருந்தது தெரியவந்தது. அதாவது கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் மழை வெள்ளம் ஏற்பட்டது. இந்த மழையில்தான் அந்த முதலை அடித்து வரப்பட்டது. எனவே பெங்களூர் மழைக்கு முதலை அடித்து கொண்டு வரப்பட்டதாக கூறுவது தவறு.

Fact Check
வெளியான செய்தி
பெங்களூரில் சாலைகளில் தேங்கியுள்ள மழை வெள்ளத்தில் முதலை அடித்து வரப்பட்டது
முடிவு
மத்திய பிரதேசத்தில் மழை வெள்ளத்தின் போது அடித்து வரப்பட்ட முதலையை பெங்களூர் என வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
ரேட்டிங்
-
பெங்களூருவில் இப்படி ஒரு காதலியா? விடிய விடிய வாட்ஸ்-அப் வீடியோ கால்! பேரதிர்ச்சியில் ஐடி இன்ஜினீயர் -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
பெங்களூருவுடன் ஒப்பிடுவது தவறு.. பரந்தூர் விமான நிலையம் குறித்து பூவுலகின் நண்பர்கள் கருத்து -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications